வேலை நேரம் முடியப்போகிறது, நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என ஊழியர்களுக்கு நினைவூட்டுகிறது மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்த நிறுவனம்.
என்னதான் நமக்கு பணிநேரம் 8 மணி நேரம் என்று நிறுவனங்கள் நம்மிடம் கூறினாலும், 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்யும் நிலை தான் பல இடங்களில் இருக்கிறது. ஐடி ஊழியர்களுக்கு சொல்லவே வேண்டாம்.
ஒரு நாளின் பெரும்பகுதி அலுவலகத்திலேயே சென்று விடுகிறது. இதனை சரி செய்ய புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது மத்திய பிரதேசத்தை தலைமையிடமாக கொண்ட சாஃப்ட்கிரிட் என்ற ஐடி நிறுவனம் ஒன்று!
பணிநேரம் முடிந்த பின்னரும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ரிமைண்டர் மெசேஜ் ஒன்று அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்தியானது,
“வார்னிங், உங்கள் பணிநேரம் முடிந்தது. இன்னும் 10 நிமிடங்களில் உங்கள் கம்ப்யூட்டர் ஷட் டவுன் ஆகிவிடும். தயவு செய்து வீட்டிற்கு செல்லுங்கள்” என்பது தான்.
இந்த நினைவூட்டலின் ஸ்க்ரீன்ஷாட்டை அந்த நிறுவனத்தில் எச்ஆர் ஆக பணியாற்றும் பெண் ஒருவர் பகிர்ந்திருந்தார்.
தன்வி கெண்டெல்வால் என்ற அந்த பெண், “எனது நிறுவனம் என் Worklife Balanceஐ ஆதரிக்கிறது. இந்த சிறப்பு ரிமைண்டரானது, என் வேலை நேரம் முடிந்தவுடன், எனது டெஸ்க்டாப்பை அணைக்கிறது.”
இது விளையாட்டாக பகிரப்படும் கற்பனை பதிவல்ல, எங்கள் ஆஃபீஸின் நிஜ நிலவரம் இதுதான் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அந்நிறுவனம் தன் ஊழியர்களை தங்களது விடுமுறை நாட்களில், பணி நேரம் முடிவடைந்த பின்னர் இருக்கும் நேரங்களில் ஆஃபீஸ் சம்பந்தமான எந்த ஃபோன்கால்கள், மெசேஜ்களுக்கு, மின்னஞ்சல்கள் பதிலளிக்க வேண்டாம் என்பதையும் வற்புறுத்துகிறது.
இருப்பினும், நிறுவனத்தின் இந்த முயற்சி கலவையான வரவேற்பை தான் பெற்றிருக்கிறது. சிலர் இது நல்ல ஐடியா தான் என பாராட்டினர்.
ஆனால் ஒரு சிலரோ, இதனால் ஊழியர்களுக்கு அந்த அந்த நாளினுடைய பணிகளை சரியாக முடித்துவிடவேண்டும் என்கிற அழுத்தம் அதிகரித்துவிடும் எனவும் தெரிவித்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust