Maharashtra: ஒரே ஒரு மாணவன், ஒரே ஒரு டீச்சர் - ஒரு பள்ளியின் இறுதி அத்தியாயம்?

இந்த பள்ளியில் கார்த்திக் என்ற மாணவன் படிக்கிறான். இவன் மட்டும் தான் இந்த பள்ளியில் படிக்கிறான். மற்ற மாணவர்கள் யாரும் இந்த பள்ளியை தேர்ந்தெடுக்காத போதிலும், தினமும் நேரம் தவறாமல் பள்ளிக்கு சீருடையில், புத்தகப் பையுடன் வந்துவிடுகிறான் சிறுவன்.
Maharashtra: ஒரே ஒரு மாணவன், ஒரே ஒரு டீச்சர்
Maharashtra: ஒரே ஒரு மாணவன், ஒரே ஒரு டீச்சர் ட்விட்டர்
Published on

மகாராஷ்டிராவின் கிராமம் ஒன்றில் ஒரே ஒரு மாணவனுக்காக மட்டும் பள்ளிக்கு சென்று வருகிறார் ஆசிரியர் ஒருவர். அந்த ஒரு மாணவனுக்காக அந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவின் வாசிம் மாநகரத்தில் உள்ள கணேஷ்பூர் என்ற கிராமத்தில் ஜில்லா பரிஷத் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான குழந்தைகள் படிக்க வசதிகள் உள்ளன.

இந்த பள்ளியில் கார்த்திக் என்ற மாணவன் படிக்கிறான். இவன் மட்டும் தான் இந்த பள்ளியில் படிக்கிறான். மற்ற மாணவர்கள் யாரும் இந்த பள்ளியை தேர்ந்தெடுக்காத போதிலும், தினமும் நேரம் தவறாமல் பள்ளிக்கு சீருடையில், புத்தகப் பையுடன் வந்துவிடுகிறான் சிறுவன்.

இவன் தற்போது மூன்றாம் வகுப்பில் இருக்கிறான். இவனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு ஆசிரியரும் இங்கு வருகிறார். அந்த சிறுவனுக்காக தினமும் 12 கிலோமீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு வருகிறார் கிஷோர் மன்கர் என்ற அந்த ஆசிரியர்.

Maharashtra: ஒரே ஒரு மாணவன், ஒரே ஒரு டீச்சர்
இஸ்லாம் : 'தீவிரவாதி எனக் கூறிய ஆசிரியர்’ கேள்வியால் எதிர்க்கொண்ட மாணவன் - வைரல் வீடியோ

பள்ளிக்கு வந்த பிறகு, தேசிய கீதம் பாடிவிட்டு அந்நாளின் வகுப்பை தொடங்குகின்றனர். ஆசிரியர் கிஷோர் அனைத்து பாடங்களையும் இவனுக்கு சொல்லிக் கொடுக்கிறார். இதை தவிர, அங்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது

ஏ என் ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஆசிரியர், கடந்த இரண்டு வருடங்களாகவே இங்கு மாணவர் கார்த்திக் மட்டும் தான் படித்து வருவதாக தெரிவித்தார். கணேஷ்பூர் கிராமத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே 150 தான். இங்கு இந்த பள்ளி ஒன்று மட்டும் தான் இருக்கிறது.

அரசு பள்ளிகளை பெற்றோரும் மாணவர்களும் தவிர்த்து வரும் இந்த காலக்கட்டத்தில், மாணவன் கார்த்திக் மனம் தளராமல் தினமும் பள்ளிக்கு வந்து செல்வது, கல்வியின் மீது அவனது ஈடுபாட்டை குறிப்பதாக ஆசிரியர் கிஷோர் தெரிவித்தார்.

மேலும், ஒரே ஒரு மாணவன் தான் இருக்கிறான் என்று எப்போதும் வருத்தமடைந்ததில்லை என்றவர், தினமும் முழு ஆர்வத்துடனே நான் அவனுக்கு பாடம் எடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

Maharashtra: ஒரே ஒரு மாணவன், ஒரே ஒரு டீச்சர்
'பழங்குடி மாணவர்களின் Master ' - 2 ரூபாய்க்கு டியூஷன் எடுக்கும் 78 வயது ஆசிரியர் சுஜீத்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com