"ஃபோன் லேப்டாப்பை தூக்கி வீசுங்கள்" தூக்கமின்மைக்கு ஆனந்த் மஹிந்திரா மனைவியின் அட்வைஸ்!

எரிக்கின் ட்வீட்டில் மருத்தவரின் பிரிஸ்கிரிப்ஷன் ஒன்றின் புகைப்படம் இருந்தது. தூக்கமின்மையால் அவதிப்படும் ஆனந்த் என்பவருக்கு சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
"ஃபோன் லேப்டாப்பை தூக்கி வீசுங்கள்" தூக்கமின்மைக்கு ஆனந்த் மஹிந்திரா மனைவியின் அட்வைஸ்!
"ஃபோன் லேப்டாப்பை தூக்கி வீசுங்கள்" தூக்கமின்மைக்கு ஆனந்த் மஹிந்திரா மனைவியின் அட்வைஸ்!Twitter

மஹிந்திரா குழுமத்தின் தலைவரும் இந்திய தொழிலதிபர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திர தனது சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

இவர் பகிரும் வீடியோக்கள், பகிர்வுகள் அனைத்தும், ஆச்சரியமூட்டும் வகையிலும், சிந்திக்கவைக்கும் வகையிலும் இருக்கும். ஆனந்த் மஹிந்திரா இன்று தன் டிவிட்டர் பக்கத்தில் நார்வேவை சேர்ந்த எரிக் சால்ஹைம் என்பவர் பகிர்ந்திருந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருந்தார்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திராTwitter

எரிக்கின் ட்வீட்டில் மருத்தவரின் பிரிஸ்கிரிப்ஷன் ஒன்றின் புகைப்படம் இருந்தது. அதில், தூக்கமின்மையால் அவதிப்படும் ஆனந்த் என்பவருக்கு சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மருத்துவர் ஆனந்திடம் லேப்டாப் மற்றும் ஃபோனை தூக்கிவீசிவிடுஙள் என பரிந்துரைத்திருந்தார்.

இந்த பதிவை ரீட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா, “இதை நீங்கள் எனக்காவே கூறியுள்ளது போல தெரிகிறது எரிக். இருப்பினும் என் மனைவி இந்த பரிந்துரையை என்னிடம் பல வருடங்களுக்கு முன்னரே கூறினார். ஆனால் அவரிடம் மருத்துவ பட்டப்படிப்பு இல்லை” என்று தலைப்பிட்டிருந்தார்

"ஃபோன் லேப்டாப்பை தூக்கி வீசுங்கள்" தூக்கமின்மைக்கு ஆனந்த் மஹிந்திரா மனைவியின் அட்வைஸ்!
"கடைசியாக வந்துட்டேன்" : ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த போஸ்ட் - திகைத்த இணையவாசிகள்!

இந்த ட்வீட்டுக்கு கிட்ட தட்ட 4000 லைக்ஸ் மற்றும் கமெண்ட்களும் வந்திருந்தன. இணையவாசிகள் பலரும் இந்த சிகிச்சை நிச்சயம் உதவும் எனவும், இதை பின்பற்றிய பலரும் நன்றாக உறங்குவதாகவும் தெரிவித்தனர்.

ஒருவர் அதில் வேடிக்கையாக, “இதை எல்லா ‘இந்திய மனைவிகளும்’ அவரவர் கணவர்களுக்கு பரிந்துரைப்பார்கள்” என்று கமெண்ட் செய்திருந்தார்

"ஃபோன் லேப்டாப்பை தூக்கி வீசுங்கள்" தூக்கமின்மைக்கு ஆனந்த் மஹிந்திரா மனைவியின் அட்வைஸ்!
"எனக்கு பயமா இருக்கு"ஆனந்த் மஹிந்திராவை பதற வைத்த லடாக் வழித்தடம் - நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com