Summer Tips: 1 மணிநேரம் ஏசி ஓடினால் எவ்வளவு கரண்ட் பில் ஆகும்? எப்படி குறைக்கலாம்?

ஏசியை அதிக நேரம் பயன்படுத்தியும் மின் கட்டணம் குறைவாக வரவேண்டும் என்றால் அதற்கு சில டிப்ஸ்கள் உள்ளன. ஆனால் அதற்கு முன்பு ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் எவ்வளவு மின்சார கட்டணம் வரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
 tips to reduce AC electricity bill this summer
tips to reduce AC electricity bill this summer canva
Published on

கோடை காலம் தொடங்கிவிட்டது. வாட்டி வதைக்கும் கோடை அனலில் இருந்து தப்பிக்க நம்மில் பலரும் தற்போது ஈசியை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இதனால் மின் கட்டணமும் அதிக அளவில் ஏறுகிறது.

ஏசியை அதிக நேரம் பயன்படுத்தியும் மின் கட்டணம் குறைவாக வரவேண்டும் என்றால் அதற்கு சில டிப்ஸ்கள் உள்ளன. ஆனால் அதற்கு முன்பு ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் எவ்வளவு மின்சார கட்டணம் வரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ஏசியில் பல வகைகள் உண்டு. வீடுகளில் பெரும்பாலும் 1 டன் அல்லது 1.5 டன் தான் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் 24 மணி நேரத்திற்கு 1 டன் ஏசியானது 1000 வாட்ஸும் 1.5 டன் ஏசி 1500 வாட்ஸும் மின்சாரத்தை செலவழிக்கிறது.

அதுவும் 5 ஸ்டார் மதிப்பீடு கொண்ட ஏசியாக இருந்தால் மட்டுமே மேலே சொன்ன அளவு மின்சாரம் செலவழியும். இல்லையென்றால் கூடுதல் அளவில் தான் மின்சாரம் செலவாகும்.

5 ஸ்டார் மதிப்பீடு கொண்ட 1.5 டன் ஏசியை ஒரு நாளைக்கு 8 மணிநேரம் பயன்படுத்துகிறோம் என வைத்துக் கொண்டால் மாதத்திற்கு மொத்தம் 360 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படும். ஒரு யூனிட் விலை ரூ.7 எனும் பட்சத்தில் 360 யூனிட்களுக்கு மாதம் ரூ.2500 மின் கட்டணம் செலுத்துவோம்.

இதிலும் ஏசியை எந்த வெப்ப நிலையில் வைத்து பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்தும் மின் கட்டணம் மாறுபடும். ஒருவர் ஏசியை 16 டிகிரியில் பயன்படுத்துகிறார், இன்னொருவர் 26-ல் வைத்து பயன்படுத்துகிறார் என்றால் அதில் 16-ல் பயன்படுத்தியவருக்கு அதிக மின்சாரம் செலவாகும்.

எனவே ஏசியை முடிந்தவரை அதிக வெப்பநிலையில் வைத்தே பயன்படுத்துங்கள். 24 முதல் 26-ல் வைத்துவிட்டு இரவு முழுக்க ஓடினால் கூட மின்சாரம் குறைவாகவே செலவாகும்.

எனவே ஏசியை முடிந்தவரை அதிக வெப்பநிலையில் வைத்தே பயன்படுத்துங்கள். 24 முதல் 26-ல் வைத்துவிட்டு இரவு முழுக்க ஓடினால் கூட மின்சாரம் குறைவாகவே செலவாகும்.

 tips to reduce AC electricity bill this summer
வீட்டில் இருக்கும் ஏசி தீப்பிடிப்பதற்கான 4 காரணங்கள் இவைதான் - எப்படி தடுக்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com