டெல்லி தீ விபத்து : 30 பேர் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

டெல்லி தீ விபத்தில் கட்டிட உரிமையாளர்களான வருண் கோயல் மற்றும் சதீஷ் கோயல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கட்டிடத்தில் தொழிற்சாலை செயல்படுவதற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Delhi fire accident
Delhi fire accidentTwitter
Published on

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே அமைந்திருந்த 4 மாடி வணிக கட்டிடத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் இதுவரை மொத்தம் 30 பேர் உயிரிழந்து உள்ளனர், 12 பேர் காயமடைந்து உள்ளனர். 70-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிடத்திலிருந்து வெளியேற ஒரே ஒரு வழி மட்டுமே இருப்பதால் இந்த தீ விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் எனக் கூறப்படுகிறது. 29 பேரைக் காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

டெல்லி தீ விபத்தில் கட்டிட உரிமையாளர்களான வருண் கோயல் மற்றும் சதீஷ் கோயல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கட்டிடத்தில் தொழிற்சாலை செயல்படுவதற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

PM modi
PM modiTwitter

இதற்கிடையில் தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், டெல்லி விபத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com