முகேஷ் அம்பானி சம்பளம் என்ன? அவரை விட அதிக சம்பளம் வாங்கும் சி இ ஓ யார்? - சுவாரஸ்ய தகவல்

நன்றாகப் படித்து, அதிக சம்பளத்துக்கு நல்ல வேலைக்குப் போக வேண்டும், என்பது இந்தியக் குடும்பங்களின் தாரகமந்திரம் என்றால் அது மிகை இல்லை. நம்மைப் பொறுத்தவரை மாத சம்பளம் லட்சத்தில் இருந்தால், அவர்கள் வாழ்கையில் செட்டிலாகிவிட்டார்கள்.
Mukesh Ambani
Mukesh AmbaniTwitter

இந்தியர்களைப் பொறுத்தவரை சம்பளம் என்கிற சொல், சிறுவயதிலிருந்தே காதில் விழுந்து கொண்டிருக்கும் ஒன்று. ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ... வீட்டில் எதைக் கேட்டாலும் அப்பாவுக்கு சம்பளம் இவ்வளவு தான், அடுத்த மாசம் பாத்துக்கலாம் என்கிற பதிலை நிச்சயம் நம்மில் பலரும் கடந்து வந்திருப்போம்.

அப்பா ஐ ஏ எஸ் அதிகாரியோ, சாதாரண அலுவலக உதவியாளரோ யாராக இருந்தாலும் அவர் மாத சம்பளக்காரர் என்பதை இந்திய நடுத்தர குடும்ப வீட்டில் சொல்லிச் சொல்லி வளர்ப்பர். மேலும் நன்றாகப் படித்து, அதிக சம்பளத்துக்கு நல்ல வேலைக்குப் போக வேண்டும், என்பது இந்தியக் குடும்பங்களின் தாரகமந்திரம் என்றால் அது மிகை இல்லை.

நம்மைப் பொறுத்தவரை மாத சம்பளம் லட்சத்தில் இருந்தால், அவர்கள் வாழ்கையில் செட்டிலாகிவிட்டார்கள். கோடியை எல்லாம் தொட்டுவிட்டால் அவர்களின் அடுத்த தலைமுறையும் செட்டிலாகிவிட்டது என்போம்.

ஆனால் இங்கு சில முதன்மைச் செயல் அதிகாரிகள் இந்திய சாமானியர்கள் வாங்குவதை விட, அவர்கள் நிறுவன ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தை விடப் பல மடங்கு அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். அதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

Mukesh Ambani
Mukesh AmbaniTwitter

முகேஷ் அம்பானி

ஆசியாவின் நம்பர் 2 பணக்காரர் (இப்போதைக்கு கெளதம் அதானிக்கு முதலிடம்), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்கிற சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி ஆளும் நபர், ஓராண்டு காலத்துக்கு 15 கோடி ரூபாயை சம்பளம், அவருக்கான சலுகைகள், கமிஷன் என எல்லாவற்றையும் சேர்த்து வாங்குகிறார்.

2008 - 09 காலத்திலிருந்தே இது தான் அவரது சம்பளம் என்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை. கடந்த 2020 - 21 நிதி ஆண்டில், கொரோனா பெருந்தொற்று காரணமாக தனக்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை என சில வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

SN subrahmanyan
SN subrahmanyan

எஸ் என் சுப்ரமணியன்

இவர் பெயரை வெகு ஜன மக்கள் அதிகம் கேள்விப்படாமல் இருக்கலாம். ஆனால் பங்குச் சந்தையில் இருப்பவர்கள் மற்றும் கார்ப்பரேட் உலகில் இருப்பவர்களுக்கு அதிக பரிச்சயம் தேவை இல்லை.

லார்சன் அண்ட் டியூப்ரோ என்கிற இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான மற்றும் ஐடி நிறுவன சாம்ராஜ்ஜியத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் இவர்.

2019 - 20 நிதி ஆண்டில் 27.17 கோடி ரூபாயை சம்பளமாகப் (சம்பளம், கமிஷன், சலுகை போன்றவைகளும் அடக்கம்) பெற்றார். அடுத்த ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தன் சம்பளத்தில் 43% குறைவாகப் பெறுவதாக எகனாமிக் டைம்ஸில் செய்தி வெளியானது.

C. P. Gurnani
C. P. Gurnani

சி பி குர்னானி - டெக் மஹிந்திரா

டி சி எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐடி ஜாம்பவான்களுக்கு மத்தியில், மஹிந்திரா நிறுவனமும் ஐடி துறையில் தன்னை அப்டேட் செய்து கொண்டு கடும் போட்டியாளராக வளர கிட்டத்தட்ட கடந்த இரு தசாப்த காலமாக உதவியவர் சி பி குர்னானி. கடந்த 13 ஆண்டுகளாக டெக் மஹிந்திராவின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.

2020 - 21 நிதி ஆண்டில் 22 கோடி ரூபாயை சம்பளமாகப் (சம்பளம், கமிஷன், சலுகைகள் அனைத்தும் அடக்கம்) பெற்றார். இது அதற்கு முந்தைய ஆண்டு பெற்றதை விட 33% குறைவு.

Mukesh Ambani
கூகுள் நிறுவனம் எப்படி பணம் ஈட்டுகிறது தெரியுமா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்!
Rajesh Gopinathan
Rajesh GopinathanTwitter

ராஜேஷ் கோபிநாதன்

டி சி எஸ் என்கிற டாடா குழும மணி மகுடத்தின் முதன்மைச் செயல் அதிகாரி. 2025ஆம் ஆண்டுக்குள், ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதற்கு புது வடிவம் கொடுப்போம் என இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டிகளில் பிரபலமடைந்தார்.

இவர் கடந்த நிதி ஆண்டில் 25.8 கோடி ருபாயை சம்பளமாகப் (சம்பளம், கமிஷன், சலுகைகள் அனைத்தும் அடக்கம்) பெற்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது.

Sunil Bharti Mitta
Sunil Bharti MittaTwitter

சுனில் மித்தல்

ஜியோவின் கடுமையான போட்டியை எதிர்த்து கம்பீரமாக வியாபாரம் செய்து வரும் ஒரே இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் முதன்மைச் செயல் அதிகாரிதான் சுனில் மித்தல்.

2020 நிதி ஆண்டில் சம்பளம், கமிஷன், சலுகை போன்றவை எல்லாம் சேர்த்து 30.13 கோடி ரூபாயைப் பெற்றார் என்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை.

Mukesh Ambani
10 ஆண்டுகளில் 54% சரிந்த இந்திய ரூபாய் மதிப்பு - கரன்சி சரிவின் கோர முகம் என்ன?

சித்தார்த்தா லால்

ராயல் என்ஃபீல்ட் பைக்கை அறியாத இந்தியர்கள், இளைஞர்கள் உண்டா. அது ஈஷர் மோட்டார்ஸ் என்கிற நிறுவனத்தால் தான் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்தான் சித்தார்த்தா லால். இவர் சம்பளம், கமிஷன், சலுகை, ஊக்கத் தொகை எல்லாம் சேர்த்து கடந்த 2020 - 21 நிதி ஆண்டுக்கு 21.1 கோடி ரூபாயைப் பெற்றார் என்கிறது எகனாமிக் டைம்ஸ்.

Mukesh Ambani
டாடா குழுமம் வரலாறு : ஏன் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாடா இல்லை ? | நிறைவுப் பகுதி

சஞ்ஜீவ் பூரி

சன்ஃபீஸ்ட் பிஸ்கெட், ஆஷிர்வாத் ஆட்டா, கோல்ட் ஃப்ளேக் சிகரெட், யிப்பி நூடுல்ஸ்... போன்ற பொருட்களைத் தயாரித்து விற்கும் நிறுவனம்தான் ஐடிசி. அந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் பூரி 2020 - 21 நிதி ஆண்டில் 10 கோடி ரூபாயை சம்பளம், கமிஷன், சலுகையாகப் பெற்றுள்ளார்.

Mukesh Ambani
4 நாட்கள், காணாமல் போன 24 லட்சம் கோடி ரூபாய் - எங்கு? என்ன?
N Chandrasekaran
N ChandrasekaranTwitter

என் சந்திரசேகரன்

டாடா குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வரும் சந்திரசேகரனுக்கு பெரிய அறிமுகம் தேவை இல்லை. சைரஸ் மிஸ்திரியை டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக்கிய பிறகு, ரத்தன் டாடாவே நேரடியாகத் தலையிட்டு, டாடா இயக்குநர் குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்தான் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன். 2020 நிதியாண்டில் சம்பளம், கமிஷன், சலுகை என எல்லாம் சேர்த்து 58 கோடி ரூபாய் பெற்றார்.

Salil Parekh
Salil ParekhTwitter

சலில் பரேக்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் சலீல் பரேக், இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரிகளில் அதிக சம்பளம், கமிஷன், சலுகை என எல்லாம் சேர்த்து அதிகப் பணம் பெறவிருக்கிறார்.

2021 - 22 நிதி ஆண்டில் 42.5 கோடி ரூபாய் பெற்றவர், அடுத்த நிதியாண்டில் 79.75 கோடி ரூபாயைப் பெறவிருக்கிறார் என சில வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mukesh Ambani
Vanitha vijayakumar : வனிதாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com