மீண்டும் செயல்படும் சிம்லா - கல்கா: இந்த அழகிய ரயில்பாதையில் ஏன் நிச்சயம் பயணிக்கணும்?

96 கிமீ இயக்கப்படும் இந்த ரயில், 18 நிலையங்கள், 102 சுரங்கங்கள் மற்றும் 988 பாலங்கள் வழியாக செல்கிறது. இது சுற்றுல பயணிகளுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு சிம்லா-கல்கா ரயில் சேவை மீண்டும் தொடங்குவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக உள்ளனர்.
Train services resume on Kalka-Shimla heritage train line till Tara Devi after over 3 months
Train services resume on Kalka-Shimla heritage train line till Tara Devi after over 3 monthsTwitter

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சிம்லா-கல்கா ரயில் சேவை மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது

120 ஆண்டுகள் பழமையான கல்கா-சிம்லா ரயில் சேவை கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்தது.

ஆகஸ்ட் 14 அன்று, சம்மர்ஹில் ரயில் பாலம் இடிந்து விழுந்தது, மேலும் சம்மர்ஹில் மற்றும் சோலன் இடையே பல இடங்களில் பாதைகள் சேதமடைந்தன.

இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு சிம்லா-கல்கா ரயில் சேவை மீண்டும் தொடங்குகிறது

இரண்டு ரயில்கள் தாரா தேவிக்கு வந்து சேர்ந்தது, இரண்டு சிம்லாவிலிருந்து கலக் வரை சென்றது, மேலும் இந்த ரயில்கள் சம்மர்ஹில் ரயில் பாலம் சரிசெய்யப்படும் வரை தாரா தேவியிலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள மலைகளின் அழகிய காட்சியை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர். முதல் ரயில் சேவை நவம்பர் 9, 1903 இல் சிம்லாவை வந்தடைந்தது, 1970 வரை நீராவி என்ஜின் ரயில்கள் இயக்கப்பட்டன.

Train services resume on Kalka-Shimla heritage train line till Tara Devi after over 3 months
உலகின் மிகவும் விசித்திரமான ரயில் பாதைகள் - எங்கே இருக்கிறது தெரியுமா?

1970க்குப் பிறகு அனைத்து ரயில்களும் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டன.

கல்கா சிம்லா ரயில் பாதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பாதையாக 2008 இல் அறிவிக்கப்பட்டது.

96 கிமீ இயக்கப்படும் இந்த ரயில், 18 நிலையங்கள், 102 சுரங்கங்கள் மற்றும் 988 பாலங்கள் வழியாக செல்கிறது. இது சுற்றுல பயணிகளுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கிறது. மூன்று மாதங்களுக்குப் பிறகு சிம்லா-கல்கா ரயில் சேவை மீண்டும் தொடங்குவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக உள்ளனர்.

Train services resume on Kalka-Shimla heritage train line till Tara Devi after over 3 months
ஊட்டி: 208 வளைவுகள், 250 பாலங்கள் கடக்கும் மலை ரயில் - இந்தியாவின் slowest train இது தான்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com