வெறும் 10,000 ரூபாய் இருந்தா போதும்! இந்தியாவின் இந்த இடங்களை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம்

10,000 ரூபாய் இருந்தால், இந்தியாவின் பல்வேறு இடங்களை நாம் சுற்றிப்பார்த்துவிடலாம். அப்படியான இடங்களை தான் இங்கு தொகுத்துள்ளோம்.
Travel gift ideas for women who love to explore
Travel gift ideas for women who love to exploreTwitter

பயணங்களை முடிந்தளவு எளிமையாக்க, எகனாமிக்கலாக மாற்ற தான் நாம் நினைப்போம். மன அமைதிக்காக சென்று வரும் பயணத்தில், அது முடிந்த பிறகு இவ்வளவு செலவாகிவிட்டதா என்று எண்ணி மன அமைதியை இழப்பதை விட, நம் பட்ஜெட்டை சரிபார்த்து, அதற்குள் நம் ட்ரிப்பை முடிக்கலாம்.

வெளியூருக்கு இரண்டு நாள் குடும்பமாக சென்று வருகிறோம் என்றால், குறைந்தது 10,000 ரூபாய் ஆகிவிடும்.

இந்த 10,000 ரூபாய் இருந்தால், இந்தியாவின் பல்வேறு இடங்களை நாம் சுற்றிப்பார்த்துவிடலாம். அப்படியான இடங்களை தான் இங்கு தொகுத்துள்ளோம்.

ஸ்பிதி பள்ளத்தாக்கு

பாரம்பரியத்தை பறைச்சாற்றும் பழங்காலத்து மடங்களும், பரந்து விரிந்த பனிப்பொழியும் நிலப்பரப்பும் ஸ்பிதி பள்ளத்தாக்கின் அழகியல்கள். தாபோ மற்றும் தன்கோர் மடாலயங்கள் மிகவும் பிரபலமானவை.

மேலும் இங்குள்ள சந்திரதல் ஏரி டிரெக்கிங்கிற்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறது.

ஸ்பிட்டி பள்ளத்தாக்குக்கு ஆண்டு முழுவதும் பயணம் செய்யலாம். ஒரே ஆண்டில் பல முறை கூட பயணம் செய்யலாம். ஏனென்றால் ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் உணர்வையும் வழங்கும் அற்புத தலம் அது.

நம் பட்ஜெட் பயனத்திற்கு ஏற்ப இங்கு பயணிக்க ரயில்கள் தோதுவாக இருக்கும்.

மாதெரன், மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த அழகிய மலைப்பிரதேசம் நமக்கு மாசற்ற காற்றினை சுவாசிக்க வழங்குகிறது.

ஹைக்கிங், டிரெக்கிங் செய்ய அழகிய வழிப்பாதைகள், வியூபாயிண்ட்கள், பசுமையான நிலப்பரப்புகள் மன அமைதியை தரவல்லது.

சார்லோட் ஏரி மற்றும் லூயிசா பாயிண்ட் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.

Travel gift ideas for women who love to explore
Kerala: ’ஏழைகளின் ஊட்டி’ Nelliyampathy மலைகள் குறித்து தெரியுமா?

நுப்ரா பள்ளத்தாக்கு, லடாக்

பைக் பிரியர்களின் ஆஸ்தான டெஸ்டினேஷனாக இருக்கும் லடாக், இந்தியாவின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று.

இங்கு நுப்ரா என்ற பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. மணல் திட்டுகள் (sand dunes), இரட்டை கூம்பு கொண்ட ஒட்டங்களுக்காக அறியப்படுகிறது இந்த பள்ளத்தாக்கு.

இங்கு செல்ல கர்துங் லா கணவாயை கடக்கவேண்டும். இது உலகின் வாகனங்கள் செல்லக்கூடிய மிகப்பெரிய கணவாய்களில் ஒன்று.

பார்வையாளர்கள் டிஸ்கிட் மடாலயம் மற்றும் பனாமிக்கில் உள்ள வெப்ப நீரூற்றுகளை கண்டுகளிக்கலாம்.

கஜ்ஜியார், இமாச்சல பிரதேசம்

இந்த இடத்தை இந்தியாவில் இருக்கும் மினி ஸ்விட்சர்லாந்து என்கின்றனர், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த இடம் கண்கவர் இயற்கை வளத்தை கொண்டுள்ளது.

கஜ்ஜி நாக் கோவில் மற்றும் சமேரா ஏரி நிச்சயம் பார்க்கவேண்டிய இடங்களாகும்

Travel gift ideas for women who love to explore
Lovedale: ஊட்டியில் மறைந்திருக்கும் இந்த சிறிய நகரம் - குடும்பத்துடன் ட்ரிப் செல்ல தயாரா?

கௌசானி, உத்தராகண்ட்

இமயமலையின் அழகை கண்டு ரசிக்க ஒரு சிறந்த தலம் இந்த கௌசானி. இங்கிருந்து நந்தா தேவி மலை மற்றும் திரிசூலம் ஆகிய இடங்களை பார்க்கலாம். ஹைக்கிங் செய்ய விரும்புபவர்களுக்கு இது சிறந்த இடம். இயற்கை ஆர்வலராக நீங்கள் இருந்தால், கௌசானி நிச்சயம் பார்க்கவேண்டிய இடமாகும்.

மகாத்மா காந்தி ஒரு முறை இங்கு வந்திருந்தபோது தங்கியிருந்த அனசக்தி ஆசிரமம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும்

தவாங், அருணாச்சல பிரதேசம்

அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட தவாங்கில் தவாங் மடாலயம் அமைந்துள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய புத்த மடாலயமாகும்.

Travel gift ideas for women who love to explore
சென்னையில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் இவைதான்! சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com