மஹுவா மொய்த்ரா: சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடிய எம்.பி - வைரலாகும் புகைப்படங்கள்

மஹுவா மொய்த்ரா,சன்கிளாஸ் மாட்டிக்கொண்டு கால்பந்து மைதானத்தில் களமிறங்கி விளையாடினார்.
மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராTwitter
Published on

கூலிங் கிளாஸ், சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடும் எம்.பி மஹுவா மொய்த்ராவின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா.

இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை முன்வைத்து சர்ச்சையில் சிக்குவதுண்டு.

இந்நிலையில் சேலை அணிந்து கொண்டு கால்பந்து விளையாடும் எம்.பி மஹுவா மொய்த்ராவின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணாநகர் எம்பி கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. அதில் பங்கேற்ற மஹுவா மொய்த்ரா, சன்கிளாஸ் மாட்டிக்கொண்டு கால்பந்து மைதானத்தில் களமிறங்கி விளையாடினார்.

இது தொடர்பான புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதனை "வேடிக்கையான தருணங்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

மஹுவா மொய்த்ரா
காளி தேவி சர்ச்சை : அமெரிக்க வங்கி டூ பா.ஜ.க எதிர்ப்பு அரசியல் - யார் இந்த மஹ்வா மொய்த்ரா?

இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் படுவைரலாக பார்க்கப்பட்டதுடன் பகிரப்பட்டு வருகிறது. மஹுவா மொய்த்ரா கால்பந்து விளையாடுவது இது முதல் முறையல்ல.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் விளையாட்டை மேம்படுத்துவதற்காக மேற்கு வங்கம் முழுவதும் கால்பந்து போட்டிகளை ஏற்பாடு செய்தபோதும் அவர் கால்பந்து விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா : “கோமியம் குடித்து விட்டு தயாராக இருங்கள்” - பாஜகவினருக்கு சவால்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com