

ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்தியாவில் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் இரண்டு நாட்களுக்குப் பெண்கள் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்றும் எதிர்காலத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணத் திட்டம் என அறிவித்திருந்தார்.
ஆகஸ்ட் 10 இரவு 12 மணி முதல், 12 ஆகஸ்ட் இரவு 12 மணி வரை பெண்களுக்கு இந்த இலவச பயணம் அமலில் இருக்கும். அதன் பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணத் திட்டம் அமலுக்கு வரும் என்றும் ஆதித்தியநாத் தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேசத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி இலவச திட்டங்களால் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்து ஏற்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டு கருத்துகளுக்கும் உள்ள முரண்பாட்டின் காரணமாக டிவிட்டரில், YogiopposesModi என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust