இனி அலுவலகத்துக்கு லீவு எடுக்காமல் போனால் இப்படி ஒரு வரிச்சலுகையா?

தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், லீவ் என்கேஷ்மெண்ட் தொகைக்கு வரி செலுத்துவதற்கு பயந்து, விடுப்பை எடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் விடுப்பை எடுக்க வேண்டியத் தேவையில்லை. - என்ன சொல்கிறது பட்ஜெட்
Working Man  (Representational)
Working Man (Representational)Twitter
Published on

இந்திய ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர மக்கள், அன்றாட பிழைப்பை நம்பி வாழும் மக்கள்… என பல தரப்பினருக்கும் பல்வேறு கோரிக்கைகள் இருக்கும். பல நேரங்களில் இவர்கள் எதிர்பார்ப்பதில் பல விஷயங்கள் நிறைவேற்றப்படாது.

சில நேரங்களில் யாருமே எதிர்பார்க்காமல் மேற்கூறிய நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு உதவும் வகையில் ஒரு சில அறிவிப்புகள் வரும். அப்படி இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட்டில் இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் அவருக்கு வழங்கப்படும் விடுப்பு நாட்களை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அதில் குறிப்பிட்ட நாட்கள் அடுத்த ஆண்டிற்கு கேரி ஃபார்வேர்ட் செய்யப்படும். சில பல ஆண்டுகள் அதே நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு ஓய்வு பெறும்போது அல்லது வேறு ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு மாறும் போது இந்த விடுப்பு நாட்களைப் பயன்படுத்தாமல் இருந்ததற்காக லீவ் என்கேஷ்மெண்ட் என்கிற பெயரில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பணம் வழங்கப்படும்.

Working Man  (Representational)
இந்திய பட்ஜெட் 2023 : மத்திய அரசுக்கு பணம் எப்படி வருகிறது? எங்கே செலவழிக்கப்படுகிறது?

இப்படி அரசு சாரா மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஓய்வு பெறும் (Retirement) போது அவர்களுக்கு வழங்கப்படும் லீவ் என்கேஷ்மண்ட் தொகையில் மூன்று லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை இருந்து வந்தது.

இந்த தொகை கிட்டத்தட்ட 2002 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் எவராலும் அறிவிக்கப்படவில்லை. இப்படி ஒரு விதி அறிவிக்கப்பட்ட போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அதிகபட்ச அடிப்படை ஊதியமே மாதம் 30,000 ரூபாயாக இருந்தது.

இப்போது இந்த தொகை 25 லட்சமாக உயர்த்த, இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்மொழிந்திருக்கிறார்.

Working Man  (Representational)
நிர்மலா சீதாராமன் : பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் குறித்து தெரியுமா?

இந்த புதிய அறிவிப்பு அமலுக்கு வந்தால், தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், லீவ் என்கேஷ்மெண்ட் தொகைக்கு வரி செலுத்துவதற்கு பயந்து, விடுப்பை எடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் விடுப்பை எடுக்க வேண்டியத் தேவையில்லை.

லீவ் என்கேஷ்ட்மெண்டாக கையில் கிடைக்கும் பணத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகைப் பெறலாம் என எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

Working Man  (Representational)
Meesho: ஊழியர்களுக்கு 11 நாள் லீவ் கொடுத்த நிறுவனம் - இது தான் காரணமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com