”கொஞ்ச நாட்களுக்கு மட்டும் மாப்பிளை வேண்டும்” திருமண விளம்பரத்தால் அலறிய இணையம்

முதல் திருமணம் தொடங்கி, வயது, இரண்டாவது திருமணம், சாதி, வருமானம், உயரம், நிறம் வரையில் விளம்பரம் கொடுப்பவர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை தெளிவாக குறிப்பிடுவார்கள்.
”கொஞ்ச நாட்களுக்கு மட்டும் மாப்பிளை வேண்டும்” திருமண விளம்பரத்தால் அலறிய இணையம்
”கொஞ்ச நாட்களுக்கு மட்டும் மாப்பிளை வேண்டும்” திருமண விளம்பரத்தால் அலறிய இணையம்ட்விட்டர்
Published on

சமீபத்தில் வெளியான திருமணம் தொடர்பான விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு மணமகனோ, மணமகளோ தேவை என்று பல ஆண்டுகளாகவே நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

முதல் திருமணம் தொடங்கி, வயது, இரண்டாவது திருமணம், சாதி, வருமானம், உயரம், நிறம் வரையில் விளம்பரம் கொடுப்பவர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை தெளிவாக குறிப்பிடுவார்கள்.

அப்படி, சமீபத்தில் மணமகன் தேவை என வெளியான திருமண விளம்பரம் ஒன்று இணையத்தை கலக்கியுள்ளது.

வெளியான அந்த விளம்பரத்தில், “வசதியான குடும்பத்தில் பிறந்த, மும்பையை சேர்ந்த பெண்ணுக்கு மணமகன் தேவை குறைந்த கால திருமண வாழ்க்கைக்கு” என்று இருந்தது அந்த விளம்பரம்.

மணமகள் விவாகரத்தான பிராமண வீட்டு பெண். படித்தவர், 1989, 5’7 அடி உயரம், சொந்தமாக தொழில் செய்கிறார் என்பதும் குறிப்பிட்டிருந்தது.

”கொஞ்ச நாட்களுக்கு மட்டும் மாப்பிளை வேண்டும்” திருமண விளம்பரத்தால் அலறிய இணையம்
"வரதட்சணையை ஊக்குவிக்கும் விளம்பரம்" - சர்ச்சையில் சிக்கிய நிதின் கட்கரி டிவிட்டர் பதிவு

'ஷார்ட் மேரேஜுக்கு' மணமகன் தேவை என்று அந்த பெண்ணின் தரப்பில் குறிப்பிட்டிருந்தது தான் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது

அது என்ன குறுகிய திருமண வாழ்க்கை? எதனால் இந்த விஷயத்தை அவர்கள் கோடிட்டு காட்டவேண்டும் என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பயனர் ஒருவர் பகிர்ந்திருந்தார். பலரும் நகைச்சுவையான கமெண்ட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவர், இது விளம்பரத்தில் ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். தடபுடலான திருமணம் வேண்டாம், எளிமையாக குறைந்த நேரத்தில் நிகழ்வை முடித்துக்கொள்ளலாம் என்பதை அவர்கள் பொருள்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

”கொஞ்ச நாட்களுக்கு மட்டும் மாப்பிளை வேண்டும்” திருமண விளம்பரத்தால் அலறிய இணையம்
”வெள்ளை நிறத்தவர்கள்” நிறுவனம் வெளியிட்ட சர்ச்சை விளம்பரம் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com