மணமேடையில் முத்தம் கொடுத்த மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - எங்கே?

மணமகனின் கேரக்டர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தன்னை தகாத முறையில் அவர் தொட்டதாகவும், முதலில் அதை பெரிது படுத்தவில்லை எனவும் தெரிவித்தார் மணப்பெண்.
Wedding
Wedding Pexels
Published on

திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுக்கு முன்பு பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என மேடையில் வைத்து மணமகன் முத்தம் கொடுத்ததால், ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணப்பெண்.

பல வினோதமான காரணங்களுக்காக திருமணங்கள் நின்றது பற்றிய செய்திகள் சமீபத்தில் அதிகமாக வெளியாகி வருகிறது.

அந்த வகையில் உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் தனது திருமணத்தை அப்படி ஒரு வித்தியாசமான காரணத்திற்காக நிறுத்தியுள்ளார்.

திருமணத்தில், மாலை மாற்றிய பிறகு மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு கிட்ட தட்ட 300 விருந்தாளிகள் வந்துள்ளனர்.

அவர்கள் முன்னிலையில் முத்தம் கொடுத்ததால், கோபமடைந்த மணப்பெண், திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும், காவல் துறையினரிடம் இந்த விஷயம் குறித்து புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்ததன் பேரில், இரு வீட்டாரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Wedding
மணமேடையில் வைத்து மணமகனுக்கு லிப் லாக் கொடுத்த மணப்பெண்! நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

மணபெண் அளித்த புகாரில், தனது நண்பர்களிடம் பந்தயம் கட்டி, அதில் வெற்றிப் பெறுவதற்காக மணமகன் தன்னை முத்தமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால், மணமகனின் கேரக்டர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், தன்னை தகாத முறையில் அவர் தொட்டதாகவும், முதலில் அதை பெரிது படுத்தவில்லை எனவும் தெரிவித்தார் மணப்பெண்.

“எனக்கு அவர் முத்தம் கொடுத்தபோது, என்னை அவர் அவமதிப்பது போல நான் உணர்ந்தேன். என் சுய மரியாதை குறித்து அவர் சற்றும் யோசிக்காமல், விருந்தாளிகள் முன்பு தகாத நோக்கத்துடன் நடந்துகொண்டார்” என்று மணப்பெண் தெரிவித்துள்ளார்.

காவல் துறையினர், மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயற்சித்தும், அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. அந்த நபரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

மணப்பெண்ணின் தாய் கூறுகையில், “மணமகனின் நண்பர்கள் அவரை தூண்டிவிட்டதனால் அவர் இவ்வாறு நடந்துக்கொண்டார். நாங்கள் எங்கள் மகளை சமாதானம் செய்ய முயற்சித்தோம், ஆனால் திருமணத்தை மறுத்துவிட்டார். இதனால், அவளுக்கு சற்று அவகாசம் கொடுத்துள்ளோம்.”

இது குறித்து பேசிய போலீசார், “திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்துவிட்ட பின்னரே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அவர்கள் கணவன் மனைவியாகவே கருதப்படுகின்றனர். அவர்கள் இருவரும் சற்று அமைதியடைந்த பின்னர் அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்கவேண்டும்” என்றனர்.

இதற்கு முன்னர் மணமகன் வீட்டார் விலை குறைவான லஹங்கா வாங்கிக்கொடுத்ததனால், பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com