உத்தர பிரதேசம் : பாலியல் புகார் அளிக்க வந்த 13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த காவல் அதிகாரி

4 பேர் கொண்ட கும்பல் 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்று நான்கு நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, சிறுமியை விசாரணை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Lalitpur
LalitpurTwitter

கடந்த சில மாதங்களாக அஸ்ஸாம், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பான 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் புகார் கொடுக்க வந்த 13 வயது சிறுமியை போலீஸ் அதிகாரி வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

4 பேர் கொண்ட கும்பல் 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்று நான்கு நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, சிறுமியை விசாரணை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட கும்பல் 13 வயது சிறுமியை 4 நாட்களாக வன்புணர்ச்சி செய்துள்ளனர். இதனைப் புகாராக அளிக்க பாதிக்கப்பட்ட சிறுமி உறவினர் ஒருவருடன் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமைTwitter

அப்போது அங்கு பணியில் இருந்த ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் சிறுமியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போலீஸ் அதிகாரி திலக்தாரி சரோஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Lalitpur
உக்ரைனிய பெண்களை வன்கொடுமை செய்த ரஷ்ய வீரர்கள் - பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com