லுலு மால் சர்ச்சை : யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை - என்ன நடந்தது?

லுலு மாலினை புனிதப்படுத்தப் போவதாக அங்கு வந்த சாமியார் அச்சாரியா மஹாராஜை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிடில் ஜல சமாதி அடைவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அந்த சாமியார்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் Twitter
Published on

லக்னோவில் செயல்பட்டு வரும் பிரபல வணிக வளாகமான லுலு மாலில் சிலர் தொழுகை செய்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு சர்ச்சையானது.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

லுலு மால்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான யூசுப் அலி, தான் லுலு குழுமத்தின் தலைவர் ஆவார். உலகின் பல்வேறு இடங்களில் பிரபல வணிக வளாகமாக லுலு மால் செயல்பட்டு வருகிறது.

வணிக வளாகத்தில் தொழுகை

லக்னோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட லுலு வணிக வளாகத்தில், கடந்த 12 ஆம் தேதி, சிலர் தொழுகையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்று பொது இடங்களில் மக்கள் வழிபாடு நடத்தியது தவறு என்று பலர் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

முஸ்லீம் சார்புடைய நிறுவனமாகப் பாகுபாடு காட்டி, அந்நிறுவனம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுப் பரவலாக எழுப்பப்பட்டது.

லுலு மால் விளக்கம்

குற்றச்சாட்டுகளை மறுக்கும் அந்நிறுவனம், "எங்கள் ஊழியர்கள் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள், சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் அல்ல" என்று தெரிவித்துள்ளது.

ஊழியர்களில் 80 சதவீதம் இந்துக்கள் உள்ளனர், மீதமுள்ளவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது.

யோகி ஆதித்யநாத்
LULU யூசுஃப் அலி : அரபு நாடுகளில் கொடிக்கட்டி பறக்கும் ஓர் இந்தியரின் வெற்றி கதை

அறிவிப்புப் பலகை

இந்த விவகாரம் வைரலானதை அடுத்து வணிக வளாகத்தில் மதப் பிரார்த்தனைக்கு இடமில்லை என லுலு குழுமம் அறிவிப்புப் பலகை வைத்தது.

சாமியார் தடுத்து நிறுத்தம்

இதற்கிடையில் லுலு மாலினை புனிதப்படுத்தப் போவதாக அங்கு வந்த சாமியார் அச்சாரியா மஹாராஜை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காவிடில் ஜல சமாதி அடைவேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் அந்த சாமியார்.

யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசம் யோகி அரசு : 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது சாத்தியமா?
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்NewsSense

யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

இந்த விவகாரம் குறித்து உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "லக்னோ மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்" எனவும் "இது போன்ற பிரச்னைகளை உருவாக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com