இந்தியா பல்வேறு கலாச்சாரங்களுக்கு பெயர்பெற்றது. இங்கு கோவில்களுக்கு பஞ்சமே இல்லை. கோவில்கள் இல்லாத கிராமங்களை பார்க்க முடியாது, அந்த அளவிற்கு கிராமங்கள் தோறும் கோவில்கள் இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக சில கோவில்கள் அதன் தனித்துவமான விஷயங்களுக்காக புகழ்பெறும். அப்படி இந்தியாவில் இருக்கும் ஒரு வித்தியாசமான கோவில் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம்.
நீருக்கடியில் மூழ்கும் சிவன் கோவில், எலி கோவில் என பல கோவில்கள் உள்ளன, அந்த வரிசையில் இணைகிறது தலையில்லா விநாயகர் கோவில்.
உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். கேதார்நாத் கோயிலில் இருந்து 20 கிமீ தொலைவிலும், கௌரிகுண்டில் இருந்து வெறும் 4 கிமீ தொலைவிலும் உள்ள முன்கடியா கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
புராண நம்பிக்கையின்படி, சிவன் தவம் செய்வதற்காக வெளியே சென்றிருந்தார். பார்வதி அன்னை தனிமையில் தவிப்பாள் என்பதற்காக தன் உடலில் இருந்து ஒரு திருவுருவத்தை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்தார். அக்குழந்தைக்கு உயிர் வந்ததும் அன்னை பார்வதி அவனை தன் மகனாக ஏற்று விநாயகா என்று பெயரிட்டாள்.
பார்வதி கௌரிகுண்டத்தில் நீராட செல்லும்போது குகைக்கு வெளியே விநாயகரை காவலுக்கு வைத்துளார். அதே நேரத்தில் சிவபெருமான் அங்கு வந்தார்.
ஆனால் சிவன்தான் அவனது தந்தை என்பதை அறியாத விநாயகா அவரையும் உள்ளே செல்ல விடாமல் தடுத்தார்.பல முறை வற்புறுத்தியும், மகாதேவனை அனுமதிகாததால் கோபமடைந்த சிவபெருமான், தன் திரிசூலத்தால் விநாயகனின் தலையை துண்டித்தார்.
சிவபெருமான் விநாயகரின் ஆணவத்திற்கு தண்டனையாக அவரது தலையை துண்டித்த இடம் இதுவாகும்.
இங்கு செல்ல, நீங்கள் சோன்பிரயாக்கிலிருந்து நடந்து செல்லலாம் அல்லது உள்ளூர் டாக்ஸியில் செல்லலாம். டேராடூன் ரயில் நிலையத்திலிருந்து 250 கிமீ தொலைவில் சோன்பிரயாக் உள்ளது. டெஹ்ராடூனிலிருந்து சோன்பிரயாக் வரை பொது பேருந்துகள் மற்றும் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust