”Apollo-வில் அம்மாவிற்கு நீங்கள் உதவியதை மறக்க முடியாது” - வெங்கையா நாயுடு பற்றி தம்பிதுரை

உறுப்பினர்கள் அவரவர் தாய் மொழியில் பேசலாம் என்று நீங்கள் கொண்டு வந்த முறை பாராட்டிற்குரியது. இதை மற்ற உறுப்பினர்களும் சுட்டிக் காண்பித்திருக்கிறார்கள். உங்கள் பேச்சு, உரை வளம் அனைத்தையும் நாங்கள் மறக்க மாட்டோம் என்றார்.
அதிமுக தம்பிதுரை
அதிமுக தம்பிதுரை Twitter
Published on

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகஸ்டு 10 அன்று ஓய்வு பெறுவதை ஒட்டி நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வாழ்த்திப் பேசினர்.

அதில் அதிமுக உறுப்பினர் தம்பி துரை பேசிய கருத்துக்கள்:

பதவி விலகி ஓய்வு பெற இருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 1998 இல் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வந்ததில் இருந்து எனக்கு உங்களைத் தெரியும். அன்று முதல் நான் உங்களுடன் நட்பு கொண்டிருக்கிறேன். வாஜ்பாயி காலத்தில் நான் சட்டத்துறை மற்றும் நிலவழிப் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தேன்.

நீங்கள் பாராளுமன்ற அமைச்சராக இருந்த போது நான் மோடிஜி மற்றும் மரியாதைக்குரிய அம்மா ஆசியுடன் லோக்சபாவின் துணை சபாநாயகராக இருந்தேன்.

வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு Twitter

அப்பல்லோ மருத்துவமனையில் அம்மா இருந்த போது நீங்கள் அங்கே அதிக காலம் இருந்துள்ளீர்கள். துன்பமான அந்த தருணத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தீர்கள். அம்மா இறந்த பிறகு அவரது இறுதிச்சடங்கு உள்ளிட்ட அனைத்தையும் கூட இருந்து ஏற்பாடு செய்தீர்கள். அதற்காக நாங்களும் எங்கள் கட்சியும் உங்களுக்கு என்றென்றைக்கும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்.

ஊரக வளர்ச்சி, பாராளுமன்றம், நகர்ப்புற வளர்ச்சி என்று பல துறைகளில் நீங்கள் மோடிஜியின் அரசில், அமைச்சராக பணிபுரிந்திருக்கிறீர்கள். அப்போது பல நிர்வாக சாதனைகளையும் திட்டங்களையும் செய்திருக்கிறீர்கள். பிரதான் மந்திரி சதக் யோஜனா எனும் திட்டத்தில் உங்களது பங்களிப்பு முக்கியமானது.

அதிமுக தம்பிதுரை
வெங்கையா நாயுடுவின் பஞ்ச் லைன் காமெடி பிரபலமானவை: விடைபெறும் உரையில் பிரதமர் மோடி

உறுப்பினர்கள் அவரவர் தாய் மொழியில் பேசலாம் என்று நீங்கள் கொண்டு வந்த முறை பாராட்டிற்குரியது. இதை மற்ற உறுப்பினர்களும் சுட்டிக் காண்பித்திருக்கிறார்கள். உங்கள் பேச்சு, உரை வளம் அனைத்தையும் நாங்கள் மறக்க மாட்டோம்.

பொதுவாழ்வில் உங்களுக்கு ஓய்வில்லை. இந்தப் பதவியில் விலகினாலும் வேறு ஏதாவது பொறுப்பில் நீங்கள் எங்களை வழிநடத்துவீர்கள் என்று நினைக்கிறேன். இதே பாராளுமன்றத்தில் கூட நீங்கள் பேச வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன் அதற்கு கடவுள் வழி செய்வார் என்று நம்புகிறேன். (அடுத்த குடியரசுத் தலைவர் பதவியாக இருக்குமோ).

தாய்நாட்டிற்கான உங்களது சேவை தொடரும். உங்களது ஆரோக்கியம் மகிழ்ச்சி அனைத்தும் நீடித்திருக்கட்டும் என எனது வாய்ப்பிற்கு நன்றி கூறி அமர்கிறேன். வணக்கம்.

அதிமுக தம்பிதுரை
வெங்கையா நாயுடு பிரியாவிடை: கௌரவத்தை காப்பாற்றியிருக்கிறீர்கள் - நெகிழ்ந்த திருச்சி சிவா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com