பொதுவாக தலையில் இரட்டை சுழி இருந்தால் உடனே பல கதைகளை கட்டிவிடுவார்கள்.
இவ்வாறு இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும், அதிகமாக சேட்டை செய்வார்கள், என்றெல்லாம் கிராமங்களில் உள்ளவர்கள் பேசி அதிகமாக கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் இது உண்மைதானா? அல்லது இதற்கு பின்னால் வேறெதுவும் அறிவியல் காரணங்கள் இருக்கின்றதா என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.
எல்லாருக்கும் இப்படி இரட்டை சுழி இருக்காது. ரொம்ப அரிதாகவே காணப்படும்.
NHGRI ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 5% பேருக்குத்தான் இரட்டை சுழி இருக்கும் என்ற தகவலும் உள்ளது.
அறிவியல் படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது எனில் மரபணு முக்கிய காரணம். அந்த இரட்டை சுழி இருக்கும் நபர்களின் தாத்தா, பாட்டி என முன்னோர்களுக்கு இப்படி இருந்தால் அதனால் இவர்களுக்கும் இரட்டை சுழி இருக்க வாய்ப்புள்ளது என்கிறது அறிவியல்.
கிராமபுறங்களில் இப்படி இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரட்டை திருமணம் நடக்கும் என கதைகளை கட்டுவர். ஆனால் அதற்கு எந்த வித நிரூபிக்கப்பட்ட உண்மைகளும் இல்லை.
ஜோதிடத்தின் படி ஒருவருக்கு இரட்டை சுழி இருக்கிறது என்றால் அவர்கள் நேரடியாக எதையும் பேசுபவர், பொறுமையானவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர் என இதுபோன்ற குணங்களுடன் இருப்பார்களாம்.
மேலும் தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்களாம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust