உலக புகழ்பெற்ற நாகாலாந்து ஹார்ன்பில் திருவிழா - எப்போது தொடங்குகிறது? என்ன சிறப்பு?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இந்த ஹார்ன்பில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை பண்டிகைகளின் நிலம் (Land of Festivals) என்றும் அழைக்கின்றனர்.
உலக புகழ்பெற்ற நாகாலாந்து ஹார்ன்பில் திருவிழா - எப்போது தொடங்குகிறது? என்ன சிறப்பு?
உலக புகழ்பெற்ற நாகாலாந்து ஹார்ன்பில் திருவிழா - எப்போது தொடங்குகிறது? என்ன சிறப்பு?facebook

நாகாலாந்தில் விரைவில் ஹார்ன்பில் திருவிழா வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. வண்ணமயமான, பாரம்பரியத்தை பறைச்சாற்றும் இந்த திருவிழாவை காண உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும், பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

இந்த உலக புகழ்பெற்ற திருவிழாவை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடு. இவ்வனைத்தை பற்றியும் தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள நம்மிடம் போதுமான நேரம் இருக்கிறதா என மலைக்கவைக்கிறது இங்குள்ள பழக்கவழக்கங்கள்.

இந்த ஆண்டு, இந்த ஹார்ன்பில்ல் திருவிழா டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி, 10 தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் இந்த ஹார்ன்பில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனை பண்டிகைகளின் நிலம் (Land of Festivals) என்றும் அழைக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நாகாலாந்து அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் மாநில சுற்றுலாத் துறை இந்த ஹார்ன்பில் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்கிறது.

ஹார்ன்பில் என்பது ஒரு வகையான பறவையாகும். இந்த பறவைக்கு நாகாலாந்து நாகா பழங்குடியினர் மத்தியில் மரியாதையின் சின்னமாக பார்க்கப்படுகிறது

இந்த ஹார்ன்பில் திருவிழாவின்போது நாகாலாந்தின் 17 பழங்குடியின மக்கள் ஒன்று கூடுகின்றனர். இது கலாச்சார நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக உள்ளது. இதனாலேயே இது திருவிழாக்களின் திருவிழா என அழைக்கப்படுகிறது.

பழங்குடியினரின் குடிசைகள் அலங்கரிக்கப்பட்டு, மேள தாளங்கள், காங் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன.

பாரம்பரிய உடையணிந்து மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்கின்றனர். அங்குள்ள பழங்குடியினர் அவர்கள் குழுக்களின் சிறப்புகளை இந்த திருவிழாவின் போது காட்சிப்படுத்துகின்றனர்.

இந்த விழாவின் நோக்கம்

  • நாகாலாந்தின் வளமான கலாச்சாரத்தைப் பாதுகாக்க, மேம்படுத்த

  • நாகாலாந்தின் மரபுகளை புதுப்பிக்க

  • பழங்குடியினருக்கு இடையேயான தொடர்புகளை ஊக்குவிக்க உதவும்

  • நாகாலாந்தின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், உணவு, பாடல்கள் மற்றும் நடனம் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்க உதவுவதன் மூலம் நாகாலாந்தில் சுற்றுலாவை மேம்படுத்த ஹார்ன்பில் ஒரு முக்கிய திருவிழாவாக உள்ளது.

உலக புகழ்பெற்ற நாகாலாந்து ஹார்ன்பில் திருவிழா - எப்போது தொடங்குகிறது? என்ன சிறப்பு?
ஆண்களுக்கு அனுமதி இல்லை! அருணாச்சல பிரதேசத்தின் இந்த பெண்கள் விழா பற்றி தெரியுமா?

இந்த திருவிழா கிசாமா என்ற கிராமத்தில் நடக்கிறது. நாகாலாந்தின் சுற்றுலா துறையை மேம்படுத்த அரசு தொடங்கிய விழா இது. நாகாலந்து தலைநகரான கோஹிமாவில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருவிழாவின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று பாரம்பரிய நாகா மொறுங்குகள் பழங்குடியினரின் மலர் கண்காட்சி ஆகும்.

  • இந்த திருவிழாவுக்கு செல்வதாக இருந்தால், ரூ.20 முதல் ரூ.30 வரை நுழைவுச் சீட்டு தினமும் வாங்கவேண்டும்.

  • கேமராக்கள் எடுத்து செல்வதாக இருந்தால், அதற்கு தனியாக 50 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்

  • உள்நாட்டு சுற்றுலா பயணிகள் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளூர் அரசாங்கத்திடம் இருந்து உள் வரி அனுமதி பெற வேண்டும்

  • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்த 24 மணி நேரத்திற்குள் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் (FRO) பதிவு செய்ய வேண்டும்.

உலக புகழ்பெற்ற நாகாலாந்து ஹார்ன்பில் திருவிழா - எப்போது தொடங்குகிறது? என்ன சிறப்பு?
மும்பையின் மின்மினி திருவிழா குறித்து தெரியுமா? ஏன் கொண்டாடப்படுகிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com