1983 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அணி வீரர்களின் சம்பளம் என்ன?

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக இருந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை இந்தியா தோற்கடித்தது மக்களுக்கு கிரிக்கெட் மீதான பார்வையை மாற்றியது.
1983 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அணி வீரர்களின் சம்பளம் என்ன?
1983 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அணி வீரர்களின் சம்பளம் என்ன? ட்விட்டர்
Published on

இந்திய அணி இதுவரை இரண்டு முறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றுள்ளது.

முதல் முறையாக 1983ல் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வென்றது.

இந்த இந்திய அணியை கபில் தேவ் வழி நடத்தினார். இந்த உலகக்கோப்பை தொடரில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவரும், இந்திய அணியை கோப்பையை வெல்ல வைக்க இயலும் என்று உறுதியாக நம்பியவரும் அவரே.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக இருந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை இந்தியா தோற்கடித்தது மக்களுக்கு கிரிக்கெட் மீதான பார்வையை மாற்றியது.

இந்த 1983 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அணியின் வீரர்களின் சம்பளம் என்ன தெரியுமா?

உலகக்கோப்பை இறுதிப்போட்டி அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள்:

  • கபில் தேவ் (கேப்டன்)

  • சுனில் கவாஸ்கர்

  • மதன் லால்

  • மோஹிந்தர் அமர்நாத் (வைஸ் கேப்டன்)

  • கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

  • சந்தீப் பாட்டில்

  • ராஜர் பின்னி

  • யஷ்பால் சர்மா

  • பல்விந்தர் சந்து

  • சையது கிர்மானி

  • ரவி சாஸ்த்ரி

  • க்ரிதி ஆசாத்

  • திலீப் வெங்கசர்கார்

  • சுனில் வால்சன் - இவர் மட்டுமே உலகக்கோப்பையில் எந்த போட்டியிலும் விளையாடவில்லை

இந்த வீரர்களுக்கு ஒரு நாளைக்கு தலா ரூ.200 கொடுப்பனவாகவும், ஒரு போட்டிக்கு தலா ரூ.1,500 சம்பளமாகவும் வழங்கப்பட்டது. இந்த சம்பள விவரப் பட்டியலை, கடந்த 2019ஆம் ஆண்டு பத்திரிகையாளர் மகராந்த் வைகங்கர் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், "அணி வீரர் ஒரு ஒருவரும் ரூ.10 கோடி சம்பளம் பெற தகுதி உடையவர்கள்" என்று தலைப்பிட்டிருந்தனர்.

1983 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அணி வீரர்களின் சம்பளம் என்ன?
Rishabh Pant: ”ஓட்டுநரை வைத்துக்கொள்ளலாமே?” பண்ட் விபத்து குறித்து கபில் தேவ் விமர்சனம்

இந்திய அணி உலகக்கோப்பை போட்டிகளுக்காக இங்கிலாந்து செல்லும்போது, தகுதிச் சுற்றுகளில் கூட அணி தாக்குப் பிடிக்காது என்று நம்பியவர்கள் தான் ஏராளம்.

ஆனால் வெற்றிக்கோப்பையை கையில் ஏந்தி பெருமிதத்துடன் வந்திறங்கிய வீரர்களை நாடே கொண்டாடிய தருணம் இன்றும் நம்மை கண்கலங்கச் செய்யும்.

இதன் பிறகு 28 ஆண்டுகள் கழித்து எம் எஸ் தோனி தலைமையில் தான் இந்தியா, 2011ல் உலகக் கோப்பையை வென்றது.

தற்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

1983 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அணி வீரர்களின் சம்பளம் என்ன?
தோனி டு கோலி- 2011 உலகக்கோப்பை வெற்றி கூட்டணி இப்போதைய நிலை என்ன? '12YearsofIndiaWorldCup'

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com