பேய் கட்டிய படிக்கிணறு - எங்கே இருக்கிறது? முழுமையடையாமல் இருக்க காரணம் என்ன?

இந்த ஊரில் ஒரு கிணறு உள்ளது. இதனை பூத் பாவ்டி அல்லது பூத் பாவ்லி என்று சொல்கின்றனர். இந்த கிணற்றை மனிதர்களும் பிசாசும் இணைந்து உருவாக்கியதாக நம்பப்படுகிறது. பெரும்பான்மையான பணியை பிசாசு தான் செய்தது என்கின்றனர்.
பேய் கட்டிய படிக்கிணறு - எங்கே இருக்கிறது? முழுமையடையாமல் இருக்க காரணம் என்ன?
பேய் கட்டிய படிக்கிணறு - எங்கே இருக்கிறது? முழுமையடையாமல் இருக்க காரணம் என்ன?ட்விட்டர்

இந்தியாவில் அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களுக்கு பஞ்சமில்லை. ஒரு காலத்தில் பேய் கதைகள் கூறப்பட்டு மனிதர்கள் செல்லாத இடங்களாக இருந்தவை இன்று பிரபல சுற்றுலா தலங்களாக மாறிவிட்டன.

டார்க் டூரிசம் என்ற பெயரில், அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்களுக்கு மக்களை அழைத்தும் செல்கின்றனர்.

ஆனால், சில இடங்களுக்கு இன்றும் மனிதர்கள் செல்வதற்கு பயப்படுகின்றனர். அதில் ஒன்று தான் ராஜஸ்தானில் உள்ள பூத்தோன் கி பாவ்லி (Bhooton ki Baoli). இது பேய்களின் படிக்கிணறு என்று பொருள்படுகிறது

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது ரான்ஷி என்ற கிராமம்.

கண்களுக்கு மிக அழகிய காட்சியை வழங்கும் இந்த கிராமம் அதன் பின்னால் ஆபத்தை ஒளித்துவைத்திருக்கிறது எனலாம்.

இதற்கு காரணம் இந்த ஊரில் ஒரு கிணறு உள்ளது. இதனை பூத் பாவ்டி அல்லது பூத் பாவ்லி என்று சொல்கின்றனர். இந்த கிணற்றை மனிதர்களும் பிசாசும் இணைந்து உருவாக்கியதாக நம்பப்படுகிறது. பெரும்பான்மையான பணியை பிசாசு தான் செய்தது என்கின்றனர்.

இதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை ஒன்றும் இருக்கிறது.

ராஜா தாகூர் ஜெய் சிங் அப்போது ஜோத்பூரை ஆண்டுக்கொண்டிருந்தார். இந்த ரான்ஷி கிராமம் ஜோத்பூருடன் இணைந்திருந்தது.

ஒரு நாள் ராஜா தனது குதிரையில் வந்துகொண்டிருந்த போது அவருக்கு தாகம் எடுக்க, அருகில் இருந்த குளக்கரையில் நின்றார். தண்ணீர் குடிக்க சென்ற போது, ஒரு குரல் வந்தது. தனக்கும் தண்ணீர் தருமாறு கேட்டது அந்த குரல்.

“குளத்தின் அருகில் இருந்துகொண்டு ஏன் என்னிடம் தண்ணீர் கேட்கிறாய்?” என்று ராஜா கேட்டார்.

அதற்கு அந்த குரல் (பிசாசு) தனக்கு சாபம் இருப்பதால், யாராவது உதவினால் தான் தண்ணீர் குடிக்கமுடியும் என்றது. நல்லுள்ளம் கொண்ட ராஜா அந்த பேய்க்கு தண்ணீர் கொடுத்தார். அதற்கு உணவையும் அளித்தார்.

ஆனால் அந்த பேயோ நன்றி சொல்லாமல், தன்னுடன் மல்யுத்தம் செய்யச் சொல்லி ராஜாவிடம் கேட்டது.

பேய் கட்டிய படிக்கிணறு - எங்கே இருக்கிறது? முழுமையடையாமல் இருக்க காரணம் என்ன?
பேய் தாஜ்மஹால் : போபாலில் இருக்கும் கைவிடப்பட்ட கோட்டை - பேய் நடமாட்டம் இருக்கிறதா?

மல்யுத்தத்தில் ராஜா வென்றார். பிசாசும் மன்னிப்பு கேட்டது. ராஜாவுக்கு என்ன உதவி வேண்டுமோ செய்கிறேன் என்றது. ராஜா தாகூர் சிங் தனது அரண்மனைக்கு முன்பாக ஒரு படிக்கிணறு கட்டுமாறு உத்தரவிட்டார்.

இதற்கு ஒப்புக்கொண்ட அந்த பிசாசு, மனிதர்கள் உதவியை நாடியது. மேலும், பகலில் மனிதர்கள் வேலை பார்க்கட்டும், இரவில் நான் தனியாக பணியாற்றுவேன் என்றது. மேலும், மனிதர்களை விட 100 மடங்கு அதிகமாக நான் வேலை செய்வேன் என்றும் சொன்னது பேய். மேலும், தன்னை சந்தித்தது குறித்தும், இந்த கிணறு உருவாக்கப்படுவது குறித்தும் ஊரில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டது.

இந்த நிபந்தனையை மீறினால், கிணற்றை கட்டிமுடிக்கமாட்டேன் என்று சொன்னது பேய். ராஜா சத்தியம் செய்து கொடுத்தார். மிக விரைவாக கிணறு உருவாகும் பணிகள் நடந்தது, இது ஊர் மக்களை மிக்க ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கிணறு கட்டிமுடிக்கப்படும் தருவாயில், ஆர்வம் தாளாத ராஜாவின் மனைவி, இதன் பின்னால் இருக்கும் ரகசியத்தை கேட்டார். சத்தியத்தை மீறிய ராஜா, மனைவியிடம் ரகசியத்தை உடைத்தார். அந்த கணமே கட்டுமானம் நின்று போனது. சுமார் 200 அடி ஆழத்தில், பல்வேறு வசதிகளுடன் இந்த கிணற்றை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், ராஜா ரகசியத்தை வெளியில் கூறியதால் கிணறு கட்டுமுடிக்கப்படவில்லை. அதன் பிறகு கிணற்றை முழுமையாக்கவும் முடியவில்லை.

ஆண்டாண்டு காலமாக அந்த கிணறு அப்படியே தான் இருக்கிறது. மனிதர்கள் அந்த பக்கமாக சென்றால், அங்கு கட்டுமானம் நடைபெறும் சத்தம் கேட்குமாம். குறிப்பாக இரவுகளில். இதனால் அங்கு யாரும் தனியாக செல்லவே பயப்படுகின்றனர்.

நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!

பேய் கட்டிய படிக்கிணறு - எங்கே இருக்கிறது? முழுமையடையாமல் இருக்க காரணம் என்ன?
பேய்களால் கட்டப்பட்ட இந்திய சிவன் கோவில் குறித்து தெரியுமா?எங்கு இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com