இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு : நாம் அறிய வேண்டிய 10 தகவல்கள்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, பிரணாப் முகர்ஜி குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபோது, அந்தத் தேர்தலில் முர்முவின் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. வட மாநிலங்கள் குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளில் முர்முவின் வேட்பாளர் அறிவிப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
திரௌபதி முர்மு
திரௌபதி முர்முNewsSensetn
Published on

இந்திய குடியரசு தலைவராகி உள்ளார் திரெளபதி முர்மு.

ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில், ஒடிசாவின் சந்தால் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரான திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

எதிரணியின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் பா.ஜ.க. மைய அமைச்சரும் அடல் பிகாரி வாஜ்பாயியின் அணுக்க நண்பருமான யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டார். இவர் தோல்வியை தழுவி உள்ளார்.

முர்மு:

முர்முவை இந்தப் பதவிக்கு யாரும் எதிர்பாராதவிதமாக அறிவித்ததாக பேசப்பட்டது. ஆனால் அது உண்மையா... இல்லை என்பதே உண்மை!

ஏனென்றால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே, பிரணாப் முகர்ஜி குடியரசுத்தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபோது, அந்தத் தேர்தலில் முர்முவின் பெயர் வேட்பாளராக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

வட மாநிலங்கள் குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளில் முர்முவின் வேட்பாளர் அறிவிப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பட்டியல் சமூகத்தவரான இராம்நாத் கோவிந்த் பா.ஜ.க.வின் சார்பில் நிறுத்தப்பட்டார்.

இப்போதுதான், முர்மு அதிகாரபூர்வமாக நேற்று பா.ஜ.க.வின் சார்பில் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றுள்ளார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்முTwitter
  • குடியரசுத்தலைவர் தேர்தலில் வெல்லும்பட்சத்தில் முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியினக் குடியரசுத்தலைவர் எனும் பெயரைப் பெறுவார். அத்துடன் இரண்டாவது பெண் குடியரசுத்தலைவர் எனும் பெருமையும் முர்முவுக்குக் கிடைக்கும்.

  • ஒதிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த முர்மு, தீவிர அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஆசிரியராகப் பணியாற்றினார்.

  • பின்னர், மாநில அரசியலில் நுழைந்த அவர், 2000, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்றார். சொந்த மாவட்டத்தில் மயூர்பஞ்ச் தொகுதியிலேயே அவர் இரண்டு முறையும் எம்.எல்.ஏ.ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரௌபதி முர்மு
உணவு அரசியல் : ஆரோக்கியமான உணவு இன்றி தவிக்கும் 70% இந்தியர்கள் - என்ன நடக்கிறது இங்கே?
  • ஒடிசாவில் 2000ஆவது ஆண்டில் பா.ஜ.க.- பிஜு ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, போக்குவரத்து, வர்த்தகம் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பதவியேற்றார், முர்மு. பின்னர், மீன்வளம், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளை கவனித்தார்.

  • 2009இல் கூட்டணியில் சிக்கலாகி, பா.ஜ.க.வுக்கு பிஜு ஜனதா தளம் பைபை சொல்லிவிட, நெருக்கடியான சமயத்தில் திரௌபதி முர்மு வெற்றிபெற்றது, முக்கியத்துவம் உடையது.

  • ஜார்க்கண்டு மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, அதன் முதல் பெண் ஆளுநராகக் கடந்த 2015ஆம் ஆண்டில் முர்மு பதவியேற்றார்.

திரௌபதி முர்மு
புர்கா சர்ச்சை - கர்நாடகா தேர்வுகள் : இரண்டாம் இடம் பெற்று அசத்திய இல்ஹாம்
  • தனிப்பட்ட வாழ்க்கையில் முர்முவுக்குப் பெரிய சோக வரலாறு உண்டு. தன்னுடைய கணவர் சியாம் சரணையும் இரண்டு மகன்களையும் பறிகொடுத்தது, இன்றளவும் அவரால் ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்துவருகிறது.

  • முன்னதாக, சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன், 1997ஆம் ஆண்டில் இராய்ரங்பூர் நகர் ஊராட்சியில் மன்ற உறுப்பினராகவும் அவர் பதவிவகித்துள்ளார். பின்னர், பா.ஜ.க.வில் இணைந்து அக்கட்சியின் பழங்குடியினர் மோர்ச்சா எனும் பிரிவில் துணைத்தலைவராகவும் ஆனார்.

  • கிட்டத்தட்ட 48 விழுக்காடு வாக்குகளை வைத்திருக்கும் பா.ஜ.க. கூட்டணியின் இப்போதைய பலத்தால் முர்மு வெற்றிபெறுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்துவிட்டால் பழங்குடியினர் மத்தியில் பா.ஜ.க.வுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெருமளவு ஆதரவு கிடைக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹா : பேராசிரியர் டூ நிதியமைச்சர் டூ குடியரசுத் தலைவர் வேட்பாளர் - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com