இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் பயன்படுத்த காரணம் என்ன? | Explained

சுமார் 50 ஆண்டுகளாக நமது நாட்டின் ரூபாய் நோட்டுகள் காந்தியாரின் புகைப்படத்தை தாங்கியுள்ளது. ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற மாத்திரத்திலேயே அவரது முகம் கொண்ட நோட்டுகள் வரவில்லை.
இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் பயன்படுத்த காரணம் என்ன? | Explained
இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் பயன்படுத்த காரணம் என்ன? | Explainedcanva
Published on

நமக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் சிரித்த முகத்தை தான் பார்த்திருக்கிறோம்.

இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏன் குறிப்பாக காந்தியின் உருவப்படத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால், அவர் நமது நாட்டின் தேசத்தந்தை என்று சொல்லுவோம். அது உண்மை தான். ஆனால், அவரது முகத்தை குறிப்பாக ரிசர்வ் வங்கி நோட்டுகளில் அச்சிட என்ன காரணம் என்று கேட்டால் நம்மில் பலரிடம் பதில் இருக்காது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏன் காந்தி தாத்தாவின் முகம் பயன்படுத்தப்பட்டது, அதன் பின்னால் இருக்கும் தொழில் ரகசியம் என்ன? இந்த பதிவில் காணலாம்.

எப்போது புழக்கத்தில் வந்தது காந்தி முகம் கொண்ட ரூபாய்?

சுமார் 50 ஆண்டுகளாக நமது நாட்டின் ரூபாய் நோட்டுகள் காந்தியாரின் புகைப்படத்தை தாங்கியுள்ளது. ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற மாத்திரத்திலேயே அவரது முகம் கொண்ட நோட்டுகள் வரவில்லை.

1969ல் தான் முதன் முதலில் காந்தியின் முகங்கொண்ட நோட்டுகள் புழக்கத்தில் வந்தன. பின்னர் 1996ஆம் ஆண்டில் தான் அது நிரந்தரமாக மாறியது

இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது அரசர் ஆறாம் ஜார்ஜின் உருவம் தான் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன.

சுதந்திரத்துக்கு பின், சார்நாத்தில் அமைந்துள்ள இந்தியாவின் தேசிய இலச்சினையான அசோக சின்னம் (Lion Capital) இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற தொடங்கியது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் பயன்படுத்த காரணம் என்ன? | Explained
Rudaali: பணம் வாங்கி கொண்டு இறுதிசடங்கில் அழும் பெண்கள் - கண்ணீரின் விலை என்ன? | Explainer

இந்திய ரூபாய் நோட்டில் இருந்த சின்னங்கள்

அதன் பிறகு 1969ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் உருவப்படம் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக அவர் செய்த தியாகங்கள், அவரது அர்ப்பணிப்புகளை போற்றும் விதமாக, அவரது 100வது பிறந்தநாளில் சிறப்பு நோட்டுகள் அச்சிடப்பட்டன.

இதில், மகாத்மா காந்தி சேவகிராம் ஆசிரமத்தில் அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

முன்பே சொன்னதுபோல பெரும்பாலான நோட்டுகளில் அசோக சின்னம் இருந்தது. ஒரு சில நோட்டுகளில் ஒடிசா கோனார்க் கோவில் (ரூ.20) ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், 5,000 ரூபாய் நோட்டுகளில் கேட்வே ஆஃப் இந்தியா இடம்பெற்றிருந்தது.

1987ஆம் ஆண்டு தான் முதன் முதலில் காந்தியின் சிரித்த முகம் கொண்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. அப்போதிருந்து, அவ்வப்போது காந்தியின் சிரித்த முகம் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட தொடங்கின. 1996ஆம் ஆண்டு முதல் எல்லா ரூபாய் நோட்டுகளிலும் பொதுவானதாக காந்தியின் சிரித்த முகமே இடம்பெற தொடங்கியது

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் பயன்படுத்த காரணம் என்ன? | Explained
ஏலத்திற்கு வரும் இந்தியாவின் எதிரி சொத்து - இந்த Enemy Property என்பது என்ன? | Explained

காந்தியின் முகம் உண்மையானதா?

இந்த ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியின் புகைப்படம், கேலிச்சித்திரம் (caricature) அல்ல. இது 1946ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருந்து கத்தரிக்கப்பட்டது.

அதில் அவர் பிரிட்டிஷ் அரசியல்வாதி பிரடெரிக் வில்லியம் பெதிக்-லாரன்ஸ் பிரபுவுடன் நின்றுகொண்டிருப்பார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தெரிவிக்கிறது.

காந்தியின் புகைப்படம் என்று முடிவானபோது இந்த சிரித்த முகம் தான் சரியானதாக இருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டதாம்.

காந்தியின் உருவம் நிரந்தரமான கதை என்ன?

இந்திய ரூபாய் நோட்டுகளை வடிவமைக்கும் பணி ரிசர்வ் வங்கியின் உடையது. மத்திய வங்கி மற்றும் மத்திய அரசிடம், இந்த ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்படும் டிசைன்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றே வடிவமைக்கவேண்டும்.

1990களில் நோட்டுகளில் இருந்த பாரம்பரியமான பாதுகாப்பு அம்சங்கள் போதுமானதாக இல்லை என்று கருதியது ரிசர்வ் வங்கி. இதனால், மனித முகத்தை விட உயிரற்ற பொருட்களை (animated objects) உருவாக்குவது ஒப்பீட்டளவில் எளிதாக இருக்கும் என்று கருதினர்.

இதற்கு காந்தியின் முகத்தை தேர்ந்தெடுத்தனர். அவரது அர்ப்பணிப்பு மற்றும், தியாகங்கள், மக்கள் மனதில் அவருக்கு இருக்கும் நிலைத்த மரியாதையின் காரணமாக அவரது முகம் தேர்வுசெய்யப்பட்டது.

இந்தியா போன்ற ஒரு நாட்டில், காந்தியை தவிர ஒருமித்த கருத்துடன் ஒப்புக்கொள்ளக்கூடிய முகமோ, சின்னமோ இருக்க முடியாது என்பது முக்கிய காரணம்.

இந்த ரூபாய் நோட்டில், ரிசர்வ் வங்கி ஒரு சாளர பாதுகாப்பு நூல் (windowed security thread), மறைந்திருக்கும் படம் (latent image) மற்றும் இன்டாக்லியோ அம்சங்கள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்தியது.

இப்படியாக அச்சிடப்பட்ட மகாத்மா காந்தி தொடர் ரூபாய் நோட்டுகள், 2016ல் பணமதிப்பிழப்பின்போது மாற்றத்தை கண்டது நாம் அறிந்ததே. அந்த நோட்டுகள் மகாத்மா காந்தி புதிய தொடர் என்று பெயரிடப்பட்டது

மற்ற தலைவர்கள், கடவுள்களின் முகங்களை ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. ஆனால் அதனை ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற நாடுகளும் அவர்கள் நாட்டின் பெருந்தலைவர்கள் முகத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள கரன்சி நோட்டுகளில் ஜார்ஜ் வாஷிங்டன் மற்றும் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் உருவப்படங்களும், பாகிஸ்தானின் கரன்சியில் முகமது அலி ஜின்னாவின் உருவப்படமும், சீனாவில் மாவோ சேதுங் உருவமும் இடம்பெற்றுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் பயன்படுத்த காரணம் என்ன? | Explained
இந்திய ரூபாய் நாணயங்களில் இருக்கும் குறியீடுக்கு காரணம் என்ன? | Explained

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com