ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?

ரயில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் எப்போதும் வெள்ளை நிறத்தில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?
ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?
ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?Twitter
Published on

இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பொதுவான மற்றும் சிக்கனமான போக்குவரத்து வழிமுறையாகும்.

பல்வேறு வசதிகளை வழங்கும், ரயில்வேயில் பெட்ஷீட்கள், தலையணைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் படுக்கையுடன் போர்வைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த போர்வைகள் ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் வழங்கப்படுகிறது.

அப்படி ரயில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் எப்போதும் வெள்ளை நிறத்தில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்திய இரயில்வே எப்போதும் பயணிகளுக்கு ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகளை ஏன் வழங்குகிறது என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.

இந்திய ரயில்வே சார்பில் பல ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரம் பெட்ஷீட்டுகள் மற்றும் தலையணை உறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பின்னர் துவைப்பதற்காக ஒரே இடத்திற்கு வரும்.

பெட் ஷீட்களை துவைக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் சலவைக்காக பெரிய கொதிகலன்கள் இருக்கும். இதில், 121 டிகிரி செல்சியஸில் உருவாகும் நீராவி பெட்சீட்டுகளை கழுவும். இந்த வெப்பநிலையில் 30 நிமிடங்கள் வைத்திருந்தால், அது கிருமிகளற்றதாக மாறும்.

இத்தகைய சூழ்நிலையில், வண்ண பெட்ஷீட்களை விட வெள்ளை நிற பெட்ஷீட்களை துவைப்பது எளிது என்று இந்திய ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.

அதே நேரம் மற்ற நிறங்களை கொண்ட பெட்ஷீட்களை சலவை செய்யும்போது அதன் நிறம் மங்கி சீக்கிரம் வெளுத்துவிடும். வெள்ளை நிறம் அப்படி கிடையாது.

அதுமட்டும் இல்லாமல் வெவ்வேறு வண்ணங்களில் போடும்போது அதை தனித்தனியே துவைக்கவேண்டி இருக்கும். சேர்த்து போட்டால் நிறங்கள் கலந்துவிடும்.

இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவே வெறும் வெள்ளை நிற பெட்ஷீட் தலையணை உரைகளை மட்டுமே இந்தியன் ரயில்வே பயன்படுத்தி வருகிறது.

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?
Leh Ladakh போறீங்களா? இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ள இந்த திட்டத்தை பாருங்கள் IRCTC

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com