சம்பளத்தை சொல்ல மறுத்த கணவர்; கில்லாடி மனைவி எப்படி தெரிந்து கொண்டார் தெரியுமா?

திருமண தகராறு காரணமாக கணவர் தனது மொத்த வருமானத்தை பகிர்ந்து கொள்ள மறுத்ததால், சஞ்சு குப்தா என்ற பெண் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார்.
Husband and wife (Rep)
Husband and wife (Rep)Pexels
Published on

பொதுவாக ஆண் - பெண் தங்களின் சம்பள விவரம் குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். சிலர் குடும்பத்தினரிடம் மட்டும் தங்களது முழு சம்பளம் குறித்து கூறுவார்கள்.

இங்கு ஒரு பெண் தனது கணவரின் சம்பளத்தை தெரிந்துகொள்ள ஆர்டிஐ தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதாவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கணவரின் சம்பளத்தை தெரிந்து கொள்ள துணிந்துள்ளார்.

திருமண தகராறு காரணமாக கணவர் தனது மொத்த வருமானத்தை பகிர்ந்து கொள்ள மறுத்ததால், அதிகாரிகளின் உதவியை சஞ்சு குப்தா என்ற பெண் நாடியுள்ளார்.இது தொடர்பாக தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கணவரின் மொத்த வருமானம் குறித்த விவரங்களை 15 நாட்களுக்குள் மனைவிக்கு வழங்குமாறு வருமான வரித்துறைக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.

ஆரம்பத்தில், மத்திய பொதுத் தகவல் அலுவலர் (CPIO), பரேலி வருமான வரித் துறை அலுவலகம், ஆர்டிஐ சட்டத்தின் கீழ் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார். காரணம் சஞ்சு குப்தாவின் கணவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

முதல் மேல்முறையீட்டு ஆணையத்தில் (FAA) அப்பெண் மேல்முறையீடு செய்தார். மத்திய பொதுத் தகவல் அலுவலரின் உத்தரவு செல்லும் என முதல் மேல்முறையீட்டு ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, மத்திய பொதுத் தகவல் அலுவலரிடம் அந்த பெண் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்.

நீதிமன்றங்களின் சில உத்தரவுகளை ஆய்வு செய்து மத்திய தகவல் ஆணையம் இந்த உத்தரவை வழங்கியது.

15 நாட்களுக்குள், கணவரின் வருமானம் பற்றிய விவரங்களை மனைவிக்கு வழங்குமாறு மத்திய பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Husband and wife (Rep)
”என் கணவர் கோமாவில் இருக்கிறார்” - 18 மாதங்கள் இறந்தவரின் உடலை வீட்டில் வைத்திருந்த மனைவி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com