வங்கி கணக்கிற்கு தவறுதலாக வந்த பணம் : தர மறுக்கும் நபர் - இத்தனை லட்சமா? | அடடா நிகழ்வு

வங்கியின் பணப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட பிழையால், தன்னுடைய அக்கவுண்டில் பணத்தைத் தவறுதலாகப் பெற்ற ஒருவர், அந்தப் பணம் தனக்கு லாட்டரியில் கிடைத்ததாகக் கூறி, திரும்பக் கொடுக்க மறுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
Indian rupess
Indian rupessTwitter
Published on

கடந்த ஜூன் 29-ஆம் தேதியன்று, மும்பை மீரா ரோட்டைச் சேர்ந்த ஒரு பெண், தனது உறவினர் ஒருவருக்குப் பணத்தை அனுப்ப முயற்சி செய்தபோது தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வங்கித் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

மேலும், அந்தப் பெண் வங்கிக் கணக்கு எண்ணைத் தவறுதலாகப் பதிவு செய்திருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே மும்பையில் கணக்கு வைத்திருப்பவருக்குப் பணம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

அந்த பெண் தனது தவறை உணர்ந்து வங்கியை அணுகியிருக்கிறார். ஆனால் வங்கி அதிகாரிகளோ அவருக்கு உதவ மறுத்துவிட்டனர். இது உங்கள் தவறு, நாங்கள் இதில் செய்வதற்கு எதுவுமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.

Indian rupess
தவறுதலாக 1.42 கோடி account-ல் போட்ட நிறுவனம், தலைமறைவான ஊழியர் : ஓர் அடடே சம்பவம்
Lottery Ticket
Lottery TicketPexels

இதனால் ஜூன் 30 அன்று, அந்தப் பெண் வசாய் விரார் காவல்துறையின் சைபர் செல் பிரிவில் இந்த புகாரைப் பதிவு செய்திருக்கிறார்.

அதன் பிறகு, சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவரைக் கண்டுபிடித்த போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்ணின் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டனர்.

முதலில், தனக்கு லாட்டரியில் வெற்றி பெற்றதனால் தான் இந்தத் தொகை கிடைத்ததாகக் கூறி பணத்தைத் திருப்பித் தர மறுத்திருக்கிறார் அந்த நபர்.

law
law twitter

அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் மிரட்டியதையடுத்து அந்த நபர் பணத்தைத் தருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கூறியபடி, இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 2 ஆம் தேதி அந்தப் பெண்ணுக்குப் பணத்தைச் செலுத்தியிருக்கிறார்.

தவறுதலாக செலுத்தி, பிறகு மீட்கப்பட்ட அந்த பணத்தின் மதிப்பு ரூபாய் 7 லட்சம் ஆகும்.

Indian rupess
கனவில் தோன்றிய லாட்டரி எண்- 1.9 கோடி வென்ற நபர் !

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com