உயிருடன் இருக்கும் கணவருக்கு Death Certificate வாங்கி ரூ.25 லட்சத்தை சுருட்டிய மனைவி

கணவன் இறந்து விட்டதாகப் போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்து வங்கியில் இருந்து இன்சூரன்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு மனைவி தப்பியோடியுள்ளார்.
Indian rupess
Indian rupessTwitter
Published on

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தை சேர்ந்த நுர்ஜமால் ஷேக். இவரது மனைவி ஷாஹினா கதும். இவரது கணவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றிருக்கிறார்.

வெளிநாட்டிற்குச் சென்றவுடன் கணவனிடம் பேசுவதை மனைவி தவிர்த்து வந்துள்ளார். மேலும் கணவனின் பேரில் இருக்கும் இன்சூரன்ஸ் பணத்தை எப்படியாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஷாஹினா திட்டமிட்டு உள்ளார்.

saudi
saudiNewsSense

இதற்காக சவுதிக்கு சென்ற கணவர் உயிருடன் இருக்கும் போதே பணத்திற்காக இறந்துவிட்டதாகப் போலிச் சான்றிதழ் தயாரித்து அதனை வைத்து வங்கிக்கு சென்று அவரது இன்சூரன்ஸ் பணமான 25 லட்ச ரூபாயையும் பெற்றுள்ளார் ஷாஹினா.

இதற்கிடையில் 5 ஆண்டுகள் கழித்து சவுதியில் இருந்து சொந்த ஊருக்கு உயிருடன் திரும்பி நுர்ஜமால், இன்சூரன்ஸ் பணம் குறித்து சம்பந்தப்பட்ட வங்கியிடம் கேட்டுள்ளார்.

அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நுர்ஜமால் ஷேக் இறந்துவிட்டதாகச் சான்றிதழ் காட்டி மனைவி ஷாஹினா பணத்தை எடுத்து விட்டதாக அவரிடம் மேனேஜர் கூறியுள்ளார்

Indian rupess
திருமணத்திற்கு பிறகு கணவர் 'பெண்' என கண்டுப்பிடித்த காதலி - இது இந்தோனேசியா சோகம்
insurance
insurancePexels

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நுர்ஜமால், ஷாஹினா குறித்து போலீசில் புகாரும் அளித்திருக்கிறார்.

அதில், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதால் என்னுடைய பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் எனவும், எனக்கு எனது பணத்தையும், நீதியையும் பெற்று தரும்படி வலியுறுத்தியுள்ளார்.

Indian rupess
மியா கலிஃபாவை அடையாளம் கண்ட கணவர்- மனைவியை சமாதானப்படுத்த தந்த பரிசு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com