உலகின் இரு சக்கர வாகன விற்பனையில் இந்தியாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. 90களின் ஆரம்பத்தில் இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் தடம் பதித்தபோது அன்று தொலைக்கட்சிகளில் வெளியான விளம்பரங்கள் பிரபலமானவை.
அப்படி வெளியான சில பிரபலமான இரு சக்கர வாகனங்களின் விளம்பரங்களை தற்போது காணலாம்.
1985 முதல் 1996 வரை இந்தியா சாலைகளில் றெக்கை கட்டி பறந்த பைக் என்றால் அது யமஹா RX100 என்றே கூறலாம்.
2 ஸ்ட்ரோக் எஞ்சினை கொண்ட RX100 மோட்டார் சைக்கிளை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வந்தது, தற்போது விற்பனையினை நிறுத்தினாலும் இன்றுவரை RX100 மீதான மோகம் மக்களுக்கு குறையவில்லை. காரணம் அதன் விளம்பரமும் அதன் சத்தமும் சாலையில் செல்வோரை திரும்பி பார்க்க வைத்தது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு RX100 மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது .
இந்திய பைக் உலகில் ஆக்டிவா போன்ற 4 ஸ்ட்ரோக் என்ஜின் கொண்ட பைக்குகள் அறிமுகம் ஆகும் முன்பே குறைந்த எடையில் 2- ஸ்ட்ரோக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது பஜாஜ் சன்னி.
90களில் பைக்குகளை ஓட்ட கற்றுக்கொண்டிருந்த நபர்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கும் பிடித்த வாகனமாக பஜாஜ் சன்னி இருந்தது. இதன் விளம்பரம் அப்போது பிரபலமான ஒன்றாகும்.
வாகனங்களை பற்றி தெரியாத ஆதிவாசிகள் கூட இதனை ஓட்டினால் ராஜ பவனி போல உணர்வார்கள் என்பது போல இதன் விளம்பரம் இருக்கும்.
தற்போது ஸ்கூட்டர்களில் 4 ஸ்ட்ரோக் என்ஜின்கள் இருந்தாலும் அப்போதிருந்த பஜாஜ் சன்னி எப்போதுமே தனி ரகம் தான். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் இதனை பாராட்டி
RIDE THE RED HOT
SUPER LOOKER TEEN MACHINE
என கையொப்பமிட்ட விளம்பரம் அப்போது பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
பைக்குகளை காதலிக்கும் இளைஞர்களின் புதிய காதலாக வந்தது ஹீரோ ஹோண்டா சிடி100 என்றே கூறலாம், காரணம் இதுதான் நாட்டின் முதல் 4-ஸ்ட்ரோக் மோட்டார் சைக்கிள் வகைகளில் ஒன்று.
சல்மான்கான் இதன் விளம்பரத்தில் நடித்திருந்தபோது hero honda... honda bike என்ற பாடலை பாடி, பல பெண்களின் கனவு நாயகன் ஆனார்.
பஜாஜ் பல்சர் அறிமுகபடுத்தப்பட்டவுடனே இளைஞர்களின் மத்தியில் ஆர்வம் கிளம்பியது. இந்த பைக்கின் விளம்பரம் புதிய உத்தியாக இருந்தது. வழக்கமாக ஒரு பைக் விளம்பரம் என்றால் சாலைகளை தான் இருக்கும் ஆனால் இதில் மருத்துவமனையினை காட்டி அதில் பணியாற்றும் நர்ஸ்கள் இதனை பார்த்து பரவசம் அடையும் படி இந்த விளம்பரம் இருக்கும்.
பஜாஜ் பல்சர் 150சிசி மற்றும் 180சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தினர். இந்த விளம்பரத்தில் அதிக இளம் ஆண்களை கவரும் வகையில் இருந்த வாசகம் அப்போது பிரபலமானது.
ஹீரோ ஹோண்டா எப்போதும் தன்னை எரிபொருள்-பொருளாதாரம் சார்ந்த உற்பத்தியாளராகக் காட்டிக் கொள்கிறது. சந்தையில் CBZ அறிமுகப்படுத்தப்பட்டவுடன் , இளைஞர்களை கவரும் வகையில் ஹாலிவுட் படத்தில் வரும் காட்சிகளை போல விளம்பரத்தை உருவாக்கியது , பைக்கின் ஸ்டைலான தோற்றம் அதன் செயல்திறன் இப்போது வரை இளைஞர்களை கவர்ந்து வருகின்றது.
ஹீரோ ஹோண்டா CBZ ஆரம்பகாலத்தில் 150 -cc ரக பைக்குகளை அறிமுகபடுத்தியது அப்போதைய விளம்பரத்தில் MOTORCYCLING UNPLUGGED என்ற வாசகம் இருந்தது.
தற்போது பல பைக்குகள் புதிய மாடல்கள் , பல விளம்பரங்கள் வந்தாலும் 90 கள் தொடங்கி 2000 இறுதி வரை வந்த பைக்குகளின் விளம்பரங்கள் என்றுமே அழகானது ..
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust