Yashasvi Jaiswal: பானி பூரி விற்ற இளைஞன் இன்று இந்திய அணியின் நாயகன்- நெகிழவைக்கும் வரலாறு

இந்திய அணியின் டெஸ்ட் டீமில் இடம்பெற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிவரும் இவர், தற்போது 320 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார்
Yashasvi Jaiswal: பானி பூரி விற்ற இளைஞன் இன்று இந்திய அணியின் நாயகன்- நெகிழவைக்கும் வரலாறு
Yashasvi Jaiswal: பானி பூரி விற்ற இளைஞன் இன்று இந்திய அணியின் நாயகன்- நெகிழவைக்கும் வரலாறுtwitter
மழை அடித்தால், கூடாரத்திற்குள் தண்ணீர் புகுந்துவிடும். இரவில் உறங்க முடியாது. தண்ணீர் இல்லாத இடத்தை தேடி அங்கு அமர்ந்துகொள்வேன்
ஜெய்ஸ்வால்

ஒரு காலத்தில் தன் குடும்பச் சுமையை குறைப்பதற்காக தந்தையுடன் சேர்ந்து பானி பூரி விற்று வந்த சிறுவன், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி நாயகனாக திகழ்கிறார்.

21 வயதே ஆகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் முகமாகவும் மாறுவார் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 98 ரன்கள், அதிவேக அரைசதம், தான் இதுவரை விளையாடியுள்ள அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அல்லது அதிகபட்ச ரன்களை எடுத்துள்ளார் ஜெய்ஸ்வால்.

ஒரு பானி பூரி விற்ற இளைஞன் இன்று ஸ்டார் கிரிக்கெட்டாராக ஆன கதை தான் இந்த தொகுப்பு

Yashasvi Jaiswal: பானி பூரி விற்ற இளைஞன் இன்று இந்திய அணியின் நாயகன்- நெகிழவைக்கும் வரலாறு
Nikhil Kamath: கால் செண்டர் வேலை டு இந்தியாவின் இளம் பில்லியனர் - யார் இந்த நிகில்?

உத்திர பிரதேசம் சூரியா என்ற கிராமத்தில் பிறந்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவரது தந்தை ஒரு பெயிண்டர். ஜெய்ஸ்வாலுக்கு 11 வயது இருந்தபோது ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் பயிற்சிக்காக இவர்களது குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.

தந்தையின் சம்பளம் இவரது கிரிக்கெட் பயிற்சிக்கு போதவில்லை. இதனால் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வாலுடன் இணைந்து பானி பூரி விற்க தொடங்கினார்.

மும்பையிலிருந்த ஆஜாத் மைதானத்தில் பயிற்சி பெற விரும்பினார் யஷஸ்வி. அஜாத் மைதானம் வெகு தொலைவில் இருந்ததால், மைதானம் இருந்த பகுதியில் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

கடையில் வேலையும் பார்த்துக்கொண்டு கிரிக்கெட்டும் ஆட முடியாமல் போராடினார். ஜெய்ஸ்வாலுக்கு கிரிக்கெட் மீது தான் கவனம் அதிகமாக இருந்ததால் அவர் பணியாற்றிய கடையின் உரிமையாளர் திடீரென சிறுவனை வேலையிலிருந்து நீக்கினார்.

அதன் பிறகு, ஆஜாத் மைதானத்திற்கு சென்றார். அங்கு இருந்த கிரிக்கெட் பயிற்சியாளர் இம்ரான் என்பவரை தினமும் விடாது சந்தித்து, தனக்கு ஒரு வாய்ப்பை அளிக்குமாறு கேட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

”அப்போது ஒரு நாள் அவர் என்னிடம் வந்து, நீ இன்று விளையாட போகிறாய். நன்றாக விளையாடினால் இங்கேயே நீ தங்கி பயிற்சி பெற உனக்கு ஒரு கூடாரம் தருகிறேன் என்றார். எனக்கு அது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அன்று நான் சிறப்பாக விளையாடினேன், இம்ரான் சாரும் எனக்கு கூடாரத்தை வழங்கினார், கடவுளுக்கே நன்றி சொல்லவேண்டும்”

இந்த கூடாரத்தில் தான் சுமார் 3 ஆண்டுகள் தங்கினார் யஷஸ்வி. ”மழை அடித்தால், கூடாரத்திற்குள் தண்ணீர் புகுந்துவிடும். இரவில் உறங்க முடியாது. தண்ணீர் இல்லாத இடத்தை தேடி அங்கு அமர்ந்துகொள்வேன். வெயிலடித்தாலும் கடினம் தான். ஆனால் நான் எனது அந்த வாழ்க்கையை எஞ்சாய் செய்தேன். எனக்கு கிடைத்த இந்த வாழ்க்கை எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்று தோன்றியது” என்றார்.

கூடாரத்தில் தங்கியிருந்தபோது, அங்கு சுற்றியிருந்தவர்கள் சமயத்தில் ஜெய்ஸ்வாலை அடித்தும் துன்புறுத்தியதாக மற்றொரு பேட்டியில் கூறினார். தன்னை சமைக்கச் சொல்லி சண்டையிட்டதாகவும், சமைக்கவில்லை என்றால் உணவு வழங்கப்படாது எனவும் மிரட்டியுள்ளனர்.

அவரது கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள கூட உடன் யாரும் இருந்ததில்லை. எனினும், தன் மனதில் கடினமாக உழைக்கவேண்டும், என்ன இன்னல்கள் வந்தாலும் நான் அதை எதிர்த்து போராடவேண்டும், தன் இலக்கை அடையவேண்டும் என்பதே தனது குறிக்கோளாக இருந்ததாக கூறினார் ஜெய்ஸ்வால். சச்சின் போன்ற ஜாம்பவான்கள் மைதானத்தில் விளையாடுவதை பார்க்கும்போது அது இன்னும் ஊக்கமளிக்கும் எனவும் கூறினார்

Yashasvi Jaiswal: பானி பூரி விற்ற இளைஞன் இன்று இந்திய அணியின் நாயகன்- நெகிழவைக்கும் வரலாறு
Pathirana: தோனி பாராட்டும் இந்த இளைஞர் யார்? இவரை ‘Baby Malinga’ என்றழைப்பது ஏன்?

2015ல் மும்பையில் நடைபெற்ற கில்ஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் ஜெய்ஸ்வால். அந்த போட்டியில் 13 விக்கெட்கள் வீழ்த்தி, 319 ரன்களையும் சேர்த்திருந்தார்.

பள்ளி அளவிலான போட்டியில் இதுவே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

2019ஆம் ஆண்டு இவர் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார். அந்த போட்டியில் 12 சிக்சர்கள் 17 பௌண்டரியுடன் 154 பந்துகளில் 203 ரன்களை குவித்தார். இதுவே ஜெய்ஸ்வாலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. 6 போட்டிகளில் மொத்தம் 564 ரன்களும், 49 ஃபோர், 25 சிக்சர்கள், மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்திருந்தார் ஜெய்ஸ்வால்

2020 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் அறிவிக்கப்பட்டது. முதலில் அவரை அணிக்கு எடுக்க தயங்கின ஐபிஎல் ஃபிரான்சைசிகள். முதன் முதலில் மும்பை அணி தான் ஜெய்ஸ்வாலை ஏலம் கோரியது. தொடர்ந்து மற்ற அணிகள் ஏலத்தில் இணைய, 2.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜெய்ஸ்வாலை விலைக்கு வாங்கியது.

அதன் பிறகு அவரது வாழ்க்கை திசைத் திரும்பியது. கிடைத்த ஒரு ஒரு வாய்ப்பையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றார். இதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இடம் பயின்றார் ஜெய்ஸ்வால். கிரிக்கெட் உலகின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரையும் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

அவர்களின் அறிவுறையின் பேரில் தன் விளையாட்டை தினம் தினம் மேம்படுத்தி வருவதாக கூறினார் ஜெய்ஸ்வால். இந்த ஆண்டு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது ஐபிஎல் கரியரின் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜெய்ஸ்வால். 62 பந்துகளில் 124 ரன்களை குவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் அரைசதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.

மேலும் இந்திய அணியின் டெஸ்ட் டீமில் இடம்பெற்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிவரும் இவர், தற்போது 320 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி வருகிறார்

Yashasvi Jaiswal: பானி பூரி விற்ற இளைஞன் இன்று இந்திய அணியின் நாயகன்- நெகிழவைக்கும் வரலாறு
Rinku Singh: துப்புரவு தொழிலாளியாக இருந்த இவர் IPL ஹீரோவானது எப்படி? - நெகிழவைக்கும் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com