தனிநபர் தகவல் பாதுகாப்பு

அறிமுகம் மற்றும் பொதுவான விதிகள்

NewsSensetn-ன் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரது தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதில் NewsSensetn அக்கறை கொண்டுள்ளது.

NewsSensetn சேவைகளை உங்களுக்கு முழு அளவில் அளிப்பதற்கு, சில சமயங்களில் உங்களைப்பற்றிய தகவல்களை நாங்கள் பெற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

அதுபோன்ற தகவல்களை நீங்கள் அளிக்கும்போது, 1998 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஐக்கிய ராஜ்ஜியத்தின் தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு அவற்றை நாங்கள் கையாளவேண்டும் என்ற கடப்பாடு எம்மீது உள்ளது.

மற்றவர்களால் நடத்தப்படும் இணையதளங்களுக்கு இட்டுச் செல்லும் இணைப்புகள் எமது இணையதளங்களில் உள்ளன. வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு NewsSensetn பொறுப்பாகாது; அவற்றை பயன்படுத்துவதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு.

என்னைப்பற்றி எவ்விதமான தகவல்களை NewsSensetn சேகரிக்கும்

NewsSensetn இணையதளங்களிலிருந்து செய்திமடல், போட்டிகள், நேரடி இணைய உரையாடல், தகவல் பலகை உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கோ அல்லது அவற்றில் பங்கேற்பதற்கோ நீங்கள் விரும்பினால் உங்களது தனிநபர் தகவல்களை நாங்கள் கோரக்கூடும். இவற்றில், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, தொலைபேசி அல்லது கைத்தொலைபேசி எண், பிறந்த தேதி போன்றவையும் இதில் அடங்கலாம்.

கேட்கப்படும் தகவல்களை கட்டங்களில் நிரப்புவதன் மூலம், நீங்கள் தேர்ந்தெடுக்கும் சேவைகளை NewsSensetn மற்றும் அதன் சேவை வழங்குநர்கள் உங்களுக்கு வழங்குவதற்கு நீங்கள் அனுமதியளிப்பதாகிறது.

குக்கீஸ் என்கிற இணைய தகவல் சேகரிப்பு மென்பொருளை NewsSensetn இணையதளங்கல் பயன்படுத்துகின்றன.

ஒரு குக்கி என்பது, இணைய பாவனை தொடர்பான உங்களது விருப்பங்களைப் பதிந்துள்ள சிறிய தரவு ஆகும்.

உமது ஆர்வங்களுக்குப் பொருத்தமாக எமது இணையதளங்கள் காட்சியளிக்கச் செய்வதற்கு இவை அனுமதிக்கின்றன.

அனைத்து குக்கிகளையும் ஏற்பதாகவோ, குக்கி ஒன்றை ஏற்பதற்கு முன்னால் கணினி உங்களிடம் கேட்க வெண்டும் என்பதாகவோ அல்லது எப்போதும் குக்கீஸை ஏற்கவேண்டாம் என்பதாகவோ உங்களின் இணைய உலவியில் விருப்பத்தெரிவு செய்துகொள்ளலாம்.

இதேபோல உங்களின் ஐபி முகவரிகளையையும் நாங்கள் சேகரிக்கிறோம். (ஐபி முகவரி என்பது உங்கள் கணினி அல்லது வலயத்திலுள்ள வேறு கருவி இணையத்துக்கு வரும்போது அதற்கு நிர்ணயிக்கப்படும் பிரத்தியேக குறியீட்டு எண் ஆகும்.)
உங்களின் இணைய பாவனை அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், உங்களின் ஐபி முகவரிகள் மற்றும் குக்கீகளை பகுத்து ஆராயக்கூடிய மென்பொருட்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

உங்களின் தனிநபர் தகவல்களைச் சேகரித்து விபரங்களைத் தொகுத்து நீங்கள் யார் என்று கண்டறியும் வேலையை நாங்கள் செய்ய மாட்டோம். மேலும் தகவல் பதிவுகள் எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை அழிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திற்குள்ளிருந்து எமது சேவைகளைப் பெறுகிறீர்களா அல்லது வெளியிலிருந்து பெறுகிறீர்களா என்பதை நாங்கள் நிர்ணயிப்பதற்கும் ஐபி முகவரியை பயன்படுத்துகிறோம்.

நீங்கள் 16 அல்லது அதற்கு குறைவான வயதுடையவராக இருந்தால், NewsSensetn இணையதளத்தில் உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை அளிப்பதற்கு முன்னர், உமது பெற்றோர்/ உமக்கு பொறுப்பானவரின் அனுமதியைப் பெறவேண்டும். இவ்வாறு முன் அனுமதி பெறாதவர்கள் தங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்குவது அனுமதிக்கப்படாது.

என்னப் பற்றி சேகரிக்கும் தகவல்களை NewsSensetn எவ்வகையில் பயன்படுத்தும்?

உங்களின் தனிப்பட்ட தகவல்களை NewsSensetn குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும். இதில் சேவை நிர்வாக காரணங்களும் அடங்கும். அதாவது, நீங்கள் கோரி பதிவு செய்த சேவைகளுக்காக NewsSensetn உங்களை தொடர்புகொள்ளும் என்பதுதான் இதன் பொருள்.

உங்களின் தகவல்களை தந்தாக வேண்டிய சட்டரீதியான கட்டாயமோ அல்லது அனுமதியோ வராதவரை, அவற்றை நாங்கள் ரகசியமாகப் பாதுகாப்போம்.

புண்படுத்தக்கூடிய, பொருத்தமற்ற அல்லது எதிர்க்கத்தக்க கருத்துக்களை NewsSensetn குறித்தோ அல்லது NewsSensetn இணயதளத்திலோ நீங்கள் எழுதினாலோ அல்லது அனுப்பினாலோ, அல்லது ஏதேனும் தகாத நடவடிக்கைகளில் NewsSensetn இணையதளத்தில் நீங்கள் ஈடுபட்டாலோ, அத்தகைய உங்களின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு உங்களின் தனிநபர் தகவல்களை NewsSensetn பயன்படுத்தக்கூடும்.

எனது தனிநபர் தகவல்களை NewsSensetn எத்தனை காலத்திற்கு வைத்திருக்கும்?

வழங்கப்படுகின்ற சேவைக்கு எத்தனை காலம் உங்களின் தகவல்கள் தேவையோ அத்தனை காலத்திற்கு அவற்றை நாங்கள் வைத்திருப்போம். குறிப்பிட்ட NewsSensetn இணையதளத்திற்கு நீங்கள் பங்களிப்பவராக இருந்தால், உங்களின் தகவல்கள் எதற்காக அளிக்கப்பட்டனவோ அந்த நோக்கத்திற்கு எவ்வளவு காலம் தேவையோ அத்தனை காலத்திற்கு அவற்றை நாங்கள் வைத்திருப்போம்.

logo
Newssense
newssense.vikatan.com