அமேசான் மன்னிப்பு: ஷாக் அடிக்கும் ஆபத்துள்ள சேலஞ்சை 10 சிறுமிக்கு பரிந்துரை செய்த அலெக்சா

இதுகுறித்து தங்களுக்குத் தெரிய வந்தவுடன் தாங்கள் இந்த தவறை சரி செய்துவிட்டதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மன்னிப்பு கேட்ட அமேசான்

மன்னிப்பு கேட்ட அமேசான்

Amazon

Published on

நீங்கள் உட்கார்ந்த இடத்தில் அமேசானின் அலேக்சாவிடம் டிவியை ஆன் செய்யவோ உங்களுக்கு பிடித்த பாடலை ப்ளே செய்யவோ கேட்கலாம். ஏன் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதற்கான பதிலையும்கூட அலெக்சாவிடம் கேட்கலாம்.

அப்படி ஒரு 10 வயது சிறுமி கேட்ட கேள்விக்கு அலெக்சா அளித்த பதில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த சிறுமி ஏதேனும் சேலஞ்ச் குறித்து அலெக்சாவிடம் கேட்க அதற்கு டிக் டாக்கில் பிரபலமாக இருந்த ‘பென்னி சேலஞ்ச்சை’ (penny challenge) செய்து பார்க்கலாம் என்று கூறியுள்ளது.

அதாவது ஐஸ் பக்கெட் சாலஞ்ச், try not laugh challenge (சிரிக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்) என இணையத்தில் அவ்வப்போது ஏதேனும் ‘சேலஞ்ச்’ வலம் வருவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்..

அப்படி டிக் டாக்கில் பிரபலமானதுதான் இந்த பென்னி சாலஞ்ச். அதாவது ஏதேனும் மின் உபகரணத்தின் ப்ளக்கை சாக்கெட்டிற்குள் பாதியளவு சொருகிவிட்டு ரூபாய் நாணயத்தைக் கொண்டு அந்த ப்ளகை (மீதம் வெளியே தெரியும் ப்ளக்கில் இருக்கும் இரு கம்பிகளை) தொட வேண்டும்.

<div class="paragraphs"><p>ஷாக் அடிக்கும் சவால்</p></div>

ஷாக் அடிக்கும் சவால்

Alexa

எந்த ஒரு சேலஞ்ச் என்றாலும் டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பலர் கண்களை மூடிக் கொண்டு செய்வதுபோல மக்கள் இதையும் செய்தார்கள். பல பதின்வயது குழந்தைகளும் இதைச் செய்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டனர். பலர் இதனால் ஏற்பட்ட தீ விபத்து, மின்சார ஷாக் போன்றவற்றையும் பகிர்ந்தனர்.

இந்த சவால் ஒரு வருடத்திற்கு முன் டிரண்டானது. அப்போதே இதன் ஆபத்து குறித்துப் பல செய்தி வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தற்போது இந்த சேலஞ்சைதான் இணையத்தில் கண்டதாக அந்த சிறுமிக்கு பரிந்துரை செய்துள்ளது அலெக்சா. இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் கிறிஸ்டின் லிவ்டால் சமூக ஊடகத்தில் பகிரவே இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது.

இதுகுறித்து தங்களுக்குத் தெரிய வந்தவுடன் தாங்கள் இந்த தவறை சரி செய்துவிட்டதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அலெக்சாவிடம் சேலஞ்ச் குறித்து கேட்ட சிறுமி புத்திசாலித்தனமாக அதை செய்யாமல் இருந்துள்ளார்.

எனவே எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஏனென்றால் பொதுவாக உலோகங்கள் மின்சாரத்தை கடத்துபவை. மதுமட்டுமல்லாமல் இம்மாதிரியான செய்கை மின்சாரத்தோடு தேவையில்லாமல் விளையாடுவது போன்றது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com