மனித இனம் கண் முன்னே தெரியும் நீர், நிலம், காற்று போன்ற விஷயங்களைக் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத ஒரு விஷயத்தைக் குறித்தும் கடந்த பல தசாப்தங்களாக ஆராய்ந்து வருகிறது. அதன் பெயர் ஏலியன்.
ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? இருக்கிறது என்றால் எங்கு இருக்கிறது? அதை எப்படி கண்டுபிடிப்பது? அதனோடு எப்படி தொடர்பு கொள்வது? என அறிவியல் சமூகத்தின் முன் பல கேள்விகள் தேக்கி நிற்கின்றன. இந்த கேள்விகளுக்கு அவ்வப்போது ஒரு பதிலும் கொடுக்கப்படுகிறது.
இந்த முறை ஏலியன்களோடு தொடர்புகொள்ள குவான்டம் தகவல்தொடர்பு (Quantum Communication) முறையைப் பயன்படுத்தலாம் என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஒளித் துகள்களை போட்டான் என்போம். போடான்களின் குவான்டம் தன்மை மாறாமல் இன்டர்ஸ்டெல்லர் விண்வெளிப் பகுதியில் (சூரியனின் தாக்கம் இல்லாத பகுதி) ஒளித் துகள்களைக் கடத்த முடியும் என்றும், இதன் மூலம் விண்வெளியில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் புதிய ஆராய்ச்சி ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
குவான்டம் தகவல் தொடர்பு முறை, ஏலியன்களோடு தொடர்புகொள்ளக் கூடிய ஒரு வழியாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏலியன்களைக் கண்டுபிடிக்க விரும்பும் விஞ்ஞானிகள், குவான்டம் சிக்னல்களை பரிசோதிக்க வேண்டும். அதில் ஏதாவது ஆதாரங்கள் கிடைக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதீத திறமையுள்ள ஏலியன்கள் குவான்டம் தகவல் தொடர்பை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளார் இயற்பியலாளரான அர்ஜுன் பெரெரா. இந்த குவான்டம் தகவல்தொடர்பு குறித்து பூமியில் இருக்கும் விஞ்ஞானிகள் கூட ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
குவான்டம் தகவல் தொடர்பில், தகவலைச் சுமந்து செல்லும் துகள்கள், பூமியில் உள்ள மற்றவைகளோடு தொடர்பு ஏற்பட்டு, அதன் வலுவை இழக்கிறது. இதை ஆங்கிலத்தில் “decoherence” என்கிறார்கள்.
சூரியனின் தாக்கம் இல்லாத இடத்தில் குவான்டம் தகவல் தொடர்பு மூலம் தகவல்களைக் கடத்தும் போது, இந்த “decoherence” பிரச்னை இருக்காது அல்லது மிக மிகக் குறைவாக இருக்கும். எனவே விண்வெளியில் ஏலியன் நாகரிகங்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதை கண்டுபிடிக்க குவான்டம் தகவல்தொடர்பு உதவியாக இருக்கும் என அந்த ஆய்வறிக்கையில் இயற்பியலாளர் அர்ஜுன் பெரரா மற்றும் ஜேமி கல்டெரான் ஃபிகரோ (Jaime Calderón Figueroa) கூறியுள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு, சீனா விஞ்ஞானிகள் குவான்டம் தகவல்தொடர்பு மூலம் ஒரு காணொளி அழைப்பை மேற்கொண்டதாக சயின்டிஃபிக் அமெரிக்கன் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை சீனாவின் அந்த காணொளி அழைப்புதான் உலகில் உள்ள அறிவியல் சமூகம் குவான்டம் தகவல்தொடர்பில் கண்ட மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் இருக்கின்றனவா? புதிய விடை கொடுத்த ஆய்வு.
'ஏலியன் சிக்னலாக இருக்கலாம்' : சர்ச்சையான சீன ஆய்வு - என்ன, எங்கே?
என பல செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுநாள் வரை 'இதோ ஏலியனைக் கண்டுபிடித்துவிட்டோம்' என உறுதியாக எவராலும், எந்த ஒரு அமைப்பாலும் கூற முடியவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust