பிரபஞ்சத்தின் 95 சதவீதம் காணாமல் போய்விட்டதா? - இதுதான் உண்மை நிலவரம்

விண்மீன்களின் திரளான அண்டங்களின் ஈர்ப்பு விசை போன்றவற்றின் மீது இருண்ட பொருள் ஏற்படுத்தும் தாக்கங்கள் காரணமாக மட்டுமே வானியலாளர்கள் அது இருப்பதை மட்டும் அறிகிறார்கள்.
பிரபஞ்சத்தின் 95 சதவீதம் காணாமல் போய்விட்டதா?
பிரபஞ்சத்தின் 95 சதவீதம் காணாமல் போய்விட்டதா?Pexels
Published on

வானில் பார்க்கறீர்கள். பகலில் சூரியன், இரவில் நிலா மற்றும் நட்சத்திரங்கள் தெரிகின்றன. நமது சூரியக் குடும்பம், சூரியக் குடும்பம் சுற்றி வரும் பால்வெளி அண்டம் (விண்மீன் திரள்), அதைப் போல பல அண்டங்கள் (விண்மீன் திரள்கள்) இவைதான் பிரபஞ்சம் என்று புரிந்து கொள்கிறோம்.

பிரபஞ்சத்தின் புதிரை அவிழ்க்கும் இருண்ட திரவம்

உண்மை என்ன தெரியுமா? நமக்கு தெரிந்த பிரபஞ்சம் வெறும் 5% மட்டும்தான். மீதி 95% நமது கண்ணுக்கு மட்டுமல்ல, நமது விஞ்ஞானத்திற்கும் தெரியாது. இதுதான் யதார்த்தம். ஆகவே நமது பிரபஞ்சத்தின் 95% த்தைக் காணவில்லை என்றும் கூறலாம்.

ஆனாலும் அந்த தெரியாத 95% என்ன என்பதை அறிவியல் விளக்கவே செய்கிறது. பல பத்தாண்டுகளாக பிரபஞ்சத்தை கவ்வியிருந்த அந்த மர்ம முடிச்சு தற்போது அவிழ்க்கப்பட்டிருக்கிறது எனலாம்.

அதுதான் dark fluid எனப்படும் இருண்ட திரவம். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரவம் நமது பிரபஞ்சத்தின் புதிரை அவிழ்க்கலாம்.

இதற்கு முன்னர் நெகட்டீவ் மாஸ் எனப்படும் எதிர்மறை நிறை தான் பிரபஞ்சத்தின் 95% ஐக் கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்பினர். இதுதான் இருண்ட ஆற்றலையும் இருண்ட பொருளையும் ஒரே நிகழ்வாக பிரபஞ்சத்தில் கொண்டு வருகிறது.

டார்க் மேட்டர் எனப்படும் இருண்ட பொருள் மற்றும் டார்க் எனர்ஜி எனப்படும் இருண்ட ஆற்றல் இரண்டும் விஞ்ஞானிகளாலும் நவீன இயற்பியலாலாலும் ஒரு போதும் அளவிடவோ அல்லது விளக்கவோ முடியாத பிரபஞ்சத்தின் பகுதிகளை உருவாக்குகின்றன என்று நீண்ட காலமாக கருதப்பட்டது.

இருப்பினும் தற்போது வரை இந்த இரண்டும் எப்படி அண்டத்தின் தத்துவப் புதிருக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை விளக்குவதற்கு விஞ்ஞானிகளுக்கு வழியில்லை.

ஆக்ஸ்போர்டின் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜேம்ஸ் ஃபார்னெஸ், “இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றல் இரண்டையும் ஒரு வகையான எதிர்மறை ஈர்ப்பு கொண்ட ஒரு திரவமாக ஒன்றிணைக்க முடியும் என்று நாங்கள் இப்போது நினைக்கிறோம்", என்கிறார்.

மேலும் இது உண்மையாக இருந்தால் நமது காணாமல் போன 95% பிரபஞ்சத்திற்கு ஒரு அழகியல் தீர்வு இருந்திருக்கிறது. நாம் ஒரு கழித்தல் குறியீட்டை சேர்க்க மறந்து விட்டோம் என்று அவர் நகைச்சுவையாக ஆனால் அறிவியல் ரீதியாக உண்மையாக கூறுகிறார்.

பிரபஞ்சத்தின் 95 சதவீதம் காணாமல் போய்விட்டதா?
செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்
NewsSense

பிரபஞ்சத்தைப் பற்றிய நமது தற்போதைய புரிதல் என்ன?

பிரபஞ்சத்தின் மாதிரியைப் பற்றிய நமது தற்போதைய புரிதல் லாம்ப்டா சிடிஎம் LambdaCDM என்று அழைக்கப்படுகிறது. அது இருண்ட பொருள் (கரும்பொருள்) மற்றும் இருண்ட ஆற்றல் எப்படி இருக்கும் என்று சொல்வதில்லை.

மற்ற கவனிக்கக்கூடிய பொருட்களில் அவை ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளால் மட்டுமே நாம் இருண்ட பொருளையும், இருண்ட ஆற்றலையும் பற்றி அறிந்திருக்கிறோம்.

எதிர்மறை பொருளின் இருப்பு இருண்ட பருப்பொருளையும் ஆற்றலையும் ஒருங்கிணைக்கும் கோட்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று விஞ்ஞானிகள் முன்பு கூறியுள்ளனர்.

இங்கே சில உண்மைகளைப் பார்ப்போம்.

இருண்ட பொருள் என்பது அறியப்பட்ட பிரபஞ்சத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் (27%) கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்

இது ஒருபோதும் விஞ்ஞானிகளால் அறியப்படவில்லை. ஏனென்றால் அது ஒளியை பிரதிபலிக்காது. எனவே அதை நாம் பார்க்க முடியாது.

விண்மீன்களின் திரளான அண்டங்களின் ஈர்ப்பு விசை போன்றவற்றின் மீது இருண்ட பொருள் ஏற்படுத்தும் தாக்கங்கள் காரணமாக மட்டுமே வானியலாளர்கள் அது இருப்பதை மட்டும் அறிகிறார்கள்.

ஒரு முழுமையான இருண்ட அறையில் ஒரு விளக்கை எரிய விடுங்கள். அப்போது நாம் அந்த விளக்கின் ஜோதி அல்லது வெளிச்சத்தை மட்டும் பார்ப்போம். இதனால் உங்களைச் சுற்றியுள்ள அறை இல்லை என்று பொருளல்ல.

அதே போல இருண்ட பொருள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் அதை நேரடியாக கவனிக்க முடிவதில்லை.

இருண்ட பொருள்தான் வீண்மீன் திரள்கள் எனப்படும் அண்டங்களை ஒன்றாக வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. வேகமாக சுழலும் பொருட்களை அவற்றின் சொந்த ஈர்ப்பு விசையால் துண்டிக்கப்படுவதை அது நிறுத்துகிறது.

இருண்ட பொருள் பிரபஞ்சத்தில் 68% இருப்பதாக கருதப்படும் மற்றொரு அனுமானப் பொருளான இருண்ட ஆற்றலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அதாவது பிரபஞ்சத்தின் 95% இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பருப்பொருளால் ஆனது. அதாவது பிரபஞ்சத்தின் 5% தவிர மற்ற அனைத்தையும் நவநீன இயற்பியலால் விளக்க முடியாது.

பிரபஞ்சம் விரிவடைவதால் பொருள் அடர்த்தி குறைவாக இருக்கும் என்று முன்பு கருதப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டது. ஏனென்றால் இது இருண்ட பொருள் தொடர்பான பார்வைகளால் ஆதரிக்கப்படவில்லை.

பிரபஞ்சத்தின் 95 சதவீதம் காணாமல் போய்விட்டதா?
கேஜிஎஃப் 2: ரத்தம் சிந்திய கோலார் தமிழர் துயர வரலாறு - விரிவான தகவல்கள்
NewsSense

பிரபஞ்சத்தின் புதிரை அவிழ்க்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு குழு

ஆனால் பிரபஞ்சம் குறித்த இந்த விளக்க மாதிரியில் ஆக்ஸ்போர்டு குழு புதிய விசயம் ஒன்றைச் சேர்த்தது. அது creation tensor. இது எதிர்மறை நிறையை தொடர்ந்து உருவாக்க அனுமதிக்கிறது.

இதன் பொருள் பிரபஞ்சம் விரிவடையும் போது புதிய பொருளானா - எதிர்மறை நிறை திரவம் - நீர்த்துப் போகவில்லை. மேலும் இருண்ட பொருள் குறித்த கணக்கீடுகளுக்குள் அது நுழைகிறது.

ஆக்ஸ்போர்டு குழுவால் இயக்கப்படும் கணினி உருவகப்படுத்துதல்கள் - மாதிரிகள், விண்மீன் திரள்களின் கட்டமைப்பை ஒன்றாக வைத்திருப்பதாகக் கூறப்படும் டார்க் மேட்டர் ஹாலோஸின் செயல்பாட்டின் முதல் சரியான கணிப்பை வழங்கியது.

பெரும்பாலான விண்மீன் திரள்கள் மிக வேகமாகச் சுழல்கின்றன. அதனால் அவை தங்களைத் தாங்களே துண்டித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இது இருண்ட பொருளின் கண்ணுக்கு தெரியாத 'ஒளிவட்டம்' அவற்றை ஒன்றாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

புதிய ஆய்வின் ஒரு பகுதியாக இயங்கும் உருவகப்படுத்துதல்கள், நவீன ரேடியோ தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட இருண்ட பொருளின் ஒளிவட்டப் பொருத்தம் உருவாகும் என்று கணித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்க உதவும் அதிநவீன ரேடியோ தொலைநோக்கிகள் மூலம் நடத்தப்படும் சோதனைகளில் இருந்து டாக்டர் ஃபார்னஸின் கோட்பாட்டிற்கு ஆதாரம் கிடைக்கும்.

அப்போது நமது பிரபஞ்சத்தின் 95% ஏன் காணாமல் போனது என்பதற்கு உரிய விளக்கம் கிடைக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com