இந்த அண்ட பேரண்டத்தில் மனித இனம் மட்டும் தான் இருக்கிறதா? இந்த எளிய கேள்விக்கு இப்போதும் பல நாட்டு விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள், கல்வியாளர்கள் விடை காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட, ஏலியன்களைக் கண்டுபிடிக்க மனிதர்களின் நிர்வாண புகைப்படம், பைனரி கோட்கள் எல்லாம் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாயின.
இந்த அண்டத்தின் ஏதோ ஒரு மூலையில் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருப்பதையோ, ஏலியன்கள் இருப்பதற்கான சான்றுகளையோ வெளிக்கொணர பலரும் ஆராய்ந்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஓர் உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை.
தற்போது கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பென் சக்கர்மென் (Ben Zuckerman), வெள்ளை டுவார்ஃப் நட்சத்திரத்தைச் சுற்றி இருப்பதாகக் கூறப்படும் டைசன் ஸ்பீயர்களில் புத்திசாலித்தனமான ஏலியன்கள் வாழ்ந்து வரலாம் என கூறியுள்ளார். இவர் இயற்பியல் மற்றும் வானியல் பாடங்களைப் பயிற்றுவித்து வருகிறார்.
டைசன் ஸ்பியர் என்பது ஒரு கற்பனையான கட்டுமானம். இது நட்சத்திரங்களைச் சுற்றி கட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படி ஒரு கட்டமைப்பு ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டால், அது அந்நட்சத்திரத்தில் பெரும்பாலான சக்தியை எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. ஃப்ரீமென் டைசன் என்கிற இயற்பியலாளரைத் தொடர்ந்து இந்த பெயர் இது போன்ற கற்பனை கட்டுமானத்துக்கு வைக்கப்பட்டது.
ஒரு கோளில் ஏலியன்கள் வாழ்ந்து வருகின்றன என்றால், அவை, தங்கள் கோளமைப்பின் மைய நட்சத்திரத்தைச் சுற்றி டைசன் ஸ்பியரை உருவாக்கும் என பேராசிரியர் பென் சக்கர்மென் தன் ஆய்வில் கூறியுள்ளார். எனவே வெள்ளை டுவார்ஃப் நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள டைசன் ஸ்பியர்களை ஆராய்ந்தால், ஏலியன்கள் இருப்பு குறித்த விஷயம் தெரியவரும் என்றும் தன் ஆய்வில் கூறியுள்ளார் பென் சக்கர்மென்.
டைசன் ஸ்பியரை வைத்து இந்த பிரபஞ்சத்தில் எத்தனை ஏலியன் நாகரிகங்கள் இருக்கின்றன என்பதையும் விஞ்ஞானிகளால் கணக்கிட முடியும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஒரு கோளமைப்பில் டைசன் ஸ்பியர் இல்லை என்றால், அங்கு ஏலியன்கள் இருப்பதற்கான வாய்ப்பு கணிசமாகக் குறைவு என்றும் அந்த ஆய்வில் வாதிடப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் புதியது. ஆனால், வெள்ளை டுவார்ஃப் நட்சத்திரங்களளைச் சுற்றி இருப்பதாகக் கூறப்படும் டைசன் ஸ்பியர்களுக்கும், உயிர் வாழ்வதற்கும் எந்த வித நேரடியான தொடர்பும் இல்லை, அதோடு போதிய தரவுகளும் இல்லை என்பதால் இதை ஒரு முழுமையான தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என உலகில் உள்ள பல்வேறு அறிவியல் சமூகங்களும் கருதுகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust