பேக் டு தி ஃபியூச்சர்" எனும் ஸ்பில்பெர்க்கின் இயக்கத்தில் வெளிவந்த தொடர் படங்களைப் பார்த்திருப்போம். டைம் டிராவல் கதைகளில் இப்படங்கள் ஒரு மைல்கல். அதன் பின் சமீபத்தில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வந்த "டெனட்" படம் வரை ஏராளமான டைம் டிராவல் படங்கள் வெளிவந்துள்ளன. இதில் உள்ள கவர்ச்சியே நம்மால் நமது இளமைப் பருவத்திற்கோ இல்லை எதிர்காலத்திற்கோ பயணம் செய்ய முடியும் என்பதுதான்.
அறிவியல் உலகிலும் காலப்போக்கில் நாம் எதிர்காலத்திற்குச் செல்ல ஒரு வழி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இப்போது வெளியிடப்பட்ட ஆவணங்களின் தொகுப்பில், டைம் டிராவலின் சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளன.
பென்டகன் ஆவணங்கள் வெளியாகின
புதிதாக வெளியிடப்பட்ட பென்டகன் கோப்புகளின்படி, டைம் டிராவல் எனும் காலப் பயணம் மற்றும் புவியீர்ப்பு எதிர்ப்பு சாத்தியம் என்பது வெளியாகியிருக்கிறது. இந்த அறிவியல் முன்னேற்றம் பிற உலகங்களுக்குச் செல்ல மனிதர்களால் பயன்படுத்தப்படலாம். பென்டகன் என்பது அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் ஆகும்.
தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையைத் தொடர்ந்து நான்கு வருடச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சுமார் 1,500 பக்க கோப்புகளை தி சன் ஆன்லைன் இணையத் தளம் கையகப்படுத்தியது. இந்த ஆவணங்கள் பென்டகனின் இரகசிய யுஎஃப்ஒ எனப்படும் வேற்று கிரக விண்கலன்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதை மேம்பட்ட விமான அச்சுறுத்தலை அடையாளம் காணும் திட்டம் என்று அழைக்கிறார்கள் (AATIP Advanced Aviation Threat Identification Program).
விமானங்கள் மற்றும் விண்கலங்களை உருவாக்கப் புவியீர்ப்பு எதிர்ப்பு தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஒரு ஆவணம் விளக்குகிறது. "விண்வெளி நேரத்தைக் கையாளுவதன் மூலம் அதைத் திறமையாகச் செயல்படுத்த முடியும்" என்று அது கூறுகிறது.
புவியீர்ப்பு விசையை கட்டுப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது: "ஒளியை விட வேகமான பயணம்... மற்றும் நேர இயந்திரங்கள் போன்ற கவர்ச்சியான அதிசயத்தக்க நிகழ்வுகளை உருவாக்க முடியும். விண்வெளி நேரத்தில் உள்ள புழு துளைகள் எனப்படும் இருவேறுபட்ட உலகங்களின் நேரத்தை ஒரு துளையின் மூலம் கடக்கும் உத்தியை விண்வெளி நட்சத்திர பயணத்திற்கும் பயன்படுத்தப்படலாம்" என்று ஆய்வு மேலும் கூறுகிறது.
எதிர்கால விண்வெளி இயங்குதளங்கள் "ஒளி விண்வெளி விமானத்தை விட வேகமாகச் செயல்படுத்த அல்லது புவியீர்ப்பு எதிர்ப்பு வழியாக பேரியியற்கை ( Super Nature) பயணத்தை உருவாக்குவதற்குச் சுற்றியுள்ள விண்வெளி-நேர வடிவவியலை மாற்றியமைக்கும். மற்றும் இதற்கான அமைப்புகளை எவ்வாறு கொண்டிருக்கும்" என்றும் மற்றொரு ஆவணம் கூறுகிறது.
வெடிகுண்டு கண்டுபிடிப்பு என்று அழைக்கப்படும் இந்த ஆவணங்களைப் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA) வெளியிட்டுள்ளது. விண்வெளியில் "குடியேற" ஒரு பைலட் மூலம் பல விண்கலங்கள் எவ்வாறு விண்வெளிக்கு அனுப்பப்படும் என்பதையும் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. மனிதர்கள் தங்கள் மனதுடன் ரோபோக்களை எவ்வாறு இயக்கலாம் என்பது பற்றிய ஆய்வுகளையும் ஆவணம் குறிப்பிடுகிறது.
ஒரு நபரால் ஒரு பணியில் நான்கு விண்கலங்களுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது என்று ஆவணம் சொல்கிறது. ஆனால் இதை மேம்படுத்த நமது மூளையை உருவாக்க முடியுமா என்றும் ஆவணம் பரிசீலிக்கிறது.
"பல விண்கலங்களை இயக்குவதற்கான மனித திறனை மேம்படுத்துவதில் வரவிருக்கும் முக்கிய முன்னேற்றம் பல பணிகளின் அறிவாற்றல் அமைப்பைப் புரிந்துகொள்வதாகும்," என்று மேற்கண்ட ஆவணம் முடிகிறது.
மற்றொரு அறிக்கையில் அணுசக்தியால் இயங்கும் ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்கள் எவ்வாறு மனிதகுலத்தை ஊர்ட் மேகங்கள் எனப்படும் சூரியக் குடும்பத்தின் விளிம்பில் இருக்கும் பனி அடுக்குகள் மீது "பாலங்களை உருவாக்க" உதவும் என்பதைக் குறிப்பிடுகிறது. பூமியைப் போன்ற பிற கிரகங்களைக் கண்டறிவதற்கு இது உதவும்.
வேற்றுகிரகவாசிகளுடன் நாம் எவ்வாறு தொடர்புகொள்வது என்பது பற்றிய தகவல்களையும், வேற்றுகிரகவாசிகளை சந்தித்தவர்கள் அல்லது யுஎஃப்ஒக்களைப் பார்த்தவர்களின் உடல்நல பாதிப்புகள் குறித்த ஆய்வையும் இந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
AATIP மேம்பட்ட விமான அச்சுறுத்தலை அடையாளம் காணும் திட்டம் 2007 முதல் ஐந்து ஆண்டுகள் இயங்கியது. அதற்குத் தலைமை தாங்கியவர் லூயிஸ் எலிசோண்டோ. அவர் UFO – அடையாளமற்ற வேற்றுக்கிரக விண்கலன்களின் இருப்பு "நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது" என்று நம்புகிறார்.
இனி என்ன, நமது வாழ்க்கையில் இல்லாவிட்டாலும் இன்னும் ஒரு 50 அல்லது நூறு வருடங்களுக்குள் டைம் டிராவல் சாத்தியப்படலாம். அது இதுவரை புரியாத விண்வெளியின் இரகசியங்களைப் புரியவைப்பதோடு எதிர்காலத்தில் பூமிக்கு ஆபத்து வந்தால், மனிதக் குலம் உள்ளிட்ட ஜீவராசிகள் வேறு கிரகத்தில் வாழும் வழியும் கண்டுபிடிக்கப்படலாம். கோட்பாட்டளவில் உள்ள இந்த ஆய்வு விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்ப்போம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com