"செயற்கை சூரியன்" என்று அழைக்கப்படும் சீனாவின் புதிய அணுக்கரு இணைவு உலை அதிகாரப்பூர்வமாக இயக்கப்பட்டது.
அணு உலை நமது சூரியனை விட ஐந்து மடங்கு அதிக வெப்பத்தை 17 நிமிடங்களுக்கு தக்க வைத்துக் கொள்ளும் சாதனையை படைத்துள்ளது.
Experimental Advanced Superconducting Tokamak (EAST) என அழைக்கப்படும் செயற்கை சூரியன், பரிசோதனையின் போது 70,000,000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தொட்டதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது சுத்தமான ஆற்றலைப் பெறுவதில் ஒரு புரட்சிகரமாற்றம் என்றே சொல்லலாம்.
தொடக்கத்தில், நமது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களில் நிகழும் ஒத்த எதிர்வினைகளைப் பின்பற்றுவதன் மூலம் முடிவில்லாத சுத்தமான ஆற்றலை வழங்குவதே சீனாவின் இந்த செயற்கைச் சூரியனின் குறிக்கோள்.
இந்தத் திட்டத்திற்காக சீனா 943 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது. மேலும் இச்சோதனை ஜூன், 2022 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அணுக்கரு இணைவு மனிதர்களுக்கு சுத்தமான ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால் அத்தகைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் ஆராய்ச்சியும் மிகவும் கடினமாகும். பல பத்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்த பின்னரும் கூட, அணுக்கரு இணைவு உலைகள் ஆய்வக அமைப்புகளில் மட்டுமே ஆற்றலை உருவாக்க முடியும்.
நமது சூரியன் போன்ற மாபெரும் நட்சத்திரங்களின் இயற்பியலை நகலெடுப்பதன் மூலம், அணுக்கரு இணைவு உலைகள் அணுக்கருக்களை ஒன்றிணைத்து பாரிய அளவில் ஆற்றலை உருவாக்குகின்றன. பின்னர் அவை மின்சாரமாக மாறக்கூடும். முக்கியமாக - நமது ஆற்றல் வறட்சிக்கு ஒரு முடிவு கட்டும்!
புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் நச்சுக் கழிவுகள் இல்லாத நிலையில், அணுக்கரு இணைவு நமது தற்போதைய முறைகளை விட தூய்மையானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
இன்டிபென்டன்ட் இதழில் வந்த செய்தியின் படி, சீனாவின் அணுக்கரு இணைவு குழுவும் பிரான்சில் இதேபோன்ற திட்டத்தை உருவாக்கும் குழுவிற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்க உள்ளது. சர்வதேச தெர்மோநியூக்ளியர் எக்ஸ்பெரிமென்டல் ரியாக்டர் எனப்படும் ITER ஆனது ஒருமுறை கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய அணுஉலையாக மாறும்.
சீன விஞ்ஞானிகளின் சமீபத்திய சாதனை, குறைந்தபட்ச கழிவுப் பொருட்களுடன் சுத்தமான மற்றும் வரம்பற்ற ஆற்றலைத் திறக்கும் நாட்டின் தேடலில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். "இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஒரு திருப்புமுனையாகும். இதன் இறுதி இலக்கு நீண்ட காலத்திற்கு வெப்பநிலையை நிலையான மட்டத்தில் வைத்திருக்க வேண்டும்" என்று சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள தெற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் இயக்குனர் லி மியாவ் கூறினார்.
ஆனால், சீனாவின் சோதனையான ‘செயற்கை சூரியனுக்கு’ இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜியாமென் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் பொருளாதார ஆராய்ச்சிக்கான சீன மையத்தின் இயக்குனரான லின் போக்வாங்கின்
ஆனால் அதிக பிளாஸ்மா வெப்பநிலையை அடைந்த ஒரே நாடு சீனா அல்ல. 2020 ஆம் ஆண்டில், தென் கொரியாவின் KSTAR உலை பிளாஸ்மா வெப்பநிலையை 100 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கு மேல் 20 வினாடிகளுக்குப் பராமரித்து புதிய சாதனை படைத்தது. இருப்பினும் சீனாவின் செயற்கைச் சூரியன் தொடர் ஆய்வுப் பணிகளில் இருப்பதோடு அதை எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டத்தோடு நடக்கிறது.