Aliens : 100 ஆண்டுகளாய் வேற்றுகிரகவாசிகளுடன் பேச முயலும் மனித குலம் - முழுமையான வரலாறு

இதை ஏதோ கிண்டல் என்று நினைக்காதீர்கள். முதலில் சமீபத்தில் நடந்த முயற்சியை ஒன்றைப் பற்றி பேசலாம். வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் நம்பிக்கையில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் நமது கேலக்சி அல்லது அண்டம் முழுவதும் பைனரி-குறியீடு செய்யப்பட்ட செய்தியை உருவாக்கியுள்ளது.
Aliens
AliensNewsSense
Published on

மனிதகுலம் ஒரு ஆர்வமுள்ள இனம். எப்போதும் எதையாவது கண்டுபிடிக்க முயற்சி செய்கிறோம். நமது ஆர்வமும் புதியவற்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளும் ஒரு போதும் ஓய்வதில்லை.

நமக்குத் தெரிந்ததை விட, நம்மால் பார்க்க முடிந்ததை விட, நம்மிடம் இருக்கும் புதிய விசயங்களும், அறிவும் மிக அதிகம். மேலும் பலவற்றைத் நாம் முடிவேயில்லாமல் தேடுகிறோம்.அது நமது சொந்தச் சுற்றுப்புறங்கள், நமது சொந்த நாடு, நமது சொந்தக் கண்டம் அல்லது நமது சொந்தக் கிரகம் என்பதொடு முடிந்து விடுவதில்லை.

பலவற்றிற்கான நமது தேடலில் ஆர்வம் குன்றாத ஒன்றுதான் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வது. மனிதர்களில் சிலர், புகழ்பெற்ற வேற்றுகிரகவாசிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Aliens
Aliens NewsSense

இதை ஏதோ கிண்டல் என்று நினைக்காதீர்கள். முதலில் சமீபத்தில் நடந்த முயற்சியை ஒன்றைப் பற்றி பேசலாம். வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் நம்பிக்கையில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் நமது கேலக்சி அல்லது அண்டம் முழுவதும் பைனரி-குறியீடு செய்யப்பட்ட செய்தியை உருவாக்கியுள்ளது.

கம்ப்யூட்டிங் மற்றும் எலக்ட்ரானிக் அமைப்புகளில், பைனரி-குறியீடு செய்யப்பட்ட தசமம் என்பது, தசம எண்களின் பைனரி குறியாக்கங்களின் ஒரு வகுப்பாகும். அங்கு ஒவ்வொரு இலக்கமும் நிலையான எண்ணிக்கையிலான பிட்களால் குறிக்கப்படுகிறது. பொதுவாக நான்கு அல்லது எட்டு. சில நேரங்களில், ஒரு குறி அல்லது பிற அறிகுறிகளுக்கு சிறப்பு பிட் வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன

இந்த பைனரி குறியீடு செய்யப்பட்ட செய்தி "Becon in the Galaxy" என்று அழைக்கப்படுகிறது. கிரகங்களுக்கு இடையேயான செய்தியில் தகவல்தொடர்பு பற்றிய அடிப்படை எண்கணிதம் மற்றும் இயற்பியல் கோட்பாடுகள், மனித வடிவத்தின் டிஜிட்டல் புகைப்படங்கள், DNA மரபணு கூறுகள் மற்றும் சூரிய குடும்பம், பூமியின் அமைப்பு ஆகியவற்றின் நேர-முத்திரை சித்தரிப்பு உட்பட பரந்த அளவிலான தகவல்கள் இதில் உள்ளன. இதன் மூலம் வேற்றுக்கிரகவாசிகள் பதிலளிப்பதை வரவேற்கும் குறிப்போடு இந்த பைனரி குறியீடு செய்தி முடிவடைகிறது.

வேற்றுக்கிரக பச்சை குட்டி மனிதர்களுடன் பேசுவதற்கான தேடல் உண்மையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கியது. ஜோசப் ஜோஹன் வான் லிட்ரோ என்ற ஆஸ்திரியருடன் இது தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டின் வானியலாளர் ஒருவர் வேற்றுகிரகவாசிகளை எவ்வாறு தொடர்பு கொள்ள விரும்பினார் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள. ஆமாம் அப்போது நிச்சயமாக அவர்களிடம் தொழில்நுட்பம் இல்லை. தொழில்நுட்பம் இல்லாமல் எப்படி தொடர்பு கொள்ள முடியும் என்று நீங்கள் நினைக்கலாம்.

NewsSense
Aliens
UFO வரலாறு : உண்மையில் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா ?

வானியலாளர் வான் லிட்ரோ முன்மொழிந்தது மிகவும் வித்தியாசமானது. அவர் சஹாரா பாலைவனத்தை எரிக்க விரும்பினார். சஹாராவில் ஜியோ மெட்ரிக் எனப்படும் வடிவியல் வடிவங்களின் அடிப்படையில் மிகப்பெரும் அகழிகளை தோண்டி, அதில் மண்ணெண்ணெய் நிரப்பி அதை எரிக்க வைப்பது அவரது திட்டம்.

'நாங்கள் இங்கே இருக்கிறோம்' என்பதை அறிவிக்கும் ஒரு கலங்கரை விளக்கமாக அந்த பெரிய தீப்பிழம்பு செயல்பட வேண்டும் என்பதே அவரது யோசனை.

1960 களில், வேற்றுகிரகவாசிகளைத் தொடர்பு கொள்ள மற்றொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1962 ஆம் ஆண்டு சோவியத் விஞ்ஞானிகள் வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகத்திற்கு ரேடியோ டிரான்ஸ்மிட்டரை குறிவைத்து ஒரு செய்தியை அனுப்பினார்கள். இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் அஸ்ட்ரோபயாலஜி படி, இது ஒரு பெரிய குறியீட்டு செய்தி மற்றும் ஒரு புதிய கிரக ரேடாருக்கான சோதனை ஓட்டம். அதாவது ரேடியோ அலைகளை விண்வெளிக்கு அனுப்பும் தொழில்நுட்பம்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு, 1974 ஆம் ஆண்டில் மற்றொரு விஞ்ஞானிகள் குழு புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகத்திலிருந்து மெஸ்ஸியர் 13 என்று அழைக்கப்படும் நட்சத்திரங்களின் கூட்டத்தை நோக்கி ஒரு செய்தியை அனுப்பியது. இந்த நட்சத்திரக் கூட்டம் பூமியிலிருந்து 25,000 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.

Aliens
வேற்று கிரக வாசிகள் : ஏலியன்களை தேடும் முயற்சியில் வியக்க வைக்கும் சாதனை

இந்த முறை செய்தியானது பைனரி குறியீடு அல்லது கணிதம் மற்றும் அறிவியல் மொழியில் இருந்தது. மேலும் மனித குச்சி உருவம் (கழிப்பறை கதவுகளில் ஆண்,பெண் உருவங்களை கார்ட்டூன போன்று போட்டிருப்பார்களே, அது போன்ற அடையாள வடிவம்), டிஎன்ஏ எனப்படும் மரபணு அமைப்பு, கார்பன் அணுவின் மாதிரி மற்றும் தொலைநோக்கியின் வரைபடம் ஆகியவை இந்த செய்தியில் இருந்தது.

1977 இல் இரண்டு விண்கலங்கள், வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகியவை ஒலிப்பதிவுகளுடன் ஏவப்பட்டன. இசை, நமது கிரகத்தின் சுற்றுப்புற ஒலிகள் மற்றும் பூமி மற்றும் சூரிய குடும்பத்தின் 116 படங்களோடு அந்த விண்கலங்கள் புறப்பட்டன.

இப்போது நீங்கள் காற்றில் ராட்சச பலூன் மூலம் விளம்பரம் செய்வது பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் விண்வெளியில் விளம்பரம் செய்வது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

2008 ஆம் ஆண்டில், டோரிடோஸ் எனப்படும் சிப்ஸ் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் அதன் விளம்பரத்தை நமக்கு வெளியே உள்ள மற்றொரு நட்சத்திர குடும்பத்திற்கு அனுப்பியது. 42 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள உர்சா மேஜரிஸ் விண்மீன்தான் இந்த விளம்பரத்தின் இலக்கு.

Aliens
Aliens : "என்னை வேற்று கிரகவாசிகள் கடத்தப் பார்க்கிறார்கள்" - அஞ்சும்

இப்படி நிஜ அறிவியல் உலகம் வேற்றுகிரகவாசிகளைத் தொடர்புகொள்வதில் முனைப்பாக இருக்கும் போது அறிவியல் புனைகதை உலகம் சும்மா இருக்குமா? 2010 இல் ஸ்டார் ட்ரெக் திரைப்படத்தில் கிளிங்கன் மொழியில் எழுதப்பட்ட ஒரு செய்தியானது ஹாலந்தில் ஒரு கிளிங்கன் ஓபராவில் கலந்து கொள்ள வேற்றுக்கிரக வாசிகளை அழைத்தது.

இந்த அழைப்பு இன்னும் விண்வெளியில் சுற்றித் திரிந்து வேற்றுக்கிரக வாசிகளைக் கண்டுபிடிப்பதற்காகக் காத்திருக்கிறது.

சில வல்லுநர்கள் வேற்றுக்கிரகவாசிகளின் நாகரீகத்தை அடைவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறார்கள். மறைந்த மேதை ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட மற்றவர்கள், வேற்று கிரகவாசிகளை தொடர்பு கொண்டு வரச்செய்யும் செயலை முட்டாள்தனமான செயல் என்று நம்புகிறார்கள்.

நாம் உண்மையில் வேற்றுகிரகவாசிகளை தொடர்பு கொள்ளும் போது என்ன நடக்கும் என்பதை காலம் சொல்லும். அது கெட்டதை விட நல்லதாக இருக்கும் என்று நம்புவோம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com