Hobbits : விஞ்ஞான சமூகத்தை உலுக்கும் பழங்கால சிறிய மனிதன் - ஆச்சரிய தகவல்

டோல்கீன் உருவாக்கிய குணாதிசயத்தை ஒத்த ஒரு மூதாதையர் உண்மையில் இருப்பதாக நமக்குச் சொல்லப்பட்டால்... ஆமாம் பலரது கருத்துக்களின்படி, இந்த பண்டைய மனிதர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.
Lord of the Rings
Lord of the RingsTwitter
Published on

நவீன யுகத்தில் ஒரு பழங்கால மனிதனைப் பற்றிய உண்மைகள் விஞ்ஞான சமூகத்தை உலுக்குகின்றன. அது குறித்து சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

மிகவும் பிரபலமான புத்தகம் மற்றும் திரைப்படத் தொடரான ​​லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் எனும் ஹாலிவுட் படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம் அதில் வரும் ஹாபிட்ஸ் எனப்படும் உயரம் குறைந்த சிறிய மனிதர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்கள் நம்மைப் போலத் தோற்றமளித்தாலும் குள்ளமான மனிதர்களாக இருப்பார்கள். படத்தில் அவர்களுக்கென்றே ஒரு கிராமம் உண்டு. அந்தக் கிராமத்தின் வீடுகள், சாலைகள் அனைத்தும் அந்த சிறிய மனிதர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும். நம்மைப் போன்றவர்கள் இடுப்பு குனிய நுழைந்தால்தான் அந்த வீடுகளுக்குள் போக முடியும்.

ஜே.ஆர்.ஆர் டோல்கீன் என்பவர் ஒரு ஆங்கில எழுத்தாளர், கவிஞர், தத்துவவியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர்தான் ஹாபிட் மற்றும் தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் கற்பனைப் படைப்புகளின் ஆசிரியராக அறியப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் 1892 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனில் 1973 இல் இறந்து போகிறார்.

ஜே.ஆர்.ஆர் டோல்கீன்
ஜே.ஆர்.ஆர் டோல்கீன்Twitter

டோல்கீன் உருவாக்கிய குணாதிசயத்தை ஒத்த ஒரு மூதாதையர் உண்மையில் இருப்பதாக நமக்குச் சொல்லப்பட்டால்... ஆமாம் பலரது கருத்துக்களின்படி, இந்த பண்டைய மனிதர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

ஆம், நீங்கள் மேலே படித்தது உண்மைதான். ஓய்வுபெற்ற மானுடவியலாளரான கிரிகோரி ஃபோர்த் தனது புதிய புத்தகமான 'பிட்வீன் ஏப் அண்ட் ஹ்யூமன்' (Between Ape and Human) இல் முன்வைத்த கூற்றுகளின்படி, ஹோமோ புளோரெசியென்சிஸ் என்ற இனம் இன்னும் உயிருடன் இருக்கிறது. இது இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் வாழ்வதோடு நவீன யுகத்திலும் தப்பிப் பிழைத்திருக்கிறது.

ஹோமோ புளோரெசியென்சிஸ் என்பது 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்களின் வருவதற்கு முன்பு இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் வசித்து வந்த சிறிய தொன்மையான மனித இனமாகும். 2003 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் உள்ள புளோரஸ் தீவில் உள்ள லியாங் புவா என்ற இடத்தில் சுமார் 1.1 மீ உயரமுள்ள நபரின் எச்சங்கள், எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Lord of the Rings
விண்கல்லில் இருந்து தோன்றியதா பூமியின் முதல் உயிர்? - ஆய்வுகள் கூறும் ஆச்சர்ய தகவல்
மனித மூதாதையர்கள்
மனித மூதாதையர்கள் Twitter

அதன் சிறிய உயரம் காரணமாக இந்த இனம் 'ஹாபிட்' என்று டோல்கீனின் கற்பனைப் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. இதன் உயரம் 4 அடிக்கு கீழ் இருந்ததாக நம்பப்படுகிறது. இது தோராயமாக 3 அடி, 6 அங்குலம் அல்லது 106 சென்டிமீட்டர் உயரம் இருக்கும்.

அவர்கள் அவர்களது வரலாற்றுக் காலத்தில் கைகளால் கருவிகளை உருவாக்குபவர்களாக இருந்தனர். இப்போது வரை, அவர்களின் பரிணாம வளர்ச்சியின் வரலாறு பற்றி அதிகம் அறியப்படவில்லை.

நவீன காலத்தில், ஃப்ளோர்ஸ் தீவில் ஹாபிட் போன்ற சிறிய மனிதர்களை நம்மைப் போன்ற நவீன மனிதர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் நம் முன்னோர்களாக இருக்கலாம் என்று மானுடவியலாளர் கிரிகோரி ஃபோர்த் வாதிடுகிறார்.

லைவ் சயின்ஸ் பத்திரிகையிடம் பேசிய அவர், இந்த இனம் எப்போது அழிந்தது என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது இது அழிந்துவிட்டதா என்பது கூட எங்களுக்குத் தெரியாது" என்று கூறினார்.

Lord of the Rings
ஹாபிட் : மனித குல மூதாதையர்கள் இன்னும் இந்தோனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?

இருப்பினும், இந்த கூற்று குறித்து உலகெங்குமுள்ள நிபுணர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இருபது இலட்சம் மக்கள் வசிக்கும் ஒரு தீவில் ஒரு மூதாதை இனம் ரகசியமாக வாழ்வது சாத்தியமற்றது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஹோமோ ஃப்ளோரெசியன்சிஸ் உண்மையில் இன்று இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். இது சாஸ்க்வாட்ச் அல்லது பிக்ஃபூட் போன்ற மற்றொரு புதிராக இருக்கலாம். பிக்ஃபூட், பொதுவாக சாஸ்க்வாட்ச் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது வட அமெரிக்காவின் காடுகளில் வசிப்பதாகக் கூறப்படும் குரங்கு போன்ற உயிரினமாகும். ஆனால் இதை விஞ்ஞானிகள் ஒரு கட்டுக்கதை என்கிறார்கள்.

ஆனால் வேற்றுகிரக உயிரினங்கள் பற்றிய கதைகள் எப்போதும் மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவது போல ஹாபிட் எனப்படும் இந்த சிறிய மூதாதையர் இனம் பற்றிய கதைகளும் மக்களின் ஆர்வத்தைத் தூண்டி விடுகிறது. மக்களும் இது குறித்து விடாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். விஞ்ஞானிகளும் பதில் சொல்லி சொல்லி களைத்துப் போகிறார்கள்.

Lord of the Rings
Myths : நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் 10 கட்டுக்கதைகள் - Interesting Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com