50 வார்த்தைகள் வரை 'பேசும் காளான்கள்' - வியக்க வைக்கும் ஆய்வு

காளான்களின் வேர் போன்ற அமைப்பு ஹைப்பே. இதன் மூலமாக மின் விசைகளை காளன்கள் உருவாக்குகின்றன. இது மனித நரம்பு உணர்வுகளை கடத்துவதை ஒத்திருக்கிறது. என ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
Fungus
FungusTwitter


மழைக்காலத்தில் பட்டுப்போன மரங்களிலும் புற்தரைக்கு நடுவிலும் வெள்ளையாக, கொஞ்சம் பழுப்பு நிறமாக காளான்கள் வளர்ந்திருப்பதைக் காணலாம். கடையில் பாக்கெட்டில் நாம் வாங்கும் போது தவிர இவற்றை நாம் கண்டுகொள்வதில்லை. அமைதியாக சொற்ப நாட்கள் பூமிக்கும் விசிட் அடிக்கும் இந்த காளான்களும் நம்மைப் போல ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் எனக் கூறினால் நம்ப முடிகிறதா? ஆனால் அவையும் பேசிக்கொள்வதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

இயற்கையில் விலங்குகளும் பூச்சிகளும் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாரிக்கொள்வது நாம் அறிந்ததே. ஆனால் தாவரங்கள்? பூஞ்சைகள் பேசுவது ஆச்சயமானதாகவும், நம்புவதற்கு கடினமாகவும் தான் இருக்கிறது. காளான்கள் அவை அனுப்பும் மின் சமிக்ஞைகள் (Electronic Signals) மூலமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதாக அந்த ஆய்வு கூறுகின்றது. இந்த எலெக்ட்ரானிக் சிக்னல்களின் கணித சமன்பாட்டைத் தீர்ப்பதன் மூலம் அவற்றின் வடிவத்தை கண்டறிந்துள்ளனர்.

காளான்களின் வேர் போன்ற அமைப்பு ஹைப்பே. இதன் மூலமாக மின் விசைகளை காளான்கள் உருவாக்குகின்றன. இது மனித நரம்பு உணர்வுகளை கடத்துவதை ஒத்திருக்கிறது.

Split Gills
Split GillsTwitter

மரங்களிலிருந்து சத்துக்களை உறிஞ்சுவதன் மூலம் காளான்கள் உயிர் வாழ்கின்றன. மரங்களில் முளைத்திருக்கும் காளான்கள் அதிக அளவில் எலக்ட்ரானிக் சிக்னல்களை வெளியிடுகின்றன. இது சார்ந்திருக்கும் மரத்துடன் “மின் மொழியில்” பேசுகின்றன அல்லது உணவு, சேதம் குறித்த தகவல்களை அதன் ஹைபே உடன் இணைந்திருக்கும் மற்ற காளன்களுடன் பகிர்ந்துகொள்கின்றன.

காளான்களின் மின் சிக்னல்களின் அமைப்பை ஆய்வு செய்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் அடமட்ஸ்கி, என்கொய். ஸ்பிலிட் கில், கோஸ்ட், கேர்டர் பில்லர் ஆகிய நான்கு வகை காளான்களின் சிக்னல்களின் அமைப்புகளைக் குறித்து ஆய்வை மேற்கொண்டார்.

மைக்ரோ எலெக்ட்ரோட் எனும் நுண்ணிய கருவியைப் பயன்படுத்தி காளானின் மைசிலியா எனும் அடிப்பகுதி மூலமாக இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

Fungus
ஆழ்கடலில் அதிகரிக்கும் குப்பைகள், ஆக்டோபஸ்களின் வீடுகளாகும் அவலம்


“மனிதர்கள் பேசுவதற்கும் காளான்கள் தகவல் பரிமாற்றத்துக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதா என தெரியாது. தொடர்பு இருக்க வாய்ப்பும் மிகக் குறைவே. ஆனால் பல்வேறு உயிரினங்கள் தகவல் தொடர்பினை மேற்கொள்வதற்கிடையில் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்வதிலே நாங்கள் அதிக ஆர்வத்துடன் இருந்தோம்” என ஆய்வாளர் ஆண்ட்ரிவ் கூறியிருக்கிறார்.

Fungus
ஆழ்கடலில் அதிகரிக்கும் குப்பைகள், ஆக்டோபஸ்களின் வீடுகளாகும் அவலம்

Royal Society Open Science இதழில் வெளிவந்த இந்த ஆய்வில், மனிதர்கள் பேசும் மொழிகளில் இருக்கும் வார்த்தைகளை ஒத்த 50 வார்த்தைகள் வரை காளான்கள் பகிர்கின்றன எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைகள் ஓநாய்கள் ஊழைவிட்டு தன் கூட்டத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதைப் போலக் காளான்களால் பயன்படுத்தப்படுகின்றன என்பது ஆய்வாளரின் கணிப்பு.

Fungus
உலகை நடுங்க வைத்த செங்கிஸ்கான் கல்லறை - ஒரு மர்ம வரலாறு!

சிப்பி வடிவில் இருக்கும் ஸ்ப்லிட் கில்ஸ் எனப்படும் மரக் காளான்கள் மிகச் சிக்கலான அலைகளை உருவாக்குவதாக ஆய்வில் கூறப்பட்டது.

இந்த, மின் சிக்னல்கள் மூலம் காளான்கள் தகவல் தொடர்பினை மேற்கொள்கின்றன என்பதை பிற ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்ள இன்னும் அதிக தரவுகள் தேவை என்கிறார் ஆராய்ச்சியாளர். ஆனால் மனிதர்களைப் போலவே பூஞ்சைகளும் பேசிக்கொள்கின்றன என்கிற இந்த தகவல் அனைத்து உயிர்களையும் சமமென மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. மிக விரைவில் கூகுள் மொழிபெயர்ப்பில் நாம் காளான்களின் மொழியை எதிர்பார்க்கலாம்!

Fungus
எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com