மனச்சோர்வுக்கு மருந்தாகும் ’இசை’ - இந்த சிகிச்சை எப்படி வழங்கப்படுகிறது?
மனித வாழ்கையின் உணர்வுகளை தூண்டும் வகையில் இசை, முக்கியமானதாக இருக்கிறது.எந்த மொழியாக இருந்தாலும் மனிதனின் மனதோடு ஒன்றிய ஒன்றாக 'இசை' உள்ளது. இந்த இசையின் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
அது எப்படி என நீங்கள் கேட்கலாம். பொதுவாக நாம் சோர்வாக இருக்கும் போது பாடல்கள் கேட்போம், அந்த கணம் புத்துணர்சி அடைவதாக உணர்வோம் .
அதே போல குறிப்பிட்ட இசை தெரபி மூலமாக மனிதனின் குறைபாடுகளை தீர்க்க முடியும் என கூறுகின்றனர். சரி அப்படி என்ன இசை சிகிச்சைகள் இருக்கின்றன என வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
ரிசெப்டிவ் மியூசிக் தெரபி
ஒரு மனிதனின் குறிப்பிட்ட உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடலை கேட்பது ரிசெப்டிவ் மியூசிக் தெரபி என கூறப்படுகிறது.
ஆக்டிவ் மியூசிக் தெரபி
ஆக்டிவ் மியூசிக் தெரபி சற்று மாறுப்பட்டதாகும். இது நேரடியாக இசை நிகழ்ச்சியில் ஒருங்கிணைக்கிறது, அதாவது நேரடியாக இசை கருவிகளை வாசித்தல் , பாடல்களை எழுதி பாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை குறிப்பதாகும்.
இதில் பாடல் வரிகளை உருவாக்குதல் அல்லது பகுப்பாய்வு செய்வதன் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
குரூப் மியூசிக் தெரபி
குரூப் மியூசிக் தெரபி என்பது ஒரு குழுவாக இருந்து இசையினை உருவாக்குதல் ஆகும். இவ்வாறு உருவாகும் இசையின் மூலமாக தனிமைபடுத்துவதை குறைத்து சமூக உணர்வை உருவாக்க முடியும் என கூறுகின்றனர்.
ஆகவே கவலை மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டின் அறிகுறிகளையும் தணிப்பதில் இசை சிகிச்சை பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.எனவே, நீங்கள் கவலை அல்லது மனச்சோர்வுடன் போராடினால், இசை சிகிச்சை உங்களை குணப்படுத்த வாய்ப்பு உள்ளது. அப்படியும் மன அழுத்தம் குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews