அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகளை (UAP’s) ஆய்வு செய்ய நாசா ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறது. இந்த தகவலை நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது சம்பந்தமான அறிக்கையில், "UAP-கள் குறித்த அறிவியல் புரிதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதையும், தேசிய பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பில் அவை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராயும் நோக்கமாகக் கொண்டு அந்த குழு அமைக்கப்பட்டிருப்பதாக” நாசா தெரிவித்துள்ளது.
முன்னதாக, இராணுவ விமானிகளால் அடையாளம் காணப்பட்ட 144 UAP-களில் 143 நிகழ்வுகளை விளக்க முடியவில்லை என்று தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம் கடந்த ஜூன் மாதம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அவை என்னவென்று அவர்களுக்குத் துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், பறவைகள் அல்லது பலூன்கள் உட்படப் பல யூகங்களைத் தெரிவித்திருந்தனர். இல்லாவிட்டால் அவை, மேம்பட்ட ரஷ்ய அல்லது சீன தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.
ஸ்பேஸ் நியூஸ் தகவலின்படி, இந்த திட்டத்திற்கான மொத்த வரவு செலவு மதிப்பீடு 100,000 டாலர் என்று ஆய்வை மேற்பார்வையிடும் நாசா அதிகாரி டான் எவன்ஸ் கூறியிருக்கிறார்.
அரசாங்கங்கள், தனியார் நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் குடிமக்களால் சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆகியவற்றைச் சேகரித்து நடத்தப்பட இருக்கும் இந்த ஆய்வை முடிப்பதற்கு சுமார் ஒன்பது மாதங்கள் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust