Nasa : செவ்வாய் கிரகத்தில் வசிக்கப்போகும் 4 பேர் - புதிய ஆய்வு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்தால் எப்படியிருக்கும்? என்னென்ன சவால்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு முன்னோட்டமாக இந்த அனலாக் மிஷன் இருக்கும் என கூறியுள்ளனர்.
Nasa : செவ்வாய் கிரகத்தில் வசிக்கப்போகும் 4 பேர் - புதிய ஆய்வி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
Nasa : செவ்வாய் கிரகத்தில் வசிக்கப்போகும் 4 பேர் - புதிய ஆய்வி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்Twitter
Published on

மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக 4 பேர் மட்டும் செவ்வாய் கிரகத்து வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் பூமியில் இருந்தபடியே தான்!

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய தயார்படுத்தும் விதமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

செவ்வாயில் இருந்தால் எப்படி இருக்குமோ அதேப் போல உணர்வளிக்கக் கூடிய இருப்பிடத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அதில் 4 நபர்களும் ஒரு ஆண்டு காலம் வரைத் தங்கவைக்கப்படவுள்ளனர்.

பணியாளர் குடியிருப்புகள், ஒரு சமையலறை மற்றும் மருத்துவ அறை, பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, வேலை மற்றும் பயிர் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கான பிரத்யேக பகுதிகள், அத்துடன் தொழில்நுட்ப வேலை பகுதி மற்றும் இரண்டு குளியலறைகள் ஆகியவை அடங்கிய 3டி பிரிண்டட் தங்குமிடங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த அனலாக் மிஷன் மூலம் துல்லியமான தரவுகளை பெற முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

அனலாக் மிஷன் என்பது விண்வெளி போன்ற அமைப்பை பூமியில் உருவாக்கி அதில் மனிதர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்வதாகும்.

விண்வெளியில் தங்குவது, ரோபோக்களை கையாள்வது, வாழ்விடப் பராமரிப்பு, தனிப்பட்ட சுகாதாரம், உடற்பயிற்சி மற்றும் பயிர் வளர்ச்சி உள்பட பல விஷயங்களை 4 வீரர்களும் கற்றுக்கொள்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

மாதிரி செவ்வாய் கிரகம் உருவாக்கப்படும் போதே இவர்களுக்கு அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாக நாசா கூறியுள்ளது.

மார்ஸில் இருப்பது போலவே வரம்புகள், தனிமைப்படுத்தல் மற்றும் உபகரணங்கள் செயலிழப்பு போன்ற பிரச்னைகளை இந்த நபர்கள் சந்திக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nasa : செவ்வாய் கிரகத்தில் வசிக்கப்போகும் 4 பேர் - புதிய ஆய்வி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
செவ்வாய் கிரகம் ஏலியன்கள் : எந்தப் பகுதியில் இருக்கிறார்கள்? - கண்டுப்பிடிக்க புதிய யோசனை

நான்கு பேரும் குழுவாக விர்ச்சுவல் ரியாலிட்டி பயன்படுத்துதல், தகவல் தொடர்பு, பயிர் வளர்ச்சி, உணவு தயாரித்தல் மற்றும் சாப்பிடுதல், உடற்பயிற்சி, சுகாதார நடவடிக்கைகள், பராமரிப்பு வேலை, தனிப்பட்ட நேரம், அறிவியல் வேலைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ட்ரோன்கள், ரிமோட் ஆய்வுக் கருவிகளை பயன்படுத்துவதும் அவர்களின் முக்கிய வேலையாக இருக்கும் என நாசாவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனலாக் மிஷன் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு அடுத்தடுத்து 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளிலும் அனலாக் மிஷன்கள் நடத்தப்பட இருக்கின்றன.

Nasa : செவ்வாய் கிரகத்தில் வசிக்கப்போகும் 4 பேர் - புதிய ஆய்வி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
இதுவும் நம் பூமி தான் : ’நம்புங்க மக்கா’ வேற்று கிரகம் போல தோற்றமளிக்கும் 5 இடங்கள்

இந்த மிஷன் மூலம் செவ்வாய் கிரகத்தில் வாழும் போது குழுவினரின் செயல்திறன் மற்றும் உடல்நலம் எவ்வாறு மாறுகிறது என்பதை அறிய ஆவலாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

செவ்வாயில் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதை நாமும் தெரிந்துகொள்ளப் போகிறோம். இந்த மிஷனில் பங்கேற்பவர்களுக்கு விண்வெளியில், கடினமான டாஸ்க்களுடனான பிக் பாஸ் போட்டி போல இது இருக்கப்போகிறது!

Nasa : செவ்வாய் கிரகத்தில் வசிக்கப்போகும் 4 பேர் - புதிய ஆய்வி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
Mars என்ற பெயர் ஏன் கொடுக்கப்பட்டது தெரியுமா? - செவ்வாய் கிரகம் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com