மர்மமான முறையில் விரிவடையும் பிரபஞ்சம் - என்ன நடக்கிறது?

பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து காலம் பிரபஞ்சத்தை வெகு தூரத்துக்கு கூட்டி வந்திருக்கிறது. இந்த காலவோட்டத்தில் பிரஞ்சம் நிலையானதாக இல்லை என்றும் அது வளருவதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த கருத்தை விவரிக்கிறது இக்கட்டுரை
Universe
UniversePixabay

மனித குலம் தோன்றியதிலிருந்து இரவு வானத்தைப் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. அப்போது எண்ணிறந்த நட்சத்திரங்கள் மனிதர்களுக்குத் தெரிகின்றன. இன்றுவரை மனித குலத்தை ஆட்டிப் படைக்கும் கேள்வி, பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதே.

எட்வின் ஹப்பிள் எனும் விஞ்ஞானி தான் 1920 களில் பிரபஞ்சம் நிலையானது அல்ல, அது விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்து ஒரு நூறாண்டு கழித்து அவர் பெயர் சூட்டப்பட்ட ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பிரபஞ்சம் விரிவடைவது குறித்து ஒரு புதிய கணிப்பைச் செய்துள்ளது.

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி (The Hubble Space Telescope) என்பது 1990 ஆம் ஆண்டு விண்வெளியில் ஏவப்பட்டது. அது குறைந்த புவி சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆகும். விண்வெளி தொலை நோக்கிகளில் இது முதலாவது அல்ல. இதற்கு முன்பே பல தொலைநோக்கிகள் ஏவப்பட்டிருக்கின்றன. ஆனால் ஹப்பிள்தான் மிகப்பெரிய தொலைநோக்கி ஆகும். ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஒரு முக்கியமான வானியல் ஆராய்ச்சிக் கருவியாகும். இதன் மூலம் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

பிரபஞ்சம்
பிரபஞ்சம்Pixabay

பிரபஞ்சம் இன்னும் 10 பில்லியன் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்

சமீபத்தில் பிரபஞ்சம் விரிவடைவது குறித்து துல்லியமாக கணிக்கப்பட்டுள்ளது. ஹப்பிள் விண்வெளி தொலை நோக்கி மூலம் மூன்று பத்தாண்டுகள் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஆய்வு செய்த வானியலாளர்கள் குழு ஹப்பிளின் எதிர்பார்த்த திறனை விட எட்டு மடங்கு துல்லியமான கணிப்பை உறுதி செய்துள்ளனர்.

வேகமாக, உயரமாக, மேலும் விரிவடையும் பிரபஞ்சம்

எட்வின் ஹப்பிள் நமது சூரியக் குடும்பம் இருக்கும் விண்மீன் மண்டலமான பால்வீதி மண்டலத்துக்கு வெளியே பல விண்மீன் திரள்கள் அசையாமல் இருப்பதைக் கண்டறிந்தார். மேலும் ஒரு விண்மீன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு வேகமாக அது நம்மை விட்டு விலகிச் செல்கிறது என்பதையும் கண்டுபிடித்தார். இதுவே விண்வெளியின் விரிவாக்க வீதமாக மாறியது.

ஹப்பிள் இந்த விண்மீன் திரள்களை ஒரு மைல்கற்களாகவும், விண்வெளியின் குறிப்பான்களாகவும் வைத்து ஆய்வு செய்தார். இப்படித்தான் பிரபஞ்சத்தின் விரிவாக்க விகிதம் ஹப்பிள் மாறிலி என்று அழைக்கப்படுகிறது. இது பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பிற்குப் பிறகு பிரபஞ்சம் விரிவடைந்து வருவதைக் காட்டும் அலகு ஆகும்.

Solar System
Solar SystemPixabay

1990களில் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி ஏவப்பட்ட போது, பிரபஞ்சத்தின் விரிவாக்க விகிதம் நிச்சயமற்றதாக இருந்தது. அதன் வயது 8 அல்லது 20 பில்லியன் ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்று கருதப்பட்டது. பிரபஞ்சத்தின் விரிவாக்க விகிதம் ஹப்பிள் உண்மையில் பார்ப்பதை விட மெதுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

ஹப்பிள் சேகரித்த தரவுகளை வைத்துக் கணிப்பதில் வானியலாளர்கள் தவறாக இருப்பதற்கு ஒரு மில்லியனில் ஒரு வாய்ப்பு மட்டுமே இருக்கிறது என அமெரிக்க விண்வெளித்துறையான நாசா கூறுகிறது.

Universe
வானில் தெரிந்த பறக்கும் தட்டுகள் - விசாரணையில் இறங்கிய அமெரிக்க உளவுத் துறை | UFO

ஹப்பிள் தொலைநோக்கி என்ன கண்டுபிடித்தது?

தற்போதைய கண்டுபிடிப்புகள் "அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல்" இதழில் வெளியிடப்பட இருக்கிறது. இது ஹப்பிள் மாறிலியின் மிகப்பெரிய மற்றும் கடைசியான அப்டேட்டாக இருக்கும். இந்த புதிய முடிவுகள் இதற்கு முந்தைய விண்வெளிக் குறிப்பான்களின் மாதிரியை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதனால் வானியலாளர்கள் பிரபஞ்சம் விரிவடைவது குறித்து துல்லியமாகக் கணிக்க முடிகிறது.

big bang
big bangPixabay

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி புவியின் சுற்றுப்பாதையில் நுழைந்ததிலிருந்து விண்வெளியைக் கண்காணிப்பது நடைபெற்று வருகிறது. மேலும் 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஹப்பிள் தொலைநோக்கி மேம்படுத்தப்பட்டதோடு சக்தி வாய்ந்த புதிய கேமராக்கள் சேர்க்கப்பட்டன.

நோபல் பரிசு பெற்றவரும், விண்வெளி தொலைநோக்கி அறிவியல் கழகத்தில் பணியாற்றுபவருமான ஆடம் ரைஸ் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து பிரபஞ்சம் விரிவடைவது குறித்து ஆய்வு செய்கின்றனர். இவர்களது ஆய்வில் பிரபஞ்சம் விரிவடையும் விகிதம் சூப்பர் நோவா (SH0ES ) என்றும் இருண்ட ஆற்றலின் சமன்பாடு ஹெச்ஓ (H0) என்றும் அழைக்கப்படுகிறது.

"இதைச் செய்வதற்குத்தான் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி சிறந்த தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரி அளவை இரட்டிப்பாக்க ஹப்பிளின் வாழ்நாளில் இன்னும் 30 ஆண்டுகள் ஆகும் என்பதால், இது ஹப்பிளின் மகத்தான பணியாக இருக்கலாம்" என்று ரைஸ் கூறினார். ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் உள்ள 42 சூப்பர்நோவா மைல்போஸ்ட் குறிப்பான்களை ஆய்வு செய்தது.

Universe
அண்டத்தில் தெரியும் அமானுஷ்ய பொருள், அதிர்ச்சியில் விஞ்ஞானிகள் - Mysterious Object

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இந்த அவதானிப்புகளை மேலும் செம்மைப்படுத்தி, விரிவாக்க விகிதத்தின் இன்னும் துல்லியமான கணக்கீட்டை வழங்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி என்பது அகச்சிவப்பு வானியலை கவனிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆகும். இதுவரை விண்வெளியில் ஏவப்பட்ட மிக சக்திவாய்ந்த தொலைநோக்கி இதுவாகும். அதன் பெரிதும் மேம்படுத்தப்பட்ட அகச்சிவப்பு தெளிவுத்திறன் மற்றும் உணர்திறன் போன்றவை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பார்க்க இயலாத பழைய, தொலைதூர மற்றும் மங்கலான பொருட்களைக் காண அனுமதிக்கும்.

எனவே பிரபஞ்சம் விரிவடையும் விகிதத்தை இன்னும் துல்லியமாக வழங்குவதற்கு விஞ்ஞானிகள் உழைத்து வருகின்றனர்.

Universe
Space Advertising : விண்வெளியில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் : பூமிக்கு அடுத்த ஆபத்தா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com