வேற்று கிரகங்களில் நீர் இருப்பது உண்மை; ஏலியன்ஸ் இருப்பது உண்மையா? - அதிர வைக்கும் ஆய்வு

பூமியில் இருந்து ஒரு தொலைதூரக் கோளில் நீர் இருப்பதாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. அது ஒரு வாயு நிறைந்த கோள் என்றும், அதன் வளிமண்டலத்தில் நீர் இருப்பதையும் ஜேம்ஸ் வெப் கண்டுணர்ந்துள்ளது.
Space
SpaceTwitter
Published on

ஒரு தொலைதூரக் கோளில் நீர் இருக்கலாம் என்றால் ஏலியனைக் கண்டுபிடித்துவிட்டோமா ? சமீபத்தில் தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தன் மிட் இன்ஃப்ராரெட் சாதனத்தின் மூலம் "stellar nursery", "cosmic dance" படங்களை எடுத்து அனுப்பியது.

4.6 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவிலிருந்த நட்சத்திரக் கூட்டத்தைக் காட்டும் அப்படத்தில், 1,300 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பேரண்டத்தின் படத்தை அமெரிக்காவின் நாசா அமைப்பு இந்த உலகுக்குப் போட்டுக் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Space Ship
Space ShipTwitter

மனித குலம் இதுவரை உருவாக்கிய தொலைநோக்கிகளிலேயே மிக அதிநவீனமான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, மனித கண்கள் மற்றும் இதுவரை தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்க முடியாத இன்னும் பல ஆச்சரியத் தகவல்களை வெளிக்கொணரவுள்ளது.

அதற்கு முன், மற்றொரு ஆச்சரியமான விஷயத்தைக் கண்டுபிடித்து, மீண்டும் அறிவியல் சமூகத்தினரின் புருவத்தை உயரச் செய்துள்ளது ஜேம் வெப் தொலைநோக்கி.

space
spacetwitter

விண்வெளியில், பூமி போலத் தண்ணீர் உள்ள கோள்கள் இருக்கின்றனவா என விஞ்ஞானிகள் தொடர்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இதுவரை ஒரு உறுதியான பதில் கிடைக்கவில்லை.

பூமியில் இருந்து ஒரு தொலைதூரக் கோளில் நீர் இருப்பதாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. அது ஒரு வாயு நிறைந்த கோள் என்றும், அதன் வளிமண்டலத்தில் நீர் இருப்பதையும் ஜேம்ஸ் வெப் கண்டுணர்ந்துள்ளது.

Space
உயிர்வாழ தகுதியான மண்டலத்தில் Super-Earth கண்டுபிடிப்பு - விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்தபடி
Space
SpacePixabay

இதுவரை நம் பூமியில், சுமார் 5,000 புறக்கோள்கள் (Exoplanets) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் WASP-96 b என்கிற புறக்கோள், பூமியில் இருந்து சுமார் 1,150 ஒளியாண்டுகள் தொலைவில், ஃபீனிக்ஸ் என்கிற நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கிறது.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளை விட 1.2 மடங்கு கூடுதல் சுற்றளவும், பாதி நிறையும் கொண்டது இப்புறக்கோள். நம் சூரியனைச் சுற்றி வரும் எந்த ஒரு கோளை விடவும் மிகவும் உப்பலான கோள் WASP-96 b தான். WASP-96 b அதனுடைய மைய சூரியனை மிக அருகில் இருந்து சுற்றி வருகிறது. 3.5 பூமி நாளில் அக்கோள், தன் சூரியனை ஒரு முறை சுற்றி வந்துவிடும். எனவே இக்கோளின் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி ஃபேரன்ஷீட் இருக்கும்.

சரி, விண்வெளியில் ஒரு புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டால் ஏன் விஞ்ஞானிகள் முதலில் நீரைத் தேடுகிறார்கள்.

Space
'ஏலியன் சிக்னலாக இருக்கலாம்' : சர்ச்சையான சீன ஆய்வு - என்ன, எங்கே?
Space
SpaceCanva

மனித இனம் தோன்றியதிலிருந்து, அவன் வாழ்க்கை நீரைச் சார்ந்தே இருக்கிறது. எந்த ஒரு உயிரினத்துக்கும் நீர் அடிப்படை ஆதாரமாகிறது. எனவேதான் விஞ்ஞானிகள், விண்வெளியில் எந்த ஒரு கோள் அல்லது புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நீரை முதலில் தேடுகிறார்கள்.

அதோடு ஏதேனும் ஒரு கோளில் நீர் இருந்தால், அக்கோளில் நுண் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி என்றால் நாம் ஏலியனைக் கண்டுபிடித்துவிடோமா..? அதையும் ஜேம் வெப் விண்வெளி தொலைநோக்கியே உறுதி செய்யட்டுமே. பொறுத்திருப்போம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com