வானிலை முன் அறிவிப்பு ஏன் துல்லியமாக இல்லை? ரமணன் தந்த விளக்கம்!
வானிலை முன் அறிவிப்பு ஏன் துல்லியமாக இல்லை? ரமணன் தந்த விளக்கம்!Twitter

வானிலை முன் அறிவிப்பு ஏன் துல்லியமாக இல்லை? ரமணன் தந்த விளக்கம்!

நாம் பிரதானமாகப் பின்பற்றுவது GFS எனப்படும் அமெரிக்க கிளைமேட் மாடல், ECMWF எனப்படும் ஐரோப்பிய கிளைமேட் மாடல்களைத்தான். ஆனால், இந்த கிளைமேட் மாடல்கள் சொல்லும் தகவல்களை அப்படியே நம்ப முடியாது.
Published on

சமீபத்தில் சென்னை மற்றும் தென் தமிழகத்தில் அதிகப்படியான மழை பொழிந்து கடும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த பாதிப்புகளுக்கு ஆளுங்கட்சியினர் மீது குற்றம்சுமத்தப்பட்டது. ஆனால் அரசு, வானிலை ஆய்வு மையம் துல்லியமான தகவல்களைத் தரவில்லை. யாரும் எதிர்பாராத அளவு மழை பொழிந்துள்ளது எனக் கூறியிருக்கிறது.

வானிலை ஆய்வு மையம் துல்லியமான கருத்துக்களை தர தவறுவது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜூனியர் விகடன் இதழில் ரமணன் வழங்கிய நேர்காணலில் பேசியுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்ததாவது, "வானிலை ஆய்வைப் பொறுத்தவரை துல்லியம் என்றே பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் வானிலை என்பது தினம் தினம் அல்ல... நொடிக்கு நொடி மாறக்கூடியது. ஆனால், சில தரவுகள், முன் அனுபவங்கள் மூலம் அவற்றைக் கணிக்க முடியும். இதற்கென பல்வேறு கிளைமேட் மாடல்கள் இருக்கின்றன.

இவற்றில், நாம் பிரதானமாகப் பின்பற்றுவது GFS எனப்படும் அமெரிக்க கிளைமேட் மாடல், ECMWF எனப்படும் ஐரோப்பிய கிளைமேட் மாடல்களைத்தான். ஆனால், இந்த கிளைமேட் மாடல்கள் சொல்லும் தகவல்களை அப்படியே நம்ப முடியாது. அந்தத் தகவல்களோடு இஸ்ரோ தரும் தரவுகளையும் ஒப்பிட்டு, சிலவற்றைத் துணிச்சலாக நிராகரித்து, சிலவற்றைச் சொல்வதுதான்."

வானிலை முன் அறிவிப்பு ஏன் துல்லியமாக இல்லை? ரமணன் தந்த விளக்கம்!
இந்த மழை, வானிலை உங்களைச் சோர்வாக்குகிறதா? - இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com