வியாழன் கோளை போல உருவாகும் ஒரு கோள் - ஆச்சர்ய தகவல்

இந்த கோள் தனக்கு மையமான நட்சத்திரத்திலிருந்து 8.6 பில்லியன் மைல்கள் தூரத்தில் வட்டமாகச் சுழல்கிறது. அதாவது ப்ளூட்டோ கோளுக்கும் சூரியனுக்கும் உள்ள மைல்களைக் காட்டிலும் இருமடங்கு தூரம்.
Jupiter
JupiterNewsSense

சூரிய குடும்பத்திற்கு வெளியே வியாழன் கோளை போன்ற ஒரு கோள் வழக்கத்திற்கு மாறான முறையில் உருவாவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது கோள்கள் எப்படி உருவாகிறது என்ற நமது புரிதலை முற்றிலும் மாற்றும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

புதியதாக உருவாகியுள்ள இந்த கோளுக்கு என்று பெயரிட்டுள்ளனர். இது வியாழன் கோளைக் காட்டிலும் ஒன்பது மடங்கு பெரியது.

Jupiter
JupiterNewsSense

இந்த கோள் தனக்கு மையமான நட்சத்திரத்திலிருந்து 8.6 பில்லியன் மைல்கள் தூரத்தில் வட்டமாகச் சுழல்கிறது. அதாவது ப்ளூட்டோ கோளுக்கும் சூரியனுக்கும் உள்ள மைல்களைக் காட்டிலும் இருமடங்கு தூரம்.

அதுமட்டுமல்லாமல் பூமி சூரியனிலிருந்து சூழலும் தூரத்தைக் காட்டிலும் 93 மடங்கு அதிகம்.

இம்மாதிரியான மிகப்பெரிய கோள்கள் வழக்கமாகக் கோள்கள் உருவாகும் முறைக்கு மாற்றாக உருவாகிறது என்பதை தற்போதைய கண்டுபிடிப்பு காட்டுகிறது.

அதாவது வழக்கமாகக் கோள்கள் “core accretion” என்ற முறையால் தோன்றும். அதாவது துகள்கள் மோதி, உறைந்து படிப்படியான நடைமுறையில் கோள்களாக உருவாவது.

Jupiter
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

ஆனால் இந்த புதிய கோள் புவி ஈர்ப்பில் ஏற்படும் நிலையற்ற தன்மை காரணமாக உருவாகும் வாயுக்களால் உருவாகியுள்ளது.

இதை ஒரு கண்மூடித்தனமான நடைமுறை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வானியல் உலகில் இந்த கண்டுபிடிப்பு புதியதொரு படிப்பினையைத் தரும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Jupiter
உலகை நடுங்க வைத்த செங்கிஸ்கான் கல்லறை - ஒரு மர்ம வரலாறு!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com