அழகான பெற்றோரின் பிள்ளைகள் அதிக பணம் சம்பாதிக்கின்றனரா? - ஆய்வில் கண்டறிந்தது என்ன?

"கவர்ச்சியான நபர்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியிலும் தொழில்ரீதியிலும் வெற்றிகரமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது" என டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் ஹமெர்மேஷ் கூறுகிறார்.
அழகான பெற்றோரின் பிள்ளைகள் அதிக பணம் சம்பாதிக்கின்றனரா? - ஆய்வில் கண்டறிந்தது என்ன?
அழகான பெற்றோரின் பிள்ளைகள் அதிக பணம் சம்பாதிக்கின்றனரா? - ஆய்வில் கண்டறிந்தது என்ன?Representational (Canva)

கவர்ச்சியான தாய், தந்தையருக்கு பிறக்கும் குழந்தைகள் அதிகம் பணம் சம்பாதிப்பார்கள் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

'The Economic Impact of Heritable Physical Traits: Hot Parents, Rich Kid?'(பரம்பரை உடல் பண்புகளின் பொருளாதார தாக்கம்: கவர்ச்சியான பெற்றோருக்கு, பணக்கார குழந்தையா?) என்ற தலைப்பில் பெற்றோரின் உடல் கவர்ச்சி எப்படி பிள்ளைகளின் பொருளாதார வெற்றியை பாதிக்கிறது என ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முக்கிய ஆசிரியர் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் டேனியேல் ஹமெர்மேஷ்.

பரம்பரை பரம்பரையாக தொடரும் உடல் கவர்ச்சி பிள்ளைகளின் பொருளாதார வெற்றிக்கு உதவுவதைக் கண்டறிந்துள்ளனர். "கவர்ச்சியான நபர்கள் வாழ்க்கையில் பொருளாதார ரீதியிலும் தொழில்ரீதியிலும் வெற்றிகரமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது" என ஹமெர்மேஷ் கூறுகிறார்.

இந்த ஆய்வுக்காக அமெரிக்கா, சீனா நாடுகளில் உள்ள குடும்பங்களையும் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் குடும்பங்களையும் ஆய்வு செய்துள்ளனர்.

ஒரு சராசரி பெற்றோரின் பிள்ளைகளை விட கவர்ச்சியான பெற்றோரின் பிள்ளைகள் சராசரியாக ஆண்டுக்கு 2,300 டாலர் அதாவது 1,90,966 ரூபாய் அதிகமாக சம்பாதிக்கின்றனர் என ஆய்வு கூறுகிறது.

முன்னதாக ஹமெர்மேஷ் கவர்ச்சியான நபர்கள் வேலை வாய்ப்புத் துறையில் கொண்டிருக்கும் அதிக வாய்ப்புகளை ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகான பெற்றோரின் பிள்ளைகள் அதிக பணம் சம்பாதிக்கின்றனரா? - ஆய்வில் கண்டறிந்தது என்ன?
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை - குரல் கொடுத்த இயக்குநர் அமீர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com