இந்த ஆண்டுக்குள் ஏலியன்கள் பூமிக்கு வரும்: தேதியை கணித்த Time Traveller - எப்போது?

ஐந்து தேதிகளுக்கும் ஐந்து சம்பவங்கள் நடக்கும் என கணித்துள்ளார். அதில் அதிக கவனத்தை பெற்றுள்ளது ஏலியன்கள் குறித்து அவர் சொல்லியிருந்தது தான்
ஏலியன்ஸ்
ஏலியன்ஸ்News Sense
Published on

பூமியை ஏலியன்ஸ் நெருங்கும், தாக்கும், ஆட்கொள்ளும், அழித்துக் கூடவிடும் என பல கருத்துக்களை நாம் கேள்விப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். நம் விஞ்ஞானிகளும் ஏலியன்களுக்கும் பூமிக்குமான தொடர்பை குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ஏலியன்கள் பூமியில் கால் பதிக்கும் என டைம் டிராவலர் ஒருவர் கணித்திருக்கிறார்.

ஈனோ அலாரிக் என்பவர் ஒரு டிக் டோக் பயனர். இவர் ஒரு டைம் டிராவல்லர் என தன்னை தானே சொல்லிக்கொள்கிறார். 2671ஆம் ஆண்டில் இருந்து வருவதாக கூறும் அவர், ஐந்து தேதிகளை குறிப்பிட்டு அதை நினைவில் வைத்துக்கொள்ள சொல்கிறார்.

இந்த ஐந்து தேதிகளுக்கும் ஐந்து சம்பவங்கள் நடக்கும் என கணித்துள்ளார். அதில் அதிக கவனத்தை பெற்றுள்ளது ஏலியன்கள் குறித்து அவர் சொல்லியிருந்தது தான்

ஏலியன்ஸ்
ஏலியன் வீடியோவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காட்டிய அமெரிக்க ராணுவம்

அவரது கூற்றின்படி, ஏலியன்ஸ் டிசம்பர் 8 அன்று ஒரு ராட்சத விண்கல்லில் பூமியில் தரையிறங்கலாம். இதனால் பூமிக்கு ஆபத்து நேருமா? அல்லது அவை பூமியை பாதுகாக்க வருகின்றனவா என்பது குறித்த எந்த விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை. எனினும், டிசம்பர் 8 என குறிப்பிட்டு அவர் கூறியுள்ளது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேலும் அவர் கூறுகையில் நவம்பர் 30 அன்று ஜேம்ஸ் வெப் டெலிஸ்கோப் பூமிக்கு நிகரான ஒரு கிரகத்தை கண்டுபிடிக்கும் எனவும் அதன் மூலமாகவே ஏலியன்கள் பூமியை தொடர்புகொள்ளும் எனவும் அலாரிக் தெரிவித்தார்.

Aliens
Aliens Twitter

மூன்றாவது நிகழ்வு பிப்ரவரி 6, 2023 அன்று நடைபெறும் என்றும் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து மற்ற கேலக்சிகளை திறக்க ஒரு கருவியை கண்டுபிடிப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், மரியானா அகழியில் ஒரு பண்டைய இனம் கண்டுபிடிக்கப்படும் எனவும், அதே மார்ச் மாதம் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் 750 அடி மெகா சுனாமி தாக்கும் எனவும் கூறியுள்ளார்

ஏலியன்ஸ்
'ஏலியன் சிக்னலாக இருக்கலாம்' : சர்ச்சையான சீன ஆய்வு - என்ன, எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com