நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளது அமெரிக்கா.
ஏற்கெனவே சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கு விண்வெளிவீரர்கள் போய்வருகின்றனர் என்றாலும் நிலவுக்கு மனிதர்கள் செல்வது இதுதான் இரண்டாவது முறை என்கிறது அமெரிக்கா.
நம் பூமிக்கு வெளியில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமான விஷயமில்லையா?
அவர்கள் என்ன உணவுகளைச் சாப்பிடுகின்றனர் என்பதைப் பார்க்கலாம்.
விண்வெளிக்கு உணவுகளை எடுத்துச் சென்று சாப்பிடுவது சாதாரண விஷயமல்ல.
ஈர்ப்பு விசை இல்லாமையைத் தவிர பல பிரச்னைகளை அங்கு சமாளிக்க வேண்டும். உணவுகள் சேதமடையாமல் இருக்க வேண்டியது அவசியம்.
மறுபக்கம் ஈர்ப்பு விசை இல்லாமை காரணமாக உணவு வயிற்றுடன் ஒட்டாது. உணவருந்தும் வீரர்களுக்கு லேசாக சாப்பிட்டாலே வயிறு நிரம்பியதாக தோன்றும்.
அத்துடன் விண்வெளியில் எலும்பு தேய்மானம் அதிகமாக இருக்கும். மனிதர்கள் விரைவாக வயதாவதைப் போல உணர்வார்கள்.
இதனை கவனிக்காமல் விட்டால் மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது எலும்புகள் எளிதாக உடைய வாய்ப்புகள் இருக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, உளவியல் பிரச்னைகள் போன்ற பல சவால்களை கருத்தில் கொண்டு தான் விண்வெளிக்கு உணவுகள் அனுப்பப்படுகின்றன.
உணவுப்பொருட்கள் சிந்தாமல் இருக்கவும், கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும் விண்வெளிக்கு அனுப்பப்படும் உணவானது பிளாஸ்டிக் கவர், கேன்களில் அழுத்தமாக மூடிவைக்கப்படுகிறது.
மைக்ரோவேவ் மற்றும் வெப்பச்சலன ஓவன்களைப் பயன்படுத்தி உணவுகளை சூடாக்குகின்றனர். முதன்முதலாக மாவை பேக் செய்ய 2 மணி நேரம் ஆனதாம்.
கவர்களில் வரும் உணவுகள் துளியும் தண்ணீர் இல்லாமல் உறிஞ்சப்பட்டிருக்கும். அதனை ஹாட் பேக் கொண்டு சூடாக்குவர் அல்லது சூடான நீர் தெளித்து ஈரமாக்குவர்.
சூடான உணவை வைத்து சாப்பிட பெரும்பாலும் தட்டு எதையும் அவர்கள் உபயோகிக்க மாட்டாட்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தரையுடன் சேர்த்துப் பொருத்தப்பட்ட மேசையும் நாற்காலிகளும் இருக்கும். இதில் அமரும் போது சாதாரணமாக சாப்பிடுவது போலத் தோன்றும்.
அங்கு விண்வெளிக்கென தயாரிக்கப்பட்ட தட்டும் ஸ்பூன்களும் இருக்கும்.
பெரும்பாலும் உதிர்ந்து சிதறாத உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் உணவுத்துணுக்குகள் மிதக்கத் தொடங்கிவிடும்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இருப்பதனால் அவர்கள் பள்ளி குழந்தைகள் போல உணவை பகிர்ந்துகொள்வார்களாம்.
மிதக்கும் உணவுகளை வீசி வாயால் கேட்ச் பிடித்து சாப்பிடுவது வேடிக்கையாக இருக்குமாம்.
முதன்முதலாக விண்வெளிப்பயணங்களை மேற்கொண்ட போது எல்லா உணவுகளும் பேஸ்ட் வடிவில் மட்டுமே கிடைத்தன. முதன்முதலாக விண்வெளியில் சாப்பிடப்பட்ட உணவு பீஃப் ஈரல் பேஸ்ட் மற்றும் சாக்லேட் சாஸ் தான்.
இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் பல வகை உணவுகள் கிடைக்கின்றன.
உணவு கெட்டுப்போய்விடக் கூடாது மற்றும் பாக்டீரியாக்கள் உருவாகிவிடக் கூடாது ஆகிய இரண்டு விஷயங்களைக் கருத்திக்கொண்டு உணவுகள் அனுப்பப்படுகின்றன.
அவ்வப்போது பழங்களும் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படும். குளிரூட்டப்பட்டாலும் இவற்றை நீண்ட நாட்களுக்கு வைத்து சாப்பிட முடியாது.
ஊட்டச்சத்து என்பதை விட, பழங்கள் உளவியல் ரீதியில் விண்வெளி வீரர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறதாம்.
பூமியிலிருந்து கிளம்பும்போதே விண்வெளி வீரர்கள் தங்களுடன் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு செல்வார்கள். மீதி தண்ணீர் மறு சுழற்சி மூலமாக கிடைக்கும்.
விண்கலத்தின் எரிபொருள் செல்களில் இருந்து வரும் கழிவு நீர், ஈரப்பதம், சிறுநீர் ஆகியவை தண்ணீருக்கான மூல ஆதாரங்கள்.
இது உங்களுக்கு அருவருப்பாகத் தோன்றலாம். நம்மில் பெரும்பாலானவர்கள் பூமியில் அருந்தும் தண்ணீரைவிட இங்கே வடிகட்டி வழங்கப்படும் தண்ணீர் தூய்மையானது என்கிறது நாசா.
விண்வெளியில் நீர்ச்சத்தை தக்கவைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust