புவியின் வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலக நாடுகள் கூடி, புவியின் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதை எப்படிச் சாத்தியப்படுத்து எனவும் தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள்.
அறிவியல் அறிஞர்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை, புவி வெப்ப மயமாதலைத் தடுக்க பலரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த வரிசையில் விமான நிலையங்கள் டாக்ஸிபாட் என்கிற வாகனத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில், கடந்த மே 2019 முதல் டாக்ஸிபாட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே டாக்ஸிபாட்கள் பயன்படுத்தப்படும் வெகு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அதீத ரோபாடிக் வசதி கொண்ட பிரத்தியேக காரியங்களைச் செய்யக் கூடிய வாகனம்தான் இந்த டாக்ஸிபாட்கள். இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் என்கிற நிறுவனம்தான் இந்த டாக்ஸிபாட்களை உருவாக்கின. இந்த ரக வாகனங்கள், விமானத்தைக் கட்டி இழுக்காமல், விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து, ஓடுதளத்துக்குக் கொண்டு செல்ல உதவும்.
டாக்ஸிபாட்கள் சுமார் 800 குதிரைத் திறன் கொண்ட ஹைபிரிட் மின்சார இன்ஜின்களைக் கொண்டது. இதைவிட இந்த வாகனங்களில் ஆச்சரியத்தைக் கிளப்பும் வசதி என்னவென்றால், விமானத்தை இயக்கும் விமானி, தன் காக்பிட் அறையில் அமர்ந்து கொண்டே, ஒரு சில உதவிகளோடு இந்த டாக்ஸிபாட் வாகனத்தை இயக்க முடியும்.
முன்பே கூறியது போல, பயணிகளோடு பறக்கத் தயாராக உள்ள விமானத்தை ஓடுதளத்துக்கு அழைத்துச் செல்வது மற்றும் ஓடுதளத்தில் தரையிறங்கிய விமானத்தை மீண்டும் ஹேங்கர் என்றழைக்கப்படும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்துக்கு அழைத்து வருவது போன்ற பணிகளையே பிரதானமாகச் செய்கிறது இந்த டாக்ஸிபாட்கள்.
2021ம் ஆண்டு கணக்குப்படி, டெல்லி விமான நிலையத்தில் மூன்று விமானச் சேவை நிறுவனங்கள், இரண்டு டாக்ஸிபாட்களைப் பயன்படுத்தி வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 15ஆக உயரலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுவாகவே விமானம் நிறுத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து, ஓடுதளத்துக்கு வருவதற்குக் கூட, விமானத்தில் உள்ள எரிபொருளே பயன்படுத்தப்படும். இதை டாக்ஸியிங் (Taxiing) என்பர். இப்போது டாக்ஸிபாட்கள் பயன்படுத்தப்படுவதால், விமான நிலையங்களில் 2.14 லட்சம் லிட்டர் விமான எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டு 532 டன் கார்பன் உமிழ்வைத் தடுக்கப்பட்டுள்ளது.
டாக்ஸிபாட்கள் பயன்படுத்தப்படுவதால் மற்ற அந்நிய பொருட்களால் விமானத்தில் சேதம் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைந்துள்ளது. அதே போல விமானம் டாக்ஸியிங் செய்யப்படும் போது இரைச்சல் அதிகமாக இருக்கும்.
அதுவும் டாக்ஸிபாட்டால் கணிசமாகக் குறைந்துள்ளது. டாக்ஸிபாட்கள் விரைவாக விமானங்களை ஓடுதளங்களுக்கு அழைத்துச் செல்வது மற்றும் ஓடுதளத்திலிருந்து விரைவாக தங்களின் இருப்பிடங்களுக்கு அழைத்து வருவதால், விமான போக்குவரத்து இயக்கமே வேகமடைந்திருப்பதாக டெல்லி சர்வதேச விமான நிலையம் முன்பு ஒரு முறை கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu